“கோபத்துக்குக் கொள்ளி வைப்போம். ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !”
‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.
ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.
‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால் கூட ‘எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. ‘வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.
‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.
ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.
Leave a Comment Read More
Leave a Comment Read More
உதவ யாருமில்லை, ஒளி எங்கே? மூலையில் தெரிய
தட்டுத் தடுமாறி, பற்றுக் கம்பை பிடிக்கும் கொடியாய்
உருண்டு எழுந்து , நிமிர்ந்து நடக்கையில்
சிறு ஒளி பிரகாசமாய் தெரிய தன்னம்பிக்கை வேர்
ஆழமாய் ஊன்ற வெற்றி மலர்ந்தது.
தளராத முயற்சியும் பொறுமையும் தன்னம்பிக்கை ஏற்பட முதல் படி என்று சொன்னால் கூட வியப்பேதும் இல்லை.எதையும் இருந்த இடத்தில் இருந்தே பெற்று விடலாம் என்றால் அது சோம்பேறித்தனம் என்று கூட கூறலாம்.
நகரில் ஒரு மிகப்பெரிய பிரமுகர் இருந்தார் .பொதுவாக உதவி என்று யார் சென்றாலும் அவர் வெறும் கையுடன் அனுப்பியதாக தகவல் இல்லை.ஆனால் அவரை நேரில் சந்திப்பது அவ்வளவு எளிதில் முடிவதில்லை.ஒரு சமயம் இரண்டு பேர் அவரை வெவ்வேறு கால கட்டங்களில் சந்திக்க முயற்சி மேற்கொண்டனர்.முதலில் சென்றவர் பல முறை முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை .ஏதாவது காரணத்தால் இவர் எப்போது சென்றாலும் அவரை சந்திக்க முடியாத நிலையே தொடர்ந்தது.
இதை அறிந்த அவரது நண்பர்கள் சிலர் அவர் வேண்டும் என்றே உன்னை சந்திக்க வில்லை .அவரை சந்தித்து உதவி பெறுவது என்பது வீண் வேலை என்று அவரது நம்பிக்கையை தகர்த்து விட்டனர்.நண்பர்களின் போதனை பலித்தது.,அவரை சந்தித்தால் உதவி கிடைக்கும் என்று எண்ணியவர் ,இனி அவரைப்பார்த்து அவர் எங்கே நமக்கு உதவப் போகிறார் என்ற அவ நம்பிக்கை ஏற்பட்டவுடன் ,தானக அவரது நடை தளர்ந்தது ,நம்பிக்கை எனும் தீப ஒளி குறையத் தொடங்கியது.அதன் பின்னர் அவர் தனது முயற்சியில் இருந்து பின் வாங்கி விட்டார்.
அதே சமயத்தில் இன்னொருவர் அந்த பிரமுகரை சந்தித்து அவரிடம் உதவி பெற்று விடவேண்டும் என்று தீவிர எண்ணத்துடன் நம்பிக்கையுட அவரை தேடிச்சென்றார்.ஒவ்வொரு தடவையும் பிரமுகர் பல வேலையாக வெளியே சென்று விடுவார்.இவரால் சந்திக்க முடியவில்லை .ஒருமுறை இவர் போவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் அவர் அந்த இடத்தை விட்டு சென்றதாக தெரியவந்தது.இருந்தாலும் இவருக்கு மனஉறுதி குறையவில்லை.அவர் பெரிய பிரமுகர் அவருக்கு பல அலுவல்கள் இருக்கும் நம்மைவிட பல வேலைகள் அவருக்கு நிறைந்து இருக்கும் நமக்காக அவர் காத்திருக்க மாட்டார்.நாம் தான் அவரை காத்திருந்து எப்படியாவது சந்திக்க வேண்டும் .அதற்கு எத்தனை தடவை வந்தாலும் சரி ,அவரை சந்தித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக தமது நம்பிக்கையில் சஞ்சலம் இன்றி காணப்பட்டார்.
ஒவ்வொரு முறையும் செல்லும் பொது அவரை முதலில் சந்திக்க சென்றபோது இருந்த ஆர்வத்துடனும் ,நம்பிக்கையுடனும் இருந்தார்.ஒரு நாள் அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.அவரை சந்தித்து அதற்கான நல்ல பலனை அவர் பெற்றுக்கொண்டார்.வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் தன்னம்பிக்கை தான் அதில் சோர்வு ஏற்பட்டால் எதிலும் வெற்றி பெற முடியாது.சிகரத்தின் உச்சியை எட்டவேண்டுமானால் கடினமான கற்களையும் ,முட்களையும் மிதித்து தான் செல்லவேண்டும் .அதற்கு மனத்தின் வலிமை மிகுந்த ஆயுதமாக தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.நாம் சிகரத்தை தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதையே லட்சியத்தை எளிதில் அட்டைய வைக்கும்.
முத்துக்குளிப்பவன் ஆழ் கடலில் மூச்சை அடக்கிக்கொண்டு செல்லவேண்டும்.அவ்வாறு செல்பவர்கள் சிறந்த பயிற்சி பெற்று இருப்பார்கள்.இருந்த போதிலும் அவர்கள் அசாத்தியமான தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.அதே போல் தான் கடலின் அலைகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களும் மிக தைரியமான தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.அதனால் தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் போராடி வெற்றி பெறுகிறார்கள்.
Leave a Comment Read More
இளவேனிலின் மடியில் அழுதபடி படுத்திருக்கும் பத்மஜாவின் தலை கேசத்தை கோதி விட்டான்.இளவேனில், வயது, 28, தலித் வாலிபன். தனியார் கல்லுாரியில் துணை பேராசிரியராக பணிபுரிபவன். திராவிட நிறம். சுருள் தலைகேசம், பாரதி மீசை.பத்மஜா, 22 வயது, உயர் ஜாதி பெண். இளவேனில் ஆசிரியராக பணிபுரியும் கல்லுாரியில், இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படிப்பவள்.
தமிழை நேசிக்கும் இருவருக்குள்ளும் காதல் பூத்தது.பத்மஜாவின் காதல் தெரிந்து, வீட்டில் பூகம்பம் பூத்தது.பத்மஜாவை கல்லுாரிக்கு அனுப்பாமல், வீட்டினுள் பூட்டி வைத்தனர். ஒரு நள்ளிரவில், இளவேனிலும், பத்மஜாவும் வீட்டை விட்டு வெளியேறி, இளவேனிலின் நண்பன் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.இளவேனிலும் - பத்மஜாவும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். வாடகைக்கு வீடு தேடி, காதல் ஜோடி தெருத் தெருவாய் அலைந்தது. கடைசியில், சண்முகசுந்தரம் இரக்கப்பட்டு, தன் மாடி போர்ஷனை கொடுத்தார்.
விடிந்தால் தீபாவளி...''வேனில்... நாம் இருவரும், பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்திருந்தால், தலை தீபாவளி கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டில் மூழ்கி இருப்போம். ஊரெங்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம். எல்லார் முகங்களிலும் குதுாகலம், கும்மாளம், கொண்டாட்டம். நாம் மட்டும் அழுது வீங்கிய முகத்துடன் துரதிர்ஷ்டசாலிகளா?''கதவு தட்டும் சத்தம் கேட்டது.பத்மஜாவும் - இளவேனிலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கண்ணீரை துடைத்துக் கொண்டாள், பத்மஜா.யாராக இருக்கும்... என் பெற்றோர் யாராவது அடியாட்களை அனுப்பி இருக்கின்றனரா அல்லது கதவு தட்டப்படுவது போல ஒரு பிரமையா?மீண்டும் கதவு தட்டப்பட்டது.
ஒரு கட்டையை பாதுகாப்புக்கு எடுத்துக் கொண்டான் இளவேனில். மெதுவாக, பூனை பாதம் வைத்து கதவுக்கு நடந்தான். கதவை சரேலென திறந்து, கட்டையை ஓங்கினான்.''தம்பி... அடிச்சிடாதே... வயசானவங்க, தாங்க மாட்டோம்... உங்களை பார்க்க, 'ஹவுஸ் ஓனர்' சண்முகசுந்தரம், இதே தெருவில் குடியிருக்கும் முஸ்லிம் பெரியவர் ஜிப்ரீல், கிறிஸ்தவ பெரியவர் மார்ட்டின் மூவரும் வந்திருக்கிறோம்.''''என்னை மன்னிச்சிடுங்க... யாரோன்னு நினைச்சிட்டேன்... உள்ளே வாங்க!''மூவரும் உள்ளே வந்தனர்.''எப்படிம்மா இருக்க பத்மஜா?'' என்றார் சண்முகசுந்தரம்.சிரிக்க முயன்று தோற்றாள், பத்மஜா. அழுகை சீறிக்கொண்டு வந்தது.
