தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.


உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*
நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!
டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,
“சார் பின்னாடி போய் உட்காருங்க.
நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.
என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!
*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*
*சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*
*சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*
*இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,
உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*
*உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?*
*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*
*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*
எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.
*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.
*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*
*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*
*உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*
எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.
*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*
யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.
*தீதும் நன்றும் பிறர்தர வாரா.*

Leave a Comment Read More


ஐந்தாம் பாடம் தன்னலமற்ற பாங்கு! தன்னலமற்ற பாங்கினையும் பொதுவுடைமைக் கொள்கையையும் உலகுக்கு எடுத்தோதிய பெருமை என்றும் ஆற்றுக்குண்டு. மனிதனும் பிற உயிரினங்களும் உயிர்வாழ இன்றியமையாத நீரை நல்கியது ஆறுதான். மேலும், விவசாயம் செழித்து ஓங்கிட கரைதோறும் வண்டலைச் சேர்த்ததும் ஆறுதான். மனித இனம் தொடர்பு கொள்ள போக்குவரத்துச் சாலையாக அமைந்ததுவும் ஆறுதான். இப்படியாக, ஆறு எல்லா நிலையிலும் தன்னலம் மறந்து பொதுநலம் போற்றி வந்துள்ளமை நம்மை வியக்க வைப்பன. ஆனால், மனிதன் ஆறுகளைக் கொண்டானன்றி ஆறுகளின் அருங்குணத்தைக் கொண்டானில்லை! சுயநலத்தின் மொத்த உருவானான் மனிதன், அதற்கு எருவானது ஆறு.

                                                                                                                           .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More


நான்காம் பாடம் புதுப்பித்தல்! பழம்பெருமை பேசுவதிலும் பழம்பெருமையில் அகம் மகிழ்வதிலும் ஆற்றுக்கு உடன்பாடில்லை. ஆறு ஒவ்வொரு மணித்துளியும் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதை தன் கடமையாகக் கொண்டிருக்கிறது. நேற்று இருந்த ஆற்றுநீர் இன்று இருப்பதில்லை. சென்ற மணித்துளியில் இருந்த ஆறு இன்று இருப்பதில்லை. ஆறு கடந்து வந்த பாதையை மறப்பதுமில்லை. அதற்காக இன்றைய பொழுதைத் துறப்பதுமில்லை. மனிதராகிய நாம் கடந்த காலவரலாற்றில் திளைத்து எதிர்காலச் சிந்தனையில் மூழ்கி நிகழ்கால º¢கரங்களை இழக்கிறோம்! இந்நிலை மாற வேண்டுமாயின் நாம் ஆறாக வேண்டும்.

                                                                                                                          .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


Leave a Comment Read More



மூன்றாம் பாடம் குறிக்கோள்! குறிக்கோளில்லா ஆறு உலகில் எங்குமில்லை என்றே கூறலாம். ஆறுக்குப் பிறப்புண்டு; இறப்பில்லை ஆனால் இருப்புண்டு! மலைகளிலிருந்து பிறக்கும் ஆறு குறிக்கோளாகì கொள்வது கடலைச் சென்று சேர வேண்டியதைத்தான். எங்குச் சுற்றி ஓடினாலும், எத்துணைப் பள்ளத்தில் வீழ்ந்தாலும் மீண்டெழுந்து ஓடுவது தனது குறிக்கோளை அடையவே; கடலோடு கலக்கவே. ஆயிரமாயிரம் தடைகள் வரினும் அதனைக் கடந்து கடலை அடையாது ஆறு ஒருபோதும் களைத்ததில்லை; பயணத்தைப் பாதியிலேயே முடித்ததில்லை. உயிர்கள் ஆறு. இறைமை கடல். பிறவித்துன்பத்தை நீங்க வேண்டுமாயின் இறைவனடி சேர்தலே வழி. தடைகள் ஆயிரம் வரலாம், அவற்றைì கடக்க வேண்டுவது நமது கடமை. கடந்தால்தான் வரும் பெருமை.

                                                                                                           .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்


Leave a Comment Read More


இரண்டாம் பாடம் தன்னம்பிக்கை! தன்னம்பிக்கை இல்லா மனிதன் வாழ்வில் முன்னேற்றமடைவதென்பது குதிரைக்கொம்பே. ஆற்றைப் பாருங்கள். எத்தனை பெரிய தடைக்கல்லாக இருந்தாலும் அதனை மோதிச் சென்று தன் இலக்கை நோக்கிப் பயணிக்கும். செல்லும் வழி எங்கெங்கும் பாறைக்கற்கள் தடைக்கற்களாய் வீற்றிருப்பதால் ஆறு தனது ஓட்டத்தை நிறுத்திக் கொள்கிறதா என்ன? இல்லையே, தடையைக் கடந்து இன்னும் முனைப்போடு அல்லவா விரைகின்றது. இதுவன்றோ தன்னம்பிக்கை! கடக்க முடியாப் பாறைகள் என்றால் முட்டி மோதி அழிந்து போவதில்லை ஆறு. மாறாகத் தனியொரு வழி அமைத்துô பாறையை அரணாகவும் தனது கரையாகவும் அல்லவா வைத்துக் கொள்கின்றது.

                                                                                                                    .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்


Leave a Comment Read More



மனித வாழ்வோடு அதிக தொடர்பு கொண்டது ஆறு. மாந்த நாகரிகங்களே ஆற்றோரங்களில்தான் தொடங்கின என்பதை அறிய மட்டில் மேலும் இவ்வுண்மை புலனாகின்றது. இயற்கை அன்னையின் அருங்கொடைகளுள் ஒன்று ஆறு. ஆறு மனிதனுக்குப் புகட்டும் பாடங்கள் பல! வழங்கும் நன்மைகள் பல! மாந்த இனத்திற்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆறு. மனிதர்கள் நாம் அதன் மாணவர்கள். ஆறு கற்பிக்கும் பாடங்களைக் காண்போம்! எந்நிலை மாணாக்கன் நாம் என்று அதன்வழி அறிவோம். தலையா? இடையா? கடையா?

முதற்பாடம் உழைப்பு! வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமாயின் சக்கரத்தை ஓட்டுவிக்க வேண்டும். அதற்கு அடித்தளமாய் அமைவதுதான் உழைப்பு. ஆறு எந்நேரமும் ஓடிக் கொண்டே தான் இருக்கும். ஆறு இயங்காத நிலையில் இருக்காது. இயங்காது இருந்தால் அதன் பெயர் ஆறாக இருக்காது! அறுத்துக் கொண்டு ஓடுவதால்தானே மாந்தன் அதற்கு ஆறு எனப் பெயர் சூட்டினான். ஆகையால்தான் கவிஞர் மு.மேத்தா,

‘ஓடிக் கொண்டிருப்பதுதான் நதி

உலவிக் கொண்டிருப்பதுதான் காற்று

செயல்பட்டுக் கொண்டிருப்பவýதான் இளைஞன்’

என்றார். ஆக, மனிதன் எவ்வேளையும் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும்! இதை மனிதனுக்கு அனுதினமும் உணர்த்திக் கொண்டிருப்பது ஆறு.

                                                                                                       .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்



Leave a Comment Read More

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க..

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.

2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள். (Loose Talks)

3. எந்த விசயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (Diplomacy), விட்டுக்கொடுங்கள். (Compromise)

4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerance)

5. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். (Adament Argument) குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)

6. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales)

7. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (Superiority Complex)

8. அளவிற்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

9. எல்லோரிடத்திலும் எல்லா விசயங் களையும் அவர்களுக்கு சம்மந்தம் உண்டோ? இல்லையோ சொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.

10. கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11. அற்ப விசயங்களை பெரிதுபடுத் தாதீர்கள்.

12. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (Flexibility)

13. மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். (Misunderstanding)

14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)

15. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16. பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவûத் தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17 அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

18. பிரச்சனைகள் ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More


நம்புங்கள்!

நீங்கள்தான் சிறந்தவர்

“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர்.

அறிவுள்ளவர்.

அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்.

உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை.

நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள்.

ஆனால், நீங்கள் படிக்கின்ற கல்வியின் கூடவே கொள்ள வேண்டிய மென் திறன்தான் உங்களைத் தனித்திறனுள்ளவர்களாகக் காட்டி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, உங்களை உயர்நிலையை அடையச் செய்யும்.

நாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம்.

நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறோம்.

அது நண்பர்களாக இருக்கலாம்,

அல்லது பிடித்த நடிகர்களாகவோ, அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கலாம்.

ஆனால் நம் பலம் என்ன, பலவீனம் என்று ஆராயத் தொடங்குவதில் நமக்கு இன்று ஆர்வம் இல்லை.

உங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செலவிடும் நேரத்தில் பாதியாவது உங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் செலவிடுங்கள்.

மென் திறன்கள்

மென் திறன் தகுதிகள் என்பது, படிப்பைத்தவிர, உங்களுடைய பேச்சுத் திறன், தலைமைப் பண்பு, நம்பகத்தன்மை, உங்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்கள், நீங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வல்லவரா, நீங்கள் பயந்தாங்கொள்ளியா, பொது இடங்களில் பேசுவதற்குக் கூச்சப்படுவீர்களா, எதிர் பாலினத்தவரிடம் பேச யோசிப்பீர்களா போன்றவையாகும்.

இது தவிர, நேரக்கட்டுப்பாடு, எதுவும் முடியும் என்ற பாசிட்டிவ்வான எண்ணம், கூர்ந்து கவனிக்கும் திறன், உங்களுடைய ஆளுமைத் திறன், தன்னையும் மற்றவரையும் எந்நேரமும் உத்வேகப்படுத்துதல் உள்ளிட்டவையே.

இன்றைய சூழ்நிலையில் அவசியமாகின்றன.

இந்தத் தகுதிகள் அனைத்து மனிதர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு இருந்தே ஆக வேண்டும்.

# யதார்த்தமாக வாழப் பழகிக்கொள்வது

# கல்வியோடு கூட மென் திறன்களையும் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது

# நம்மால் முடியும் என்ற முழு தன்னம்பிக்கை

என்ற மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.

ஆட்குறைப்பில்…

ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடைபெறும்போது, இவ்வளவு பேர்கள் நம் அலுவலகத்தில் பணி புரிந்தால் போதும்.

மற்றவர்களை அனுப்பிவிடலாம் என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறார்கள்.

வேலை செய்பவர்களில் யாருக்குப் பாசிட்டிவ்வான எண்ணம் இருக்கிறது, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் யார்,
கம்பெனி மேல் நம்பிக்கை வைப்பவர்கள் யார் என்ற தகுதிகளை அலசியபின்பே நிறுவனம் அவர்களைத் தக்க வைத்துக்கொள்கிறது.

வேலை தருகிற முன்னணி நிறுவனங்கள் இளைஞர்களுக்கு
ஏற்கனவே இருக்கிற படிப்பைத் தவிர. மென் திறன் தகுதிகள்
இருக்கும் என்று கணக்கிடுகிறது.

இந்த மூன்று அம்சத் திட்டங்கள் இருந்தால் இவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து விடுகிறது.

விவரம் அறிந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமின்றி, இந்த மென்திறன் தகுதியை வைத்துத்தான் பெரும்பாலும் வேலை தருகிறார்கள்.

அது தவிர நீங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கு மட்டுமின்றி அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும் பெரிதும் உதவும்.

நடைமுறை வாழ்க்கைக்கும்…

நடைமுறை வாழ்க்கையில் பார்த்தால், ஒருவருடைய உறவைப் பெறுவது மிகவும் சுலபம்.

ஆனால் அந்த உறவை வெகுகாலம் தக்க வைத்துக்கொள்வது கடினம்.

நீங்கள் தனி நபரல்ல.

நாளை நீங்கள் உயர்ந்த பதவியை அடையப் போகிறீர்கள்.

உங்களிடம் பலர் வேலை செய்யப் போகிறார்கள்.

ஏன், நீங்களே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

அத்தகைய நிலையில், நீங்கள் தலைவராக இருந்து கொண்டு வழி நடத்தும் நேரம் வரலாம்.

அந்நேரத்தில் நீங்களும், உங்களுடன் பணிபுரிபவர்கள் இந்தத் தகுதியைக் கொண்டிருந்தால்தான் குழுவாக நீங்கள் செயல்பட முடியும்.

உலகம் முழுவதும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் நம் வெற்றி கை கூட, மற்றவர்களிடம் எவ்வாறு நாம் பழகுகிறோம், அவர்கள் மதிக்கத்தக்க நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் மென்திறனால் மட்டும் சாத்தியம்.

நீங்கள் மனிதர்களாகப் பிறந்து, மனிதர்களாகவே மறைந்து விடக்கூடாது. நீங்கள் தலைவராகப் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனெனில், ஒவ்வொரு இளைஞர்களுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறான்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More



சிறுவயதிலிருந்தே கதைகளைப் போலவே தன்னம்பிக்கை கட்டுரைகள் புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வம் அதிகமாக இருந்தது. பெரிய சாதனையாளர்கள் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு விரும்பி படிப்பேன். எல்லோரையும் விட அதிகமாய் சிறப்பாய் சாதிக்க, மனிதர்கள் எப்படி அதை செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருந்தது. படுக்கையில் தனிப்பட்ட சிறப்பு தன்மைகள் அவர்களிடம் இருந்ததையும் அவர்கள் சாதிக்க வைத்த ரகசியம் என்பதையும் உணர முடிந்தது. 

அதை நான் படித்து ஊக்கம் அடைந்தது போலவே மற்றவர்களும் அடைய வேண்டும். நான் பெற்ற நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற ஆவலில் வெளிப்பாடுதான் தன்னம்பிக்கை கட்டுரைகள்.

 நிறைய பேர் ஒரு நல்ல வழி கிடைத்தால் கண்டிப்பாக மாறுவாள் ஒரு நல்ல தீர்ப்பு வந்தால் போதும் பற்றிக்கொண்டு சுவாலையாக மாறாவிட்டால் முடியும் அப்படிப்பட்ட தகுந்த நபர்களை ஒரு சிலருக்காவது என் எழுத்துக்கள் பற்ற வைக்க முடிந்தால் அதுவே பெரிய பாக்கியம் என்று நினைக்கிறேன்.

