தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

About me

வேலூர் மாநகரம் என் தாய் மண். 

Image result for vellore

நான் வேலூர்  மாவட்டத்தில் உள்ள‌ காட்பாடி அருகில் உள்ள மெட்டுக்குளம்  என்னும் ஊரில் பிறந்தவன்.எனது பள்ளிப் படிப்பை புனித சவேரியார் பள்ளியிலும், காந்திநகர் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரையும் படித்தேன். கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல நான் எனது தொழில்நுட்ப படிப்பை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக், அடுக்கம்பாறை படித்தேன். அதன் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் கோயம்புத்தூரில் கம்பெனியில் பணி செய்து 1998 வேலூர் பொறியியல் கல்லூரி மின் ஆய்வக பணியாளராக சேர்ந்து பணியாற்றி வந்தேன். என்னுடைய படிப்பை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலே 2005யில்  BTECH- ECE  படிப்பை முடித்தேன். 2010தில்  முதுகலை பட்டமும் (M.E) பெற்றேன். சென்னையில் உள்ள பல முன்னணி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளேன் . எண்ணிறைந்த மாணவர்கள் கடந்த 20 வருடங்களாக, அவர்களோடு பழகி, அவர்களோடு பயணித்திருக்கிறேன் என்ற முறையில் இந்த ஒரு முயற்சியை மேற்கொண்டு நடத்தி வருகிறேன். இப்போது சென்னையில்  வசிக்கிறேன்.


| Leave a Comment |