''ஒத்த குரங்கா, தனி மரமா நாங்க ரெண்டு பேரும் நிக்கிறோம்... தலை தீபாவளி, எங்களுக்கு எட்டாக்கனியா ஆகிப்போச்சு,'' என்று விசும்பினாள்.''பத்மஜா... உங்க வீட்டுல இருந்து உனக்கு போன் வந்துச்சா?''''ஆமா... உன் மேல, எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. மனசை தேத்திக்கிட்டு உன் புருஷனை கூப்பிடுறோம்... இப்ப, நீ மட்டும் கிளம்பி வா, தீபாவளி கொண்டாடிட்டு போலாம்... உன்னால் தனியா வர முடியாதுன்னா, காரை அனுப்பவான்னு என் அப்பா கேக்கறாரு.''''நம்பாதே... உன் அப்பா பேசுறது எல்லாம் பசப்பு வார்த்தை. அவர் வார்த்தையை நம்பி, நீ உன் வீட்டுக்கு போனா, உன்னை ஆணவ கொலை பண்ணிடுவாங்க... உன் கைபேசி, 'சிம்'மை துாக்கிப் போடு... இரு தரப்பு சொந்த பந்தங்கள் கண் உறுத்தற மாதிரி அவங்க முன்னாடி ஊர் சுத்தாதீங்க... பெற்றோர் சார்பா, துாது வந்தால், திருப்பி அனுப்புங்க... உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எந்த கருத்து வேற்றுமையும் ஏற்படாம பார்த்துக்கங்க... அஞ்சு வருஷம் தலைமறைவு வாழ்க்கை வாழுங்க,'' என்றார், சண்முகசுந்தரம்.
''இந்த தெரு மக்களை மீறி, யாரும் வந்து உங்களை எதுவும் பண்ணிட முடியாது. நாங்க மூவரும், உங்களை காக்கும் தெய்வங்கள்!''இளவேனிலை கட்டியணைத்து, ''யேசப்பா துணை!'' ஆறுதல் கூறினார், மார்ட்டின்.சண்முகசுந்தரம், பத்மஜாவின் தலை கேசத்தை கோதி விட்டார். ''தனியா நிற்கிறோம்ன்னு அழாத... உன் அப்பா ஸ்தானத்துல நான் இருக்கேன்... விஜயலட்சுமி எனக்கு இளைய மகள்ன்னா, நீ எனக்கு மூத்த மகள். நீ எனக்கு மகள் என்றால், இளவேனில் எனக்கு மருமகன். நீங்க இருவரும் என் வீட்டுக்கு வந்து தலை தீபாவளி கொண்டாடுங்க... தலை தீபாவளி தரும் அனைத்து மகிழ்ச்சியையும், தகப்பன் ஸ்தானத்தில் நின்று நான் அள்ளித் தருகிறேன். இது, வெறும் உதட்டில் இருந்து வரும் வார்த்தைகளல்ல... என் இதயத்திலிருந்து கிளம்பும் சத்திய வார்த்தைகள்!''''நன்றி அப்பா!'' சண்முகசுந்தரத்தின் தோளில் சாய்ந்தாள்.முதுகில் தட்டிக் கொடுத்தார்.''ரொம்ப சந்தோஷம் மாமா,'' மிழற்றினான், இளவேனில்.''அம்மா பத்மஜா... தம்பி இளவேனில்... தலை தீபாவளிய சண்முகசுந்தரம் வீட்டுல கொண்டாடுங்க... முதல் கிறிஸ்துமசை, வான் கோழி பிரியாணியோட எங்க வீட்டுல கொண்டாடுங்க... நீங்க விரும்பினா நள்ளிரவு பிரார்த்தனையில் கலந்துகொள்ள தேவாலயம் வரலாம்... கிறிஸ்துமஸ் தாத்தா, உங்கள் இருவருக்கும் ஏராளமான பரிசு பொதிகளை வாரி வழங்குவார்!''பத்மஜாவும், இளவேனிலும் முகம் மலர்ந்தனர்.
சோகம் தலைதெறிக்க ஓடி மறைந்தது.''பத்மஜா - இளவேனில் பச்சா... நீங்க ரெண்டு பேரும், எங்க வீட்டோட இணைஞ்சு ரம்ஜான் கொண்டாடலாம். நோன்புகள் நோற்க விரும்பினால் நீங்க நோற்கலாம். விசேஷ கூட்டுத் தொழுகையில், உங்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்வேன்!''''மும் மதமும் கூடி, ஆறுதல், தேறுதல் சொல்றது, எங்களுக்கு யானை பலத்தை தருது,'' ஆனந்த கண்ணீர் வடித்தான், இளவேனில்.''இருவரும், தரை தளத்தில் இருக்கும் என் வீட்டுக்கு வாங்க!'' இருவரையும் அழைத்துச் சென்றார், சண்முகசுந்தரம்.சண்முகசுந்தரத்தின், 20 வயது மகள் விஜயலட்சுமி நின்றிருந்தாள். அவள், சென்னை கல்லுாரி விடுதியில் தங்கி, பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கிறாள். தீபாவளி கொண்டாட, சொந்த ஊருக்கு வந்திருக்கிறாள்.''வாங்கக்கா... வாங்க மாமா!'' வாய் நிறைய வரவேற்றாள், விஜயலட்சுமி.கிண்ணத்தில், நல்லெண்ணெயும், சிகைக்காய் துாள் பொட்டலமும் நீட்டினார் சண்முகசுந்தரம்.வாங்கினான் இளவேனில்.''வரிசை வைக்கிறேன்... வாங்கிக்கங்க,'' பட்டுப் புடவை, ஜாக்கெட், பாவாடை, பட்டு வேட்டி, பட்டு சட்டை, வெற்றிலை, பாக்கு, 1,000 ரூபாய் ரொக்கம், பட்டாசு மற்றும் இனிப்பு, 'கிப்ட் பேக்'குகள் அனைத்தையும் ஒரு தாம்பாளத்தில் வைத்து, சண்முகசுந்தரமும் அவரது மனைவியும் நீட்டினர்.
இருவரின் கால்களிலும் விழுந்து, ஆசிர்வாதம் பெற்றனர், இளவேனில் - பத்மஜா ஜோடி.''பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க மக்களே!''''இன்று போல் என்றும் வாழ்க!'' குதுாகலித்தாள் விஜயலட்சுமி.''அல்லே லுாயா!'' என, உணர்ச்சி பெருக்கால் கூவினார், மார்ட்டின்.''எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!'' இரு கைகளை வானத்துக்கு உயர்த்தினார், ஜிப்ரீல்.இளவேனிலும் - பத்மஜாவும், குளித்து, புத்தாடை உடுத்தி, கம்பி மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். சங்கு சக்கரம், புஸ்வாணம், 1,000 வாலா வெடி கொளுத்தினர்.காலையில், தீபாவளிக்காக தயாரிக்கப்பட்ட டிபன் சாப்பிட்டனர்.தெரு மக்கள், ஒவ்வொருவராய் வந்து புதுமண தம்பதியை வாழ்த்தினர். அவரவர் வீடுகளில் தயாரித்த இனிப்பு வகைகளை ஊட்டி விட்டனர்.தீபாவளி கொண்டாட்டம் தொடர்ந்தது.மதியம், 3:00 மணி.சற்றே கண்ணயர்ந்தார் சண்முகசுந்தரம். காலடி அரவம் கேட்டு, கண்களை திறந்தார்.விஜயலட்சுமி நின்றிருந்தாள்.''என்னம்மா விஜி?''''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.''''சொல்லும்மா.''''காதல்ன்னா உங்களுக்கு அறவே பிடிக்காதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா, நீங்க காதல் ஜோடிக்கு, வாடகைக்கு இருக்க வீடு குடுத்திருக்கீங்க... தலை தீபாவளி கொண்டாட, அவங்களுக்கு ஏற்பாடும் செஞ்சு குடுத்திருக்கீங்க... எப்படிடா சொல்றதுன்னு பயந்துகிட்டு இருந்த எனக்கு தைரியம் வந்துருச்சு!''''என்னம்மா... புது குண்டை துாக்கிப் போடுற?''''நான், என் வகுப்பு தோழனை காதலிக்கிறேன்... எங்க காதலுக்கு பச்சைக் கொடி காட்டுங்கப்பா,'' கைகளை பிடித்த மகளின் கைகளை உதறி தள்ளினார்.