 ஏனென்றால் நானே அப்படிப்பட்ட எழுத்துக்களைப் படித்து உருவானவன். நான் கேட்டதை திரும்பி தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். அதனாலேயே நல்ல விஷயங்களை எழுத விரும்புகிறேன்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு தோல்விகள் அடைந்தாலும் எவ்வளவு ஏமாற்றங்கள் ஏற்ப்பட்டாலும், எவ்வளவு துன்பங்கள் மற்றும் இறக்கங்கள சந்தித்தாலும் வாழ்வதிலேயிருந்து பின் வாங்க முடியுமா ? 

அனுபவிக்கத்தான் வாழ்க்கை என்பது 100 % உண்மை. ஆனால் பலர் சுகத்தை அனுபவிப்பதற்கு பதிலாக கஷ்டத்தை அல்லவா அனுபவிக்கிறார்கள். அதிலேயிருந்து விடுபட வழியைத் தேடி அலைகிறார்கள். செல்லும் வழியெல்லாம் முட்பாதைகள். அதை கடப்பதற்கு அவன் மனம் தயாராக இருந்தாலும் அவன் உடம்பு அதை கடக்க மறுக்கிறது.



எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மனத்தை திடப்படுத்திக் கொண்டு அந்த கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து கடக்கிறான். அவனுக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் கடுகளவு நம்பிக்கை. அதாவது 'தன்னம்பிக்கையோடு செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றியை கொடுக்கும் ' என்ற பல சாதனையாளர்களின் வாக்கு என்றாவது ஒரு நாள் மெய்படும்' என்பதால் தன வாழ்க்கையினை நம்பிக்கையோடு தொடர்கிறான்.




மனதிற்கு இரண்டே விஷயங்கள் தான் தெரியும். அதாவது 'வேலையை செய் ' என்று சொல்லும். அல்லது ' வேலையை செய்யாதே' என்று சொல்லும். இதை 'நினை ' அல்லது 'நினைக்காதே ' என்று கூறும். 'அங்கே போ ' அல்லது 'போகாதே ' என்று எச்சரிக்கும். இது தான் மனதின் குணம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நேர்மறை எண்ணங்கள் அல்லது திர்மறை எண்ணங்கள் இந்த இரண்டு தான் மனதுக்கு தெரியும். இந்த இரண்டிற்குமிடையில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் எதை தேர்ந்தெடுப்பது என்பது குழம்பி தடுமாறி தவிக்கிறான். எதனாலென்றால் நண்பர்கள் ஓன்று சொல்லியிருப்பார்கள். தான் கேள்விப்பட்ட சாமியாரிடம் கேட்டபோது அவர் ஓன்று கூறியிருப்பார். குடும்பத்தார்கள் ஒரு வழியை காட்டியிருப்பார்கள்.இப்படி ஆளுக்கொரு வழி சொல்லும்போது அவன் மனம் குழப்பத்திற்குள்ளாகி அவனுடைய எண்ணங்கள் சிதறி முடிவில் ஏனோதானோவென்று அரைகுறை மனதுடன் ஒரு முடிவை கடைசி வினாடியில் எடுக்கிறான். பிறகு தான் அவனுக்கு தெரிகிறது அது தவறான முடிவு என்று. அதன் பிறகு தனக்குத்தானே நொந்துகொண்டு தன்னுடைய தோல்விக்கான காரணத்தை மற்றவர்கள் மீது போட்டுவிட்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான்.



இதை எளிதாக விளக்கலாம். 'ஒரு பூட்டுக்கு ஒரு சாவி இருக்கின்றது ' என்று வைத்துக் கொள்வோம். பூட்டு உனது வாழ்கையைக் குறிக்கின்றது. சாவி என்பது உனது எண்ணத்தை பிரதிபலிக்கிறது. திறக்கும் திசை உனது முடிவை (நேர்மறை அல்லது எதிர்மறை) காட்டுகின்றது. பூட்டு திறப்பதை வெற்றியையும், பூட்டியே இருப்பது தோல்வியையும் காட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம இப்போது பூட்டை திறப்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதன் சூட்சமம் சாவியை வலது திசையில் திருகினால் பூட்டு திறந்து கொள்ளும். சாவியை இடது திசையில் திருகினால் பூட்டு பூட்டிக்கொள்ளும். ஏனென்றால் பூட்டுவதற்கு ஒரு சாவியும் திறப்பதற்கு ஒரு சாவியும் இருப்பது இல்லை.

அதுபோலத்தான் வாழ்க்கை. வாழ்க்கையினை சந்தோஷமான பாதையில் பயணிக்கலாம் அல்லது துக்கமான பாதையில் நடக்கலாம். அதை தேர்ந்தெடுப்பது உன் கையில் தான் இருக்கின்றது.

 

அப்படித்தான் ஒருவன் பயணம் செய்து கொண்டிருக்கும்போது இரு பாதைகள் பிரிந்து சென்றன. ஒரு பாதை 'சொர்க்கம் ' செல்லும் வழி என்றும் எதிர் திசையில் 'நரகம் ' செல்லும் பாதை என்றும் இருந்தது. இரண்டும் ஒரு வழி பாதை. ஒரு முறை ஒரு வழியில் சென்றால் திரும்ப வர முடியாது. ஆகவே பாதையை தேர்தெடுக்கும் போது மிகவும் ஜாக்க்ரதையாக இருக்க வேண்டும்.

அவனோ சொர்கத்தின் திசையை பார்த்தான். அவனுக்கு ஆச்சர்யம். ரொம்ப போனால் ஓரிருவர் தான் சென்று கொண்டிருந்தனர். ஆனால் நரகம் செல்லும் பாதையில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாய் வரிசையில் காத்திருந்தனர். அங்கே அவர்களை வரவேற்ப்பதற்க்கு ஆண்களும் பெண்களும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் பகட்டான சூழ்நிலையில் கவர்ச்சிகரமான ஆடையணிந்து வசீகர பேச்சில் பலவிதமான வாக்குறுதிகளை அள்ளித்தந்து கொண்டிருந்தனர். அதாவது 'இந்த நரகத்தினுள்ளே அழகிய பூஞ்சோலைகள்,நீர்வீழச்சிகள், பழத்தோட்டங்கள், அறுசுவை உணவுகள், நடன நாட்டிய நிகழ்ச்சிகள், சினிமா, கேளிக்கைகளை அனுபவிக்கலாம்' என்கிற விளம்பரங்கள். அதை கணினி மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை காண்பித்துக்கொண்டிருந்தனர். அதைப் பார்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்தவர்கள் எல்லோரும் அஹா ஓஹோவென்று ஆச்சர்யமாகவும் ஆர்வமாகவும் ரசித்துக் கொண்டிருந்தனர். 





ஆனால் சொர்க்கத்தில் வரவேற்ப்பதற்க்கு ஆட்கள் யாருமில்லை. அங்கிருப்பவர்களிடம் இங்கு அழகிய பூஞ்சோலைகள்,நீர்வீழச்சிகள், பழத்தோட்டங்கள், அறுசுவை உணவுகள், நடன நாட்டிய நிகழ்ச்சிகள், சினிமா, கேளிக்கைகளை அனுபவிக்கலாமா? என்று அவன் கேட்டான். அங்குள்ளவனோ ஓ ! அனுபவிக்கலாமே ! என்று அவன் சொன்ன பதில். 'கிழக்கே போனால் பூஞ்சோலைகள், நீர் சுனைகள் இருக்கின்றது. மேற்கே அறுசுவை உணவுகள், அதற்க்கு மேலே வலது பக்கம் நடன நாட்டிய நிகழ்ச்சிகள், இடது சினிமா மற்றும் கேளிக்கைகளை அனுபவிக்கலாம்' என்றார்.

"அப்படி கண்ணுக்கெட்டிய தூரம் ஒன்றுமே இருப்பதாக தெரியவில்லையே ! எப்படி இருக்கும் என்பதை காட்டுங்கள் " என்றான்.
அதற்கு அவனோ "அவற்றை காட்ட முடியாது. நேரடியாகத்தான் அனுபவிக்க முடியும்" என்ற பதிலில் அவனுக்கு திருப்தி இல்லாமல் இருந்தான். மேலும் 'இந்த சொர்கத்தில் எதுவுiமில்லை போலிருக்குது. அப்படியிருந்தால் ஏதாவது ஒரு போட்டோவாவது வைத்திருக்கலாமே இதனுள்ளே போனால் நாம் அனுபவிக்கமாட்டோம். போவது சுத்த வேஸ்ட்' என்ற முடிவுக்கு வந்து நரக பாதையில் நடந்தான். 


பலத்த வரவேற்ப்புடன் வசிகர பேச்சில் மயங்கி சிரித்துக்கொண்டே உள்ளே காலடி வைத்தான். அவன் காலடி வைத்தது தான் தாமதம். எங்கிருந்தோ இரு அரக்கத்தனமான குண்டர்கள் அலேக்காக ஒரே தூக்கு தூக்கி ஓரிடத்தில் போட்டனர். அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது. அங்கிருப்பவர்கள் கஷ்டத்தை கொடுக்கும் ஆசாமிகள், ரத்தத்தை உறிஞ்சும் அயோக்கியர்கள், உழைப்பை கசக்கி பிழியும் எத்தர்கள். பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள், கொலைக்கு அஞ்சாத பாதகர்கள், பெண்களை இம்சை படுத்தும் காமுகர்கள். இவர்களிடம் சிக்கிவிட்டோமே ? இவர்களா சுகத்தை கொடுப்பவர்கள் ? இவர்களிடம் வசமாக மாட்டிக்கொண்விட்டோமே ! புலம்பியபடி அங்குள்ளவர்களிடம் கேட்டான்.