''என்ன உளர்ற... என் மகள் ஒருநாளும் காதலிக்க மாட்டா.''''ஐம்புலன்களையும் பூட்டியா உங்க மகளை காலேஜுக்கு அனுப்பிச்சீங்க... மத்த வயது வந்த பெண்களுக்கு என்ன ஆசாபாசம் இருக்குமோ, அதுதானே எனக்கும் இருக்கும்.''''ஒரு நாளும் இதை நான் அனுமதிக்க மாட்டேன்!'' ஓடி, அரிவாளை எடுத்து திரும்பினார். ''காலேஜுக்குள்ள புகுந்த உடனே காதலிக்க தோணுதோ... அவன் என்ன ஆளுகளோ... உன்னை, கண்டம் துண்டமா வெட்டி போட்டுர்றேன்.''சண்முகசுந்தரத்தின் மனைவி ஓடி வந்தாள்.''ஊரார் காதலிச்சா, விசில் அடிச்சு வரவேற்கறீங்க... உங்க மக காதலிச்சா, கசாப்பு போட துடிக்கறீங்க... இப்படித்தான் உலகத்துல எல்லா தகப்பன்மாரும் இருக்கீங்க... உங்களுக்குள்ள இருக்கற மிருகத்தை தட்டி எழுப்ப தான் நானும், உங்க மகளும் ஒரு நாடகம் போட்டோம்... விஜயலட்சுமி யாரையும் காதலிக்கவில்லை!''வெட்கி தலை குனிந்தார் சண்முகசுந்தரம்.''சாரி... கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்!''''அப்பா... இப்ப நான் யாரையும் காதலிக்கல... பின்னாளில் யாரையும் காதலிக்க மாட்டேன்னு என்னால் உத்தரவாதம் தர முடியாது.
அப்படி நான் யாரையும் காதலிச்சா, உணர்ச்சிபூர்வமா முடிவெடுக்காம, அறிவுப்பூர்வமாக முடிவெடுங்க.''''உனக்கு தகுதியானவன், சம நிலையில் வைத்து அங்கீகரிப்பவன், ஆயுளுக்கும் உன்னை வைத்து பாதுகாப்பவன், எந்த மதத்தை சேர்ந்தனாய் இருந்தாலும், நீ காதலித்தால் உலக நிச்சயம் திருமணம் செய்து வைப்பேன்.''''தலை தீபாவளி கொண்டாட்டத்தில், மகளின் எதிர்கால காதலுக்கு இப்போதே பச்சை கொடி காட்டிய தந்தையின் மன பக்குவம் அடக்கம்,'' என்றனர், இளவேனிலும் - பத்மஜாவும்.''ஹாப்பி ஹாப்பி தீபாவளி!'' என்றனர், அனைவரும் பிரபஞ்சத்தின் உச்சியை தொடரும் கோரஸில்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்
Leave a Comment Read More
அமெரிக்கரின் வெற்றி!
அமெரிக்கர்கள் ஏன் வெற்றி பெறுகிறார்கள் தெரியுமா? AMERICAN என்ற வார்த்தை ICAN எனமுடிவதால் அதாவது I CAN என்னால் முடியும் என முடிகிறதே, அதனால்தான்!
தன்னம்பிக்கையை வெளிக்கொணருங்கள்!
சில வருடங்களுக்கு முன்னால் ஸ்பெயின் தேசத்தில் பயங்கரமான சூறாவளி ஒன்று வீசியது.விஸிகோத்தை ஆண்ட மன்னன் ஸ்விந்திலா என்பவனின் மகுடத்தை அந்தச் சூறாவளி வெளிக்கொணர்ந்தது.
1200 வருடங்கள் பூமிக்கடியில் புதைந்திருந்த மகுடம் அது. இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துவது எதை?உங்கள் தன்னம்பிக்கை மகுடம் கூட உங்களுக்குள்ளேயே அடியில் புதைந்திருக்கிறது. அதைவெளிக்கொணருங்கள் என்பதைத்தான்! இந்தத் தன்னம்பிக்கை வந்தவுடன் உங்கள் தோற்றம் மிடுக்குறும்.பார்வை ஒளி பெறும். பேச்சு வலிமை பெறும். உங்கள் குறிக்கோளை அடைய உங்களால் இயலாது என்றுநீங்கள் செய்யப்படும் ஒரு செயலைச் சிறிதளவு, தைரியமாகச் செய்து பாருங்கள். வெற்றி சிறிதளவுபெற்றாலும் உங்கள் தன்னம்பிக்கை வலிமை பெறும். அதாவது நீங்களே உங்களை சோதனைக்குள்ளாக்கஆயத்தமாகுங்கள்.
வெற்றி பெறுபவரின் முக்கியமான குணாதிசயங்களுள் ஒன்று இதுதான். அவர்கள் தங்களைத் தாங்களேதொடர்ந்து மிஞ்சிய வண்ணம் நடப்பார்கள். என்னால் முடியும் என்று எண்ணி, நினைப்பதை அடைய,தான் நினைப்பதைவிட அதிகமாகச் செயல் புரிந்து கொண்டே இருப்பதே அவர்களது மனப்போக்காகும்
86 வயது அறிஞரின் கூற்று!
கார்டினல் கிப்பன்ஸ் என்ற முதுபெரும் பேரறிஞர் தாம் இறந்து போவதற்கு முன்பாகக் கூறியவார்த்தைகள் இவை:- நான் 86 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கானவர்கள்வெற்றியின் முனையைத் தொட்டதைக் கண்டிருக்கிறேன். வெற்றியடைவதற்குத் தேவையானகுணங்களில் தலையாயது நம்பிக்கைதான்! இதையே தான் எமர்ஸனும் கூறுகிறார்.
தன்னம்பிக்கையே வெற்றியின் அடிப்படை ரகசியம் என்று அவர் எழுதிய Self Reliance (தன்னம்பிக்கை) என்ற கட்டுரையை உடனே தேடிப்பிடித்து ஒரு முறை படியுங்கள். அதில் ஒரு பகுதிஇதோ:-
நம்பு, நினை, முயல்!
நண்பா! நீ உன்னையே நம்பு, நீ மகாவலிமையும், மனோதிடமும், தன் உறுதியும் படைத்தவன் என்பதுஉன் சிந்தனையில் எப்போதும் ஊறிக்கிடக்கட்டும்.
அந்தத் தன்னம்பிக்கை உன்னுள் இருக்கும்வரை, எல்லா உள்ளங்களும் உன் விழியை நாடும். ஆண்டவன்உன்னை எங்கு வைக்கிறாரோ அங்கிரு, அந்த இடத்தில் அமைதியாக இருந்து பணியாற்று.
அவன் ஆணையை ஒரு போதும் மீறாதே, உன்னுடன் ஏக காலத்தில் வசிப்போரிடம் நட்புறவை வளர்,அவர் தம் கால நிகழ்ச்சிகளில் கலந்து கொள், அனுபூதி பெற்ற மகான்களின் போக்கை மனப்பூர்வமாகஏற்றுக் கொள். அவர்கள் தேவ தூதர்கள். கடவுளின் திருவடிகளை, குழந்தை உள்ளத்துடன் வீழ்ந்து துதித்தமகான்கள். அவர்கள் எய்தியுள்ள பக்குவ நிலையைப் பார்த்தால் அவர்கள் ஆண்டவன் அருளால் தூண்டப்பெற்று வாழ்வது விளங்கும்.
மனோ, வாக்கு, காயசித்தி பெற்ற மகாத்மாக்கள் அவதார புருஷர்கள் என்றே நமக்குத் தோன்றும்.அவ்வனுபூதி செல்வர்களைப் போன்று நாமும் ஆக முடியும். அதற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது? நாம்குழந்தைகள் அல்லோம், நாமும் ஆண் பிள்ளைகளே. வீர மைந்தர்களே
தன்னம்பிக்கை வளர வழி!
எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடையத் தீவிரமாகவும்,முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன். எண்ணும் எண்ணங்களே உடலின்வெளித் தோற்றத்திலும் செய்கையிலும் மிளிரும் என்பதை அறிவேன். ஆகவே நான் வெற்றி அடைந்ததோற்றத்தை மனக்கண் முன்னால் தினமும் முடிந்தவரை பார்ப்பேன்.
வெற்றி பெறத் தேவைப்படும் அனைத்துக் குணங்களையும் மனதில் ஒரு பத்து நிமிடம் தினம்தோறும்நினைத்து அதை அடையப் பாடுபடுவேன். நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்றவழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன் நேர்மையான வழியிலேயே நிச்சயம்வெற்றியைப் பெறுவேன். வெற்றி நிச்சயம் என்பது எனக்கேயாகும் இந்தத் தன்னம்பிக்கைச் சிந்தனையைவிடாது காலை எழுந்தவுடன் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள்.
வெற்றியை அடைய இரண்டாவது படி இதுவே!
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
வகுப்பறையில் நடக்கும் சாதிய பாகுபாடு குறித்து அந்த இளைஞர்கள் நெகிழ்வாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீளமான பெரிய குழாயிலிருந்து புறப்பட்ட இசையானது அந்த அரங்கை மெல்ல ஆக்கிரமிக்கிறது. அந்த கலைஞர்களின் நடிப்புக்கு இந்த இசை மெல்ல கனம் சேர்க்கிறது. இசையும் நடிப்பும் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை விதைக்கிறது. வெளி எங்கும் விசும்பல் சத்தம் மெல்ல கேட்கிறது.
இது நடந்தது 'கண்காணிப்பின் இருள்வெளி' நாடக நிகழ்வில்.
அனைவரின் மனதையும் நெகிழ செய்த இசை செவ்விந்தியர்களுடையது. அந்த இசை இசைக்கப்பட்ட வாத்தியம் ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களான அபாரஜின்களுடையது. அந்த இசையை இசைத்தவர் தஞ்சையை சேர்ந்த சாரு.
'போர்க் களத்திலிருந்து இசை களத்திற்கு'
தஞ்சாவூர் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சாரு. இந்திய பாதுகாப்புத் துறை பணியில் சேர வேண்டும்மென்று, அதை நோக்கி பயணித்தவர், இப்போது பழங்குடிகளின் இசையை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறார். அந்த இசையை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமென பயணித்து கொண்டிருக்கிறார்.
"கல்லூரிக் காலத்தில் படிப்பின் காரணமாக இலகுரக விமானப் பயிற்சி பெற்றிருந்தேன். படித்து முடித்த பின் பாதுகாப்புத் துறையில் சேர வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. அப்பா விமானத் துறையில் இருந்ததும் அதற்கொரு காரணம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.
எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருந்த ஒரு நாளில் திடீரென எனக்கு நிகழ்த்து கலையில் (Performing Arts)ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதிலிருந்தே இசை, நாட்டியம் என கலையுடன் பயணித்திருக்கிறேன். வீட்டில் சொன்னேன். முதலில் தயங்கியவர்கள் பின் என் பிடிவாதத்தைப் பார்த்து சம்மதித்தார்கள். இப்படியாக நான் இந்தத் துறைக்கு வந்தேன்" என்கிறார் சாரு.
''கறுப்பியை எடுத்துவிட்டால் பரியேறும் பெருமாள் இல்லை'' - மாரி செல்வராஜ் பேட்டி
குஜிலி இலக்கியத்தை மீட்டெடுக்க களமிறங்கிய சென்னை பெண்கள்
மேலும் அவர், "இவை அனைத்தும் நிகழ்ந்தது 2013 ஆம் ஆண்டு காலகட்டத்தில். நிகழ்த்து கலையை அனைவரிடமும், குறிப்பாக குழந்தைகளிடம் சேர்க்க வேண்டும். அதன் மூலமாக அவர்கள் வாழ்வில், ஆளுமையில் சிறு மாற்றத்தையேனும் கொண்டு வர வேண்டும் என பேரார்வம் இருந்தது. அதனை நோக்கி செயல்பட தொடங்கிய போதுதான் ஒரு நாள் சர்வதேச நிகழ்த்து கலை பயிற்சி பள்ளி ஒன்றில் லியோன் ஜேம்ஸை சந்தித்தேன். புதுப்புது இசைக் கருவிகள் என் வாழ்வில் ஓர் அங்கமானது அந்த சந்திப்புக்குப் பின்புதான்" என்று தெரிவித்தார் சாரு.
'அபாரஜின்களும், லியோனும், இசை கருவியும்'
"லியோனும் நிகழ்த்துக் கலை, இசை என கலை சார்ந்து பயணிப்பவர். எந்தக் கட்டணமும் பெறாமல் பழங்குடிகளின் இசையை, தொன்மையான இசைக் கருவிகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ந்துவிட வேண்டுமென அர்ப்பணிப்புடன் உழைப்பவர். அவர் மூலமாக எனக்கு அபரிஜின்களின் 'டிஜிருடூ' இசைக் கருவி அறிமுகமானது.
ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இசை கருவி அது. அதனை இசைக்க லியோன் பயிற்சி அளித்தார். இப்போது எனக்கு ஆப்ரிக்கன் களிம்பா, அமெரிக்கன் கஸோ உட்பட ஐந்து பழமையான இசைக் கருவிகள் இசைக்கத் தெரியும். இவை நேர்மறை அதிர்வுகளை உண்டாக்குகின்றன. இதன் மூலமாக சிறுவர்களின் வாழ்வில் பெரும் ஒளி பாய்ச்ச முடியுமென நம்புகிறேன்." என்கிறார்.
'இயற்கையான இசை கருவி'
டிஜிருடூ இசைக் கருவி குறித்து பெரும் ஆராய்ச்சி நிகழ்த்தியவர் இசை கலைஞர் லியோன். இவருடன் இணைத்துதான் சாரு நிகழ்த்துக் கலை பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய லியோன், "நான் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்தவன். மேற்கத்திய இசை என்பது ஆங்கிலோ இந்தியர்களின் குடும்பத்தில் ஓர் அங்கம். அப்படியாகதான் எனக்கு இசைக் கருவிகள் அறிமுகமாகின. மெல்ல பழமையான இசை கருவிகள் குறித்து தேட தொடங்கினேன். அந்தத் தேடல்தான் டிஜிருடூவை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது."
பழங்கால இசைக் கருவிகளுக்கு உயிர்கொடுக்கும் அரசு அலுவலர்
இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன?
"கித்தாரும், பியானோவும் மட்டுமே இசை கருவிகள் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,லட்சகணக்கான இசை கருவிகள் இங்கே இருக்கின்றன. மிகவும் தொன்மையான இசை கருவி இந்த 'டிஜிருடூ', ஆஸ்திரேலிய அபாரிஜின்களுடையது. இயற்கையான இசை கருவி இது. ஆம், யூகலிப்டஸ் மரத்தின் உட்பகுதியை கரையான் அரித்து, அங்கொரு வெற்றிடத்தை உணடாக்குகிரது. அதனை பதப்படுத்தி இந்த இசைக் கருவியை அபார்ஜின்கள் உண்டாக்குகிறார்கள்." என்கிறார் லியோன்.
'டிஜிட்டல் மயம்'
"இப்போது இசை என்பது டிஜிட்டல்மயமாக மாறிவிட்டது. நான் அதனை தவறு சொல்லவில்லை. பெருங்கூட்டத்திடம் இசையை கொண்டு சேர்க்க தொழில்நுட்பம் அவசியமானது. ஆனால், அதே நேரம் டிஜிட்டல் இசையானது நமது ஆன்மாவை அசைத்து பார்க்கவில்லை என நான் நினைக்கிறேன்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லியோன்.
அவரே தொடர்கிறார், "நான் நிகழ்த்து கலையின் போதும், நாடகங்களுக்கு இசை அமைக்க கலைஞர்கள் அழைக்கும் போதும், முன்பே பதிவுசெய்யப்பட்ட எந்த இசையையும் பயன்படுத்தாமல், பழமையான கருவிகளை கொண்டு நேரடியாக இசை அமைக்கிறேன். இந்த இசைதான் நெகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது நம்புகிறேன்."என்கிறார்.
Leave a Comment Read More
கருணையின் மறு உருவம் என்று பலராலும் அழைக்கப்படுபவர் அன்னை தெரஸா. அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா ஆகியவற்றை பெற்றவர். சமீபத்தில் ரோமன் கதோலிக்கத் திருச்சபையால் புனிதராக்கப்பட்டவர்.
Leave a Comment Read More
மர்ம நாவல் எழுத்தாளார்கள் பலர் இருந்தாலும், அகதா கிறிஸ்டிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அகதாவின் மேடை நாடகமான 'தி மௌஸ் டிராப்' (The Mousetrap ) பல ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டு சாதனை புரிந்து வருகிறது.