" கணினி மூலம் பலவற்றை அழகாக காட்டுனீர்களே, அதன்படி இம்மியளவு இல்லையே " கோபத்தில் கொப்பளித்தான்.

"ஒ.. அதுவா. அவைகளெல்லாம் உங்களை கவருவதற்காகத்தான். ஆரம்பத்தில் இங்கு ஒருவர் கூட வரவில்லை. பிறகு தான் நன்றாக யோசித்து மக்களின் பவீனங்களை ஆராய்ந்தது இந்த மாதிரி ஏற்பா டு பண்ணினோம். வெகுநல்ல பலன் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. இங்கு உள்ளே வரும் ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் எங்கள் சுகம் இருக்கின்றது .உங்கள் மூளையை மழுங்கடித்து ஆயுள் பூராவும் எங்களுக்கு அடிமையாக்குவதே எங்கள் வேலை. இந்த பொய் , பித்தலாட்ட, ஏமாற்று வேலைகளை நாங்கள் தெளிவாக பிசிறு இல்லாமல் பிசகாமல் செய்து வருகின்றோம். உங்கள் சந்தோஷங்கள் கணினியில் பார்த்ததோடு முடிந்துவிட்டது. இனி உங்களுக்கு எப்போதும் கஷ்டகாலம் தான் " என்ற பதிலை கேட்டு அவன் மூர்ச்சையானான்.

அப்போது தான் அவனுக்குப் புரிந்தது. அந்த சொர்கத்தில் தான் உண்மையான அனைத்து சந்தோஷங்கள் இருக்கின்றது. ஆனால் இங்கு போல் அங்கு பசப்பு வார்த்தைகள் இல்லை. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இல்லை. ஆண் பெண் வசீகரமில்லை. வெளிப்புறத்தோற்றத்தை ஏமாந்துவிட்டேனே ! என்று அலறினான். இந்த மாதிரி தான் அனைவருடைய வாழ்கையில் நடக்கின்றது. 

ஆக ஆம் அல்லது முடிவை எடுக்கும் போது ஒன்றிக்கு இரண்டு தடவை நன்றாக ஆராய்ந்து அறிந்து உனது எதை விரும்புகின்றதோ அதை நம்பிக்கையுடன் துணிந்து செயல்படுத்தவேண்டும். வீண் புகழ்ச்சி, வார்த்தை ஜாலங்கள், கவர்ச்சி வசீகரத்தில் மயங்காமல் மனதை சிதறடிக்காமல் உண்மையான சந்தோசம் தரும் வாழ்க்கைப் பாதையில் எவ்வித கஷ்டமில்லாமல் எளிதாக வாழலாம் . அது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து இருக்கின்றது.

கிடைக்கின்ற சிறிய தோணி கொண்டு வாழ்க்கை கடலை கடப்பதற்கு தயாராக இருக்கவேண்டும். பெரிய கப்பல் வரும் வருமென்று நினைத்து வாழ்கையின் ஆரம்ப நிலையிலே இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்காது. ஆகவே முதலில் திருப்தியான சிறிய வாழ்க்கையினை ஆரம்பியுங்கள்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More

Image result for தன்னம்பிக்கை கட்டுரைகள்

இந்த உலகின் வெற்றியாளர்கள் அனைவருக்கும் பணம் இருந்ததோ இல்லையோ, குடும்பச்சூழல் நன்றாக இருந்ததோ இல்லையோ, ஒன்றே ஒன்று நிச்சயமாக இருந்தது; அது தன்னம்பிக்கை.தன்னம்பிக்கை என்பது ஆற்றல் வாய்ந்த சிறப்பியல்பு; அது உங்களை ஊக்குவிக்கும்; உள்ளாற்றலை மேம்படுத்தும். தன்னம்பிக்கை என்பது உங்கள் திறமையின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை. நீங்கள் விழுகிற ஒவ்வொரு முறையும் உங்களை எழுந்து நிற்க செய்வது உங்கள் தன்னம்பிக்கை தான். வெற்றிக்கும், சாதனைக்கும் தன்னம்பிக்கை வேண்டும்.

தன்னம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் இயல்பு என்றும், இயல்பாகவே தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அதை உருவாக்கி கொள்ள முடியாது என்றும், எண்ணிக் கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.உங்களுக்கு சொந்தமான சிறந்த அம்சங்களில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே உங்கள் தன்னம்பிக்கை. உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் வாழ்வை வடிவமைக்கிறது.