Leave a Comment Read More
நன்றி ஸ்டெஃபி! - அழகான, அற்புதமான டென்னிஸ் நாட்களை வழங்கியதற்கு நன்றி' - இது தான் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் ஒய்வு பெற்ற போது, உலகெங்கும் உள்ள பல பத்திரிக்கைகளின் தலையங்கமும். 22 கிராண்ட் ஸ்லாம்கள், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம், பல கிராண்ட் பிரீ பட்டங்கள் என்று எண்ணற்ற சாதனைகளை படைத்த ஸ்டெஃபி, ஒய்வு பெற்ற பின் போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
கண்பார்வையற்ற மற்றும் கேட்கவும், பேசவும் இயலாத ஒரு மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர், புகழ்பெற்ற எழுத்தாளராக, பேச்சாளராராக பின்னாட்களில் மாறியதன் காரணம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகிய பண்புகளை கொண்டிருந்தது தான். பெண்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகில் சாதிக்க விரும்பும் ஓவ்வொருவருக்கும் ஹெலனின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது புத்துணர்வைத் தரும்.
Leave a Comment Read More
இந்தியாவின் இரும்புப் பெண்மணியாகக் கருதப்படும் இந்திரா காந்தி, நாட்டின் பிரதமராக இருந்த போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் எண்ணற்ற முடிவுகளை துணிச்சலாக எடுத்தவர்.
Leave a Comment Read More
விருப்பம் உள்ள துறையில் இறங்கினால் வெற்றி பெற்றுவிட முடியும் என்பது பொதுவான நம்பிக்கை. தான் விரும்பும் துறையாக இருந்தாலும் அதில் தயக்கமில்லாமல் இறங்குவதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. நமக்கு விருப்பமான துறையை நெருங்கிப் பார்க்கிறபோது அஇலிருக்கிற நுணுக்கங்கள், வளர்ச்சிகள் அனைத்தும் நம்மை பிரமிக்க வைக்கும்.
முனைபுடன் ஈடுடத் தடங்குகிறவர்கள் முன்னேறுவதா பின்னேறுவதா என்று முடிவு செய்ய வேண்டிய இடம் இதுதான். இத்தனை உயர்ந்த விஷயங்கள் இருக்கிற துறையில் நாம் நுழைகிறோம் என்கிற பிரமிப்பு. பெருமித உணர்வை ஏற்படுத்தினால் அவர்கள் தொடர்ந்து அதே பாதையில் செல்கிறார்கள், வெல்கிறார்கள்.
“இந்தத்துறையில் நாமா?” என்கிற பிரமிப்பு பீதியாக மாறுகிற போது அவர்கள் தயங்கிப் பின்வாங்குகிறார்கள். “நம்மால் முடியாது” என்று விலகி விடுகிறார்கள்.
நாம் – ந்து கனவு – அதற்கான முயற்சி, இந்த மூன்று குறித்தும் ஏற்படுகிற தெளிவுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். தொடங்கும் வரை கனவு காணலாம். தொடங்கிவிட்டால் விருப்பு வெறுப்பில்லாமல் செயல்படவேண்டும். “வெற்றியைத் தொட்டுவிடப் போகிறோம்” என்கிற உறுதி உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். ரசனையோடும், படைப்பாற்றலோடும் பணிகளை அரங்கேற்ற வேண்டும். வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் பதட்டமில்லாமல் எதிர்கொள்ளப் பழக வேண்டும்.
இந்த அணுகுமுறை எந்தத் துறைக்கும் பொருந்தும். பந்தயக் குதிரையின் கால்களில் இருக்கும் அசுர பலமாய் செயலாற்றல், கடிவாளமாய் மன உறுதி, அதன் கம்பீரமான தோற்றமாய் தன்னம்பிக்கை இத்தனை அம்சங்களோடும் புழுதி பறக்கப் பயணம் தொடங்குங்கள்…
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
நண்பர்களே! அன்பான வணக்கங்கள். கவிதையும் நகைச்சுவையும் பொன்மொழி கிடைக்குமா உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள். இவையெல்லாம் என்னுடையதல்ல எனக்கு தெரிந்து அந்த கால இலக்கியங்கள், திருவள்ளுவர், பாரதியார், விவேகானந்தர், இப்படிப் போகும் நண்பர்களே இவை என்னவென்றால்....
கடந்த விடுமுறையில் எனது பிள்ளைகளுடன், அவனது நண்பர்களும், நண்பிகளும் வந்திருந்தனர், நிறைய பேசினோம், விவாதித்தோம், விளையாடின முடிவில் அவர்கள் கையில் ஊற்று என்னும் ஒரு புத்தகம் படித்து விட்டு. அசந்து விட்டேன் நண்பர்களே. இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிட முடியுமா பல கல்லூரி மாணவ மாணவிகள்.
நல்லவனாகவும் சந்தோஷப்படும் அடுத்த முறை நாங்கள் வரும்போது உங்கள் தளத்தை பார்ப்போம் என்று நண்பர்கள் இந்த பதிவை குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு அதனால் உடனே முடியவில்லை. என் தொழில் அப்படி வீட்டில் இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக தொகுத்துள்ளேன். இரண்டு அல்லது மூன்று பகுதி வரும் என்று நினைக்கிறேன். இவையெல்லாம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள் என்று அந்த இதழ் முழுவதும் ஊற்று நீரை ஊற்றி எடுத்து
முதலில் கொஞ்சம் கவிதை
நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
வெற்றி என்பது மனதில் இருக்கிறது. நீ வெற்றி பெற வேண்டும் என விரும்பினால், உன்னை ஒரு வெற்றியாளனாய் இந்த வினாடியிலிருந்தே கருதத் துவங்கு.
வெற்றியின் துவக்கம் எது என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுகிறது. அடுத்தவர்கள் நமது கழுத்தில் சூட்டும் பூமாலை தான் வெற்றியின் முதல் படி என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். ஆனால் அது வெற்றியின் துவக்கமல்ல, வெற்றியின் அடையாளங்களில் ஒன்று என வைத்துக் கொள்ளலாம்.
உண்மையான வெற்றி நமது மனதில் நம்மை ஒரு வெற்றியாளராய்க் கருதிக் கொள்வதில் தான் இருக்கிறது. அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். தனது உருக்கு உடலாலும், நடிப்புத் திறமையாலும் ஹாலிவுட்டைக் கலக்கியவர். அதன் ஒரு படி மேலே போய் கலிபோர்னியாவின் கவர்னர் எனும் அந்தஸ்தையும் சூடிக் கொண்டவர்.. அவர் திரையுலகிற்கு வந்த காலத்தில் தோல்விகள் தான் மிகுந்திருந்தன.
“இனி என்ன செய்வதாய் உத்தேசம்” என்று ஒருமுறை அவரிடம் பேட்டியில் கேட்டார்கள். தோல்வியில் விழுந்து கிடக்கிறாயே, இனிமே வேற என்ன பொழைப்பைப் பார்க்கப் போறே எனும் தொனி அதில் இருந்தது. ஆனால் அர்னால்ட் தந்த பதில் உறுதியாய் இருந்தது.
“நான் ஹாலிவுட்டையே கலக்கும் நடிகனாவேன்”
எக்குத் தப்பான உடம்பு, சுவாரஸ்யமில்லாத குரல், எக்ஸ்ப்ரஷன் காட்டத் தெரியாது என்ன விமர்சிக்கப்பட்ட முகம் – இத்தனை சிக்கல்களோடு இருந்தாலும் அவருடைய தன்னம்பிக்கை மிக உயர்வாக இருந்தது !
“எந்த நம்பிக்கையில் இதைச் சொல்கிறீர்கள் ?” என்று கேட்டே விட்டார் பேட்டி எடுத்தவர்.
“என் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையில் தான்” என்றார் அர்னால்ட். அந்த நம்பிக்கை தான் அவரை நகர்த்திக் கொண்டு போய் படு பயங்கர வெற்றியில் உட்கார வைத்தது என்பதில் சந்தேகமில்லை.
நம் மீதான நம்பிக்கை என்பது நம்மை நேசிப்பதில் துவங்க வேண்டும். கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் நமக்கு தன்னம்பிக்கையைத் தரவேண்டும். நம்மைப் பாராட்ட நாமே தவறினால் நம்மை இன்னொருவர் பாராட்டுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.
தன்னை உயர்வாக நினைப்பவர்களே வெற்றி எனும் கோட்டை எட்டித் தொட்டிருக்கிறார்கள். தன்மீது முழு நம்பிக்கை இல்லாதவர்களோ தோல்வி எனும் ஆமை ஓட்டுக்குள் அடங்கிப் போய் விடுகிறார்கள். திறமை குறைவாக இருந்தாலும் நம்பிக்கை அதிகமாய் இருக்கும் மனிதர்களே வெற்றி பெறுகிறார்கள்.
ஓட்டாமல் பார்க்கிங்கில் பூட்டியே வைத்திருக்கும் ரேஸ் காரை விட, நம்பிக்கையுடன் ஓடும் மாட்டு வண்டி தான் இலக்கைச் சென்றடையும்.
சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை.
அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று ! புகழில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் ? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. அதன் பின்பும் மரணம் வரை தனது வசீகரக் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.
தான் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலானவன். என் குணாதிசயங்களும், திறமைகளும் எனக்கு மட்டுமே எனும் சிந்தனை இன்று பலருக்கும் வருவதேயில்லை. “காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் அன்றைய தினம் முழுதும் உங்களோடு கூடவே வரும்” என்பதுதான் உளவியலின் பால பாடம்.
தன்னை உயர்வாக நினைப்பது என்பது தற்பெருமையோ, அதீத நம்பிக்கையோ அல்லது சோம்பேறித் தனத்தையே கொண்டு வராமல் இருக்க வேண்டும். இவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை நுணுக்கமாய்க் கண்டறியுங்கள்.
தன்னம்பிக்கை என்பது சுவரொட்டி போல ஒரு பொது இடத்தில் ஒட்டப்படத் தேவையில்லை. ஒரு ஆழ்கடல் அமைதி போல உள்ளுக்குள் இருப்பதே சிறந்தது. அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றியை நோக்கி நீங்கள் பயணியுங்கள். வெற்றி பெறுவதற்கு என்னென்ன தேவை என்பதை ஆராயும் முன்னர் ஒரு வினாடி நிதானியுங்கள். கண்ணாடியின் முன்னால் நின்று உங்களையே பாருங்கள். இந்தச் செயலை உங்களால் நிச்சயம் செய்ய முடியும் என நம்புங்கள். உங்களுடைய நம்பிக்கையின் வேர்கள் வலுவடையும். நம்பிக்கையின் வேர்களே செயல்களின் கிளைகளைத் தாங்கிப் பிடிக்க முடியும் !
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
தன்னம்பிக்கை எனும் கவசம் அணிந்து…
“நமது முயற்சிக்கு ஏற்ப நாம் முன்னேறலாம்” என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மையும் ஆகும்.
முயற்சிக்கும்கூட ஒரு எல்லையுண்டு என்று ஒரு காலத்தில் எல்லை வகுத்தார்கள். வானமே நமது எல்லை என்று தொடமுடியாத வானத்தை ஒரு இலட்சியத்தின் எல்லையாகக் கூறினார்கள். ஆனால் Sky is the limit என்று இருந்த நிலை மாறி இன்று வானம்கூட நீண்ட காலத்திற்கு நமது எல்லையாக - வரையறையாக இருக்க முடியாது (Sky is no longer the limit) என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முயற்சி உள்ளவன் வானத்தைக் கடந்தும் அவன் தன் வெற்றியை ஈட்டுவான். முயற்சிக்கு ஓர்எல்லை என்பதே கிடையாது என்ற கருத்து அண்மைக் காலத்தில் வளர்ந்துள்ளது. இத்தகைய முயற்சிக்குத் தடை நேராமல் கவசம்போல் அமைவதுதான் தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கை என்பது உண்மை என்ற மூல வித்துக்கு மேலுறைபோல் அமைவது. தன்னம்பிக்கை உள்ளவன் கவசம் அணிந்த மனிதனைப் போன்றவன். தன்மீது எவ்விதத் தாக்குதல் நேர்ந்தாலும் அதனால் அவன் பாதிக்கப்படமாட்டான். எது தாக்கியதோ அதுவே அவன் மீது மோதியதும் வீழ்ந்துபடும்.
தன்னம்பிக்கை உள்ளவன் பிறர் தன்னைப் பற்றிக் கூறும் புகழ்ச்சி, இகழ்ச்சிகளை, கேலி, கிண்டல்களை ஏன் அவதூறுகளைப் பற்றிக்கூட கவலைப்படுவதில்லை. தான் எடுத்துக்கொண்ட செயலில் நேரிய வழியில் சென்று, வெற்றி காண்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறான்.
அவன் நேரம் முழுவதும் வெற்றியை நோக்கிய சிந்தனையிலேயே செலவிடப்படுகிறது. தோல்வியைப் பற்றிச் சிந்திக்கவும் அவனுக்கு நேரமில்லை (There is no time for failure).
தன்னம்பிக்கை உள்ளவன் இறுதியில் பெறுவது வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி என்பது ஒன்றே.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும் இளைஞர்கள் தாம். தன்னம்பிக்கை உள்ள இளைய தலைமுறையே எழுந்திரு! சோம்பலை முறி! சுறுசுறுப்போடு செயல்படத் துவங்கு. வெற்றி உறுதி!
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
அந்த புத்தகங்களின் நோக்கு உங்களின் பாராட்டுக்களை பெறுவதல்ல..உங்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு சிறப்பாய் வித்தியாச படுத்தியிருக்கிறது என்பது தான் அதனின் ஒவ்வொரு எழுத்துக்களின் தனிப்பெரும் குறிக்கோள்கள் ஆகும்...
அதை நாம் வெறும் தன்னம்பிக்கை கட்டுரையாகவோ,இல்லை வெறும் personality developement article என்ற குறுகிய வட்ட எதிர்ப்பார்ப்போடு படித்தலே அவற்றின் பயனை நம்மிடம் இருந்து பிரிக்கிறது...
அதில் எழுதப்பட்டிருப்பவை நமக்கான நம் சம்பந்தமான நமது தீர்வுகள் என்று நம்பி அனுபவபூர்வமாய் படிக்க தொடங்குங்கள்..ஒவ்வொரு மேற்கோள்களையும் எடுத்துக்காட்டுகளிலும் வாழ்ந்து படியுங்கள்..அதனுள் உள்ள எழுத்துக்களை கண்வழியே இதயத்தில் இட்டு நிரப்புங்கள்..பிறகு உங்கள் வாழ்க்கை குறிப்பிலிருந்து,,
ச்சே.. எத்தன தடவ try பன்றது எல்லாம் வேஸ்ட் என்ற வார்த்தைகள் நித்\சாயம் நீக்கப்பட்டிருக்கும்...வாழ்க்கையின் வீசையும் உங்களின் திருப்திக்கான நீள அகலங்கள் நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும்..
இந்த நம்பிக்கைகளோடு தான் இந்த உங்களுக்கான தீர்வுகளை உங்களில் உங்களாக எழுத முனைந்திருக்கிறேன்..இதை உங்கள் நண்பர் உறவினர் என்று எல்லோரிடமும் கொண்டு சேருங்கள் பசுமையான இல்லையில்லை வண்ணமையமான மனிதர்கள் செய்வோம்......
இந்த நம்பிக்கைகளோடு தான் இந்த உங்களுக்கான தீர்வுகளை உங்களில் உங்களாக எழுத முனைந்திருக்கிறேன்..இதை உங்கள் நண்பர் உறவினர் என்று எல்லோரிடமும் கொண்டு சேருங்கள் பசுமையான இல்லையில்லை வண்ணமையமான மனிதர்கள் செய்வோம்......
இந்த வலைப்பதிவில் புதுப்புது தலைப்புகளோடு தன்னம்பிக்கை கட்டுரைகள் வெளியாகும் படித்து சிந்தியுங்கள்...நண்பர்களே.....
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
கண்ணாடி போல, வெளிப்படையான (Transparent ) ஆன உங்கள்அன்பு, மீண்டும் உங்களுக்கே Reflexion ஆக திரும்பி வருகிறது.
நீங்கள் பயிரிட்ட பூக்கள் அத்தனையும் உங்கள் தோட்டத்தையே ஒருவாசனை கூட்டமாக மாற்றுகிறது.
"வாழ்க்கை சுலபமாக"இருக்க, மகிழ்ச்சி மிகவும் முக்கியம்.
நீங்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
நீங்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாக இருக்கட்டும். (Solution )
3 என்பது முக்கியமான ஒரு எண்.
Newton ன் முதல் இருண்டு விதியை விட, 3 வது விதியே பலராலும் பாராட்டப்பட்டது.
சிவனின் இரண்டு கண்களை விட 3 வது கண் (நெற்றிக்கண்) பலரையும் பயப்பட வைத்தது.