உங்களை நம்புங்கள் : உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் எனில் முதலில் உங்களை நம்புங்கள். அடுத்து உங்களை சுற்றியிருப்பவரை நம்புங்கள். பிறகு கடவுளிடம் 
நம்பிக்கை வையுங்கள்.உங்கள் முதலடியை நம்பிக்கையுடன் நீங்கள் வைப்பீர்களேயானால் உலகத்தின் நெடுஞ்சாலைகளை எல்லாம் நடந்து முடிந்தாகி விடும். உங்கள் வாழ்க்கை என்பது ஒரு நெடும் பயணம். நீங்கள் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் துாரம் பயணிக்க வேண்டும் என்றாலும் முதல் அடியை எடுத்து வைத்து தான் அப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இன்று முதல் நீங்கள் தன்னம்பிக்கையான மனிதர் தான்.
நம்புவதற்கான வழித்தடங்கள் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பெறக்கூடிய தகுதி 
உங்களுக்கு இருப்பதாக நம்ப துவங்குகள். சுயமாக சிந்திக்கவும், செய்து முடிக்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தேவையான ஆற்றல் உங்களுக்கு இருப்பதாகவும் நம்புங்கள். நாம் மற்றவர்களால் ஏற்கப்படுவோம்; மதிக்கப்படுவோம் என்று நம்புங்கள்.நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் சுயமரியாதை உடையவர் தாம்.
நீங்கள் சுயமரியாதை காட்ட துவங்கி விட்டால் இதுவரை உங்களிடமிருந்த அச்சமும், 
தயக்கமும் உங்களை விட்டு நீங்கி விடும். உங்கள் திறமைகளில் ஆற்றல்களில் நம்பிக்கை உடையவராயிருங்கள். செயலாற்றலில் நான் தான் அதிகம் உள்ளதில் என்னுடையது தான் என்ற நம்பகத்தன்மையை பெறுங்கள்.

நேர்மறை சிந்தனை : தன்னம்பிக்கையை வளர்க்கும் குணம் நேர்மறை சிந்தனைக்கு உண்டு. ஒரு வகுப்பாசிரியர் கண்ணாடி டம்ளரில் பாதி நீர் நிரப்பி எடுத்து வந்தார். பிறகு மாணவர்களிடம்,''இங்கு என்ன இருக்கிறது,'' என்றார். ஒரு மாணவர், ''இந்த டம்ளரின் பாதி தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது,'' என்றார். மற்றொரு மாணவர், ''இந்த டம்ளரில் பாதி காலியாக உள்ளது,'' என்றார். இரு மாணவர்களில் யார் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் என்பது உங்களுக்கு புரிந்து விடும்.''எது இல்லை என்று சிந்திப்பதை விட்டு விட்டு எது இருக்கிறது,'' என்பதை நினைப்பது தான் ஒருவரது தன்னம்பிக்கையின் அடையாளம்.பொதுவாக மனித மனம் நல்ல விஷயங்களை கவனிப்பதை விட தீய விஷயங்களை கவனிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. தன்னம்பிக்கையை சிதைத்து விடுவதை யாரும் புரிந்து கொள்வதே இல்லை.ஒரு பழமொழி உண்டு. 'பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்' 'நீ எதை எண்ணுகிறாயோ அதுவே நிகழ்கிறது' என்கிறது பகவத்கீதை. நீங்கள் ஒரு விஷயம் குறித்து நல்லதாக நினைக்கும் போது உங்கள் எண்ணங்கள் பிரபஞ்சத்திலுள்ள பேராற்றலை இழுத்து நல்லதையே நடத்தி தருகிறது.உன்னால் முடியும் என்று நீ நினைத்தால் அது சரிதான்.உன்னால் முடியாது என்று நீ நினைத்தால் அதுவும் சரிதான்.