அதைப்போபோன்றே -3 என்பது வாழ்வின் வெற்றிக்கு என்னென்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
அதை நமது 3 வது கண்ணாகிய அறிவுக்கண்ணோடு அணுகுவோம்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
தொலைகாட்சியில் "Crazy Mohan"- Prakash Raj இடம் "HOW DO I KNOW SIR? " என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
மற்றொன்றில் வடிவேல் "நான் அடி வாங்காத ஏரியாவே கிடையாது"" -என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
இன்னொன்றில் விவேக் எப்படி இருந்த நான் - இப்படி ஆயிட்டேன்"என்று நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் ஒவொருவருக்கும்இருக்கத்தான் இருக்கிறது.
90 களில் - கோவில் ஒரு நாள் Humour Club நிகழ்ச்சியில் திரு.தென்கச்சி அவர்களின் நகைச்சுவை பேச்சை இப்போது என் மனம்அசை போட துவங்குகிறது.
அரங்கம் நிரந்த அந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு நாற்காலியில் மனம்விட்டு சிரித்த சிரிப்பு - இன்னும் பசுமையாக நினைவில்.
நகைச்சுவை புத்தகங்கள் மட்டும் அல்ல , நகைச்சுவை பற்றியபுத்தகமும் நமக்கு அறிய தகவல்களை அள்ளி தருகின்றது.
ஒரு குழந்தை ஒரு நாளைக்கு எதனை முறை சிரிக்கிறது என்றகணக்கு தொடங்கி, முதியவர்கள் ஒரு நாளைக்கு சிரிக்கும் சிரிப்புவரை - பட்டியலிடிருந்தார்கள்.
காரணத்தையும் விளக்கி, சிரிப்பின் முக்கியத்துவத்தையும் கூட.
வள்ளுவர் கூட "இடுக்கண் வருங்கால் நகுக"என்று சொன்னார்.
ஆனால், நாம் அதை சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தால் -கவியரசரும் "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று நமக்குஞாபகப்படுத்தினார்.
இன்னும் நிறைய மனிதர்கள் அதை கடைபிடிக்காத காரணத்தாலோஎன்னவோ - இன்றைய சமூகம் வன்மம், குரோதம், காழ்புணர்ச்சி,போன்ற "காய்களையே விளைவித்து கொண்டிருக்கின்றது.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
அந்த ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. இதனால் அங்கு கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் அனைவரும் பசியால் வாடினர். அந்த ஊரின் நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் உதவிக் கேட்டு சென்றனர். ”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார். மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.
மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன். பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More
நம் வாழ்க்கையிலும் பணியிலும் கடமையை உணர்ந்து முழுமன ஈடுபாட்டுடன், ஆர்வத்துடன் செயல்பட்டால்தான் முன்னேற்றம் சுலபம். அப்புறம் பார்க்கலாம். பிறகு செய்யலாம் என ஒத்தி வைத்தே பெரும்பாலோர் பேசுவதைக் கேட்டிருப்போம். ஒத்தி வைத்தலை ஒத்தி வைத்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள் இதோ.
ஒத்தி வைத்தல் (Procrastination) விளக்கம்
நம் அனைவருக்குமே தெரியும். வாழ்க்கையில் ஏதாவது ஒரு செயலைச் செய்வதையோ ஓர் எண்ணத்தை, கருத்தை வெளியிடுவதையோ உரிய நேரத்தில் பேச வேண்டியதையோ ஏதாவதொரு கற்பனையான காரணத்தால் செயலுக்கு கொண்டு வராமல் பிறகு செயல்படுத்தும் நோக்கத்தில் கைவிடுதலே (Dropped) ஒத்தி வைத்தல் எனக் கூறலாம். கையில் ஒரு பீங்கான் பாத்திரம் வைத்துள்ளோம். இதை வைப்பது என்பது மீண்டும் உபயோகிக்கும் எண்ணத்தில் மெதுவாக வைப்பது, கைவிடுதல் என்பது, மீண்டும் உபயோகிக்க இயலாமல் உடைந்து விடும் நிலையைக் குறிப்பது இன்று ஒத்தி வைப்பது முடியாது என்பதன் மறுபெயராக உள்ளது.
காரணங்கள்
சிற்பி ஒருவர் தான் சிலை செதுக்க வேண்டிய கல்லைப் பார்க்கிறார். மலைப்பாக இருக்கிறது. இந்தக் கல்லில் ஒரு சிற்பத்தைச் செதுக்க வேண்டுமா? பிறகு பார்க்கலாம் என ஒத்தி வைக்கிறார்.
நண்பர் ஒருவருக்கு திடீரென அழைப்பு. பணி காரணமாக 10 நாட்கள் வெளிநாடு சென்று வர, மொழி, தட்ப வெப்பநிலை, விமானப் பயண விபத்து எனப் பல காரணங்களைத் தனக்குள் கூறி வெளியில் குடும்பத்தில் தற்சமயம் இவரது கவனம் அவசியம் தேவையென மறுத்துவிடுகிறார்.
அலுவலகத்தில் பணி புரிபவர்கட்கு விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப் படுகிறது. மியூசிக்கல் சேர். ஒரு வருடம் முன் இதேபோல் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெற்ற தோல்வியால் கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது.
காலை 5 மணிக்கு எழுந்தால் ‘சந்திர கிரஹணம்’ முழுமையாகப் பார்க்க வாய்ப்பு ஆனாலும் அந்த நேரத் தூக்கத்தை அந்த ஒருநாள் தியாகம் செய்ய மனமில்லாமல் சோம்பலால் எழவில்லை. இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் உலக்கோப்பையில் வங்காளதேச அணியுடன் விளையாட்டி தோற்றது. காரணம் அதீத தன்னம்பிக்கை. (Over Confidence).
இதுபோல, ஒத்தி வைப்பதற்கான காரணங்கள் பல உண்டு. முக்கியமானவை மலைப்பு; முன் அனுபவமின்மை, தான் பெற்ற தோல்வி, பிறர் பெற்ற தோல்வி, சோம்பல், விளைவு தெரியாத நிலை, பிறரை நம்பாதது. தன்னம்பிக்கையின்மை முதலியன.
ஒத்தி வைப்பதால் வரும் விளைவுகளை நினைத்தாலே நம்மீது நமக்கே வெறுப்பு உண்டாகும்.
மறைந்த முன்னால் பிரதமர் ஒருவர் எவ்வளவு முக்கியமான விசயமானாலும் ஒத்தி வைப்பதில் பெயர் பெற்றவர் என்பதை நாம் பலரும் அறிவோம். சில வேலைகளை முடிக்கக்கூடாது என்றால் ஒரு சிலரிடம் ஒப்படைத்து விட்டால் போதும். கச்சிதமாக முடிக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.
கடந்த ஒரு வருடமாக கோவையில் நிலங்களின் விலைகள் ஏறிவிட்டன. நல்ல விலை வந்தும், இன்னும் விலை ஏறும் என்ற பேராசையால் விற்காமிருந்ததால், திடீரென விலை குறைந்து பொருள் இழப்பை உண்டாக்கும். ஒத்தி வைத்தே பெயர் பெற்ற ஒருவருக்கு நண்பர்கள் மத்தியில் குடும்பத்தில் கெட்ட பெயர் வரும். தொடர்ச்சியாக தனிமை, மன வியாதி, உடல் நோய், வெறுப்பு என வாழ்க்கை பிடிப்பில்லாமல் மாறி விடும்.
கட்டைக்கரி தயாரிக்க விறகுக்கு நெருப்பு வைத்து எரிப்பர். குறிப்பிட்ட நிலையில் நெருப்பை அணைத்து கரியாக எடுப்பார்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஒத்தி வைத்தால் சாம்பல் தான் கிடைக்கும்.
ஒரு வீட்டில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தனர். நல்ல இடமும் வந்தது. இதைவிட நல்ல இடமாக வருமா என இந்த இடத்துக்கு முடிவு எதுவும் கூறாமல் ஒத்தி வைத்து காத்திருந்தனர். மாப்பிளை வீட்டார் காத்திருந்து, முடிவு ஏதும் தெரியாததால் வேறு பெண்ணை தேர்வு செய்து விட்டனர். அந்தப் பெண்ணுக்கு சில வருடங்கள் கழித்து சுமாரான இடத்தில் தான் திருமணம் முடிந்தது.
வீட்டில் சேரும் குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்யாவிட்டால் வீதியில் மக்கள் போடும் குப்பைகளை 10 நாட்களுக்கு குப்பை வண்டி வந்து எடுத்துச் செல்லாவிட்டால் எப்படியிருக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். நாற்றமடிக்கும். புழுக்கள் உண்டாகும், சுற்றுச் சூழல் பாதிக்கும்.