இலக்குகள் : உங்களின் மகத்தான இலக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. பயிற்சிக்காக சிறு சிறு இலக்குகளையும், நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள். அந்த இலக்குகள் எளிதாக அடைய முடிந்ததாக இருக்கட்டும். இது உங்களுக்கு உபரியான ஆற்றலை தரும்.உதாரணமாக ஒரு மாணவர் 100 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை தேர்விற்காக படிக்க வேண்டும். அப்புத்தகம் படிக்க நான்கு நாட்கள் அவகாசமுள்ளது. இப்போது இதன் சிறு இலக்கு 25 விழுக்காடு பாடங்களை படித்து முடிப்பது தான். நான்கு நாட்களில் முழுப்புத்தகத்தையும் படித்து விட முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்து விடும். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமானால், நல்லதொரு குறிக்கோளை உருவாக்கிடல் வேண்டும். குறிக்கோள், தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.
இடுப்பிற்கு கீழே முழுவதும் உணர்வற்று போன பின்பும் ஜோனி என்ற பெண் மிகச்சிறந்த ஓவியராக பெயர் எடுத்தார். பெரிய ஓவியராக வேண்டும் என்று ஜோனியிடம் தோன்றிய குறிக்கோளே அவருக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.தவழ்ந்து கொண்டிருக்கும் சிறு குழந்தையினுள் தோன்றும், எழுந்து நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் அல்லது உந்துதலே அக்குழந்தையினுள்எழுந்து நடக்கும் தன்னம்பிக்கையை தருகிறது. காந்தியை இங்கிலாந்து பிரதமர் அரை நிர்வாண பக்கிரி என்று கூறியபோதும், அது பற்றி சிறிதும் கவலைப்படாமல் வட்ட மேஜையின் மாநாட்டில் தன் கருத்துக்களை ஆழமாக பதிவு செய்தார். ஒருவனை தன்னம்பிக்கையாக திகழ வைக்கும் ஆற்றல் நல்ல குறிக்கோளுக்கு எப்போதும் உண்டு. நம்முடைய சிந்திக்கும் முறை நம்முடைய மனதை ஆற்றல் மிகுந்ததாக மாற்றுவதுடன் ஆழ்மனதையும் துாண்டி விடுகிறது. நமது எண்ணங்கள் மாறும் போது நம்மை சுற்றியுள்ள அனைத்தும் நம் தன்னம்பிக்கை 
அதிகரிக்கும் விதமாக மாறி விடுகிறது.

திறமை : திறமையும், தன்னம்பிக்கையும் நேர்கோட்டில் பயணிப்பவை. திறமை என்பது நாம் பார்க்கும் துறையில் அடைந்துள்ள செயல் திறன் தான். நம்முடைய திறமையை வளர்த்து கொண்டே ஆக வேண்டும். போட்டி மிகுந்த தன்னம்பிக்கையை அதிகரிக்க மட்டுமல்ல. நீங்கள் வெற்றி பெறவும் தான்.நமக்குள்ள பெரிய வேலைகளை பிரித்து சிறு, சிறு வேலைகளாக மாற்றி ஒவ்வொன்றாக முடித்து வந்தால் நம்முன் தன்னம்பிக்கையையும் அதிகரித்து செயல் திறனும் அதிகரிக்க இயலும். சுயக்கட்டுப்பாடு தன்னம்பிக்கைக்கு எதிரானது அல்ல. அது தன்னம்பிக்கையுடன் இணைந்து பயணிப்பது, தன்னம்பிக்கையை அடையாளங் காட்டுவது, தன்னம்பிக்கையை வளர்ப்பது.தன்னம்பிக்கை, மனதில் நாம் விதைக்கும் எண்ணங்களால் வளரும் பயிர்.

நேர்மை : தன்னம்பிக்கையும் கம்பீரமும் தன்னால் வந்து விடுகிறது. சிங்கத்திற்கும் நரிக்கும் உள்ள வேறுபாட்டை பார்த்தால் அது புரியும் என்கிறார், விவேகானந்தர். சிங்கம் தான் வேட்டையாடிய உணவை தான் உண்ணும். ஆனால் நரியோ மற்ற விலங்குகள் வேட்டையாடிய உணவை திருடி தின்னும் வழக்கம் உள்ளது. அதனால் நரி எப்போதும் தலையை தாழ்த்தி அவநம்பிக்கையுடன் செல்கிறது. ஆனால் சிங்கம் தன்னம்பிக்கையுடன் நடை போடுகிறது. நாளும் தன்னம்பிக்கை விதைகளை விதைப்போம் தன்னம்பிக்கை எனும் சுடரொளி வாழ்வில் மின்ன வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ்வோம்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன். 

Leave a Comment Read More







தன்னம்பிக்கைக்குத் தேவையானதும்  அ வசியமானதும்!
தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும் கீழ்கண்ட எளிய முறைக ளை நாம் பின்பற்றினால் நமது லட் சியத்தை எளிதில் எட்ட முடியும்.

ஆடை

உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பலவாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நி லைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ் டைலுக்கு மாறி னால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கப்படு த்தும் குணம் நாம் அணியும் ஆடைகளு க்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்த வும்.


வேக நடை

அட வேக நடையில் என்ன ஆகப்போகிறது என்றுதா னே நினைக்கிறீர்கள். ஒருவரதுநடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறா ரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமா ன நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியு ம் என்றநம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றி லிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமா ன நடையில் கூட்டுங்கள்.

நிமிர்ந்த நிலை

எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களைதொங்கிய படியே வந்தால் அவ ரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமி ர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர் களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பி க்கை உள்ளது என்பது சொல்லாமல் சொல் லும் குணமா கும். பார்ப்பவருக்கும் நாம் நல்ல தன்னம்பிக்கை உடையவர் என்ற உணர்வை உண்டாக்கும். ஆகவே சரியான