இதேபோல் தான் நம் உடலில் கழிவாகச் சேரும் சிறுநீர், மலர் போன்றவைகளை அவ்வப்போது உடலிலிருந்து வெளியேற்றாவிட்டாலும் உடலும் நாற்றமடிக்கும். உள்ளுறுப்புகளும் கெடும்; நோய்கள் பல வரும். ஒத்திவைப்பதால் தாழ்வு மனப் பான்மையை உண்டாகும். ஒரு நிலையில் சாம்பலாகி விடுவோம்.
ஒத்தி வைக்கும் பழக்கத்தை மாற்றும் வழிகள்
ஒன்று ஒத்தி வைப்பதற்கு அடிப்படையாக இருப்பது மலைப்பும் சோம்பலும் என்பதால், அவைகளை முதலில் அகற்றிவிட்டால் ஒத்திவைக்கும் எண்ணம் வராது, என்னால் முடியும்; நான் இதை முடிப்பேன்; இப்போது முடிக்கவில்லையென்றால், வேறு எப்போது முடிப்பது; போன்ற சுய சங்கல்பங்களை தினமும் நம் ஆழ்மனதுக்கு கட்டளையாகக் கூறவேண்டும். இதனால் மன அலையும், உடல் செல்களும் எதற்கும் தயார் என்ற நிலைக்கு உயர்ந்து விடும்.
பிறரைக் குறைகூறாதே!
நாம் பிறரைச் சார்ந்தே செயல்பட்டு வாழ்ந்து வருவதால், வெற்றிக்கு நாமே காரணம் என்றும், தோல்வியெனில் பிறரால் தான் இது நேர்ந்தது எனவும் சமாதானம் செய்து கொள்கிறோம். முதலில் நமது குற்றம் என்ன எனக் கண்டுபிடித்து, அதை ஏற்றுக் கொண்டு மாற்ற முயற்சிக்க வேண்டும். நமது குற்றங்களைப் பிறர் கூறினால் நமக்கு உதவி செய்த அவரை வாழ்த்தி நன்றி கூற வேண்டும். பிறரது குற்றங்களைப் பலர் முன்னிலையில் கூறாமல், தனித்துக் கூறி, திருத்தவும் முயற்சி செய்ய வேண்டும்.
சிறுசிறு பகுதிகளாய் பிரி
வீடு ஒன்றின் முழுத்தோற்றமும் கட்டி முடித்த பின்தான் தெரியும். கட்டுமானப் பணியின் போது தெரியாது. பகுதி பகுதியாகப் பிரித்துச் செய்த வேலைகளின் தொகுப்பே முழு வீடு. அதேபோல் பெரிய வேலைகளை ஒத்தி வைக்காமல் சிறு சிறு பகுதிகளாய் பிரித்துச் செய்தால், மலைப்பின்றிச் செய்து முடிக்கலாம். பிறருக்குப் பணியை ஒதுக்கும்போது, அவர்களது தகுதி, திறமை, செயல்படும் விபரம் ஆகியவைகளை அறிந்து, உறுதி செய்து கொள்ளவும்.
ஆய்வும் ஆலோசனையும்
இடையிடையே பணியின் முன்னேற்றம், பெரியோர் அல்லது முன் அனுபவமுள்ளோரிடம் அறிவுரைகள் ஆலோசனைகள் கேட்பது இவைகளையும் விடாமல் செய்ய வேண்டும். குழப்பம் வந்தால் ஒத்தி வைப்போம். குழப்பமே வராமல் தெளிவான நிலையில் இருந்தால் ஒத்திவைக்கும் எண்ணமே வராது.
புயலைக் கணக்கிடாதே! கரை சேர்!
கடலில் பயணம் செய்வதென்பது சாதாரண காரியமல்ல. வழியில் பல துன்பங்களையும் ஏன் புயல்களையும் சந்திக்க நேரலாம். புயல் வருமே எனப் பயணத்தை ஒத்தி வைக்க முடியுமா? அப்படியே பயணத்தின் போது புயல்வந்தாலும் அதைச் சமாளித்துக் கரை சேர்ந்தால் தான் அவரது துணிச்சலான நடவடிக்கைகள் வெளி உலகுக்குத்தெரியும். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் துவக்கம் சிறு அளவில்தான். பெரிய ஆறு; துவங்குமிடம் சிறிய ஊற்று நீர் தான். அழகான, பெரிய சிலை. துவக்கம் முதல் அடிதான். 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் எதுவாக இருந்தாலும் துவக்கம் முதல் அடியில்தான்.
பலரை அன்றாட வாழ்வில் சந்தித்திருக்கிறோம். எதைக் கூறினாலும் இதுங்களா? நானா? என்னால் முடியுமா? என்று நம்பிக்கையில்லாமல் எதிர்மறையாகக் கூறுவர். சிறிது வற்புறுத்தினால் சரி அப்புறமா யோசித்து சொல்கிறேன் என யோசிப்பதையே ஒத்தி வைப்பார்கள்.
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள்
சவாலான செயல்கள் ஒப்படைக்கப்படும் போது, அல்லது நம்மை நாடி அவை வரும்போது, அவைகளை நம்மைச் சோதிக்க வருவதாய் எண்ணாமல், நமது திறமைகளை வெளியுலகுக்கு உணர்த்த அருமையானதோர் வாய்ப்பு என எண்ணி மகிழ வேண்டும்.
இதை நான் திறமையாகச் செய்து முடிப்பேன் என அடிக்கடி கூறி நம் உடல் செல்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்.
ஒரு சிறந்த பேச்சாளர்; ஒரு கூட்டத்தில் மிக அருமையாக, சிறப்பாகப் பேசினார். கூட்டம் முடிந்தபின் வழக்கம்போல் விண்ணைப்பிளக்கும் கரவொலி கடைசியில் ஓர் இளைஞன் தயங்கித் தயங்கி இவரிடம் வந்து, உங்களைப்போல், நானும் சிறந்த பேச்சாளராக வேண்டும்” என்று கூறி, சில வழிகளைக் கூறுமாறு கேட்டான். அவர் கூறினார். “பேச்சாளராக வேண்டுமென்ற எண்ணம் வெறியாக மனதில் இருக்க வேண்டும். தேடிவரும் வாய்ப்புகளை விட நாடிச்சென்று வாய்ப்புகளை வலியப்பெற வேண்டும். அறிமுகம், நன்றி, வரவேற்பு என எந்தப் பகுதி ஒப்படைக்கப்பட்டாலும் திறமையுடன் பேசப் பயிற்சி செய்ய வேண்டு”மென்றார். இதையெல்லாம் தானும் செய்து விட்டதாயும் இருந்தாலும் வெற்றி பெற்ற பேச்சாளர் ஆக முடியவில்லையெனக் கூறி, முதன் முதலில் மிகச் சிறந்த பேச்சாளர் என்ற பெயர் பெற்ற பேச்சின் போது அவரது உடை எப்படியிருந்தது என்றான்.
வசதி குறைவு, கிழிந்த வேட்டியைத் தைத்துக கட்டிக் கொண்டு பேசியதை அப்பேச்சாளர் நினைவு கூர்ந்தார். இளைஞனுக்கு ரகசியம் புரிந்ததாய் எண்ணி மகிழ்ந்தான். அவனும் கிழிந்த வேட்டியைத்தைத்துக் கட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தான். அப்பொழுதும் அவனால் பெயர் பெற முடியவில்லை. இன்றைய நிலை இப்படித்தான் உள்ளது. இந்த நிலையை மாற்றினால்தானே தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் சாதிக்க முடியும். இல்லையென்றால் ஏதோ வந்தோம், போனோம் என்ற நிலைதான்.
துணிச்சலும் ஆர்வமும் இருந்தால் ஒத்தி வைப்பதை நாம் ஒத்தி வைக்கலாம். அதன் மூலம் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்கலாம். இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதற்கெல்லாம் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். எந்த எண்ணமாக இருந்தாலும், யாருடனும் பேசுவதாக இருந்தாலும், எந்தச் செயல் செய்வதாயிருந்தாலும் அவைகளை விரும்பினால்போதும், நூறுக்கு நூறு சதவீதம் விரும்பினால் மட்டுமே போதுமானது, இந்த விருப்பமானது உடல் செல்களைத் தூண்டி, மன ஆற்றலை அதிகரித்து குவித்து முடித்து வைக்கும்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
Leave a Comment Read More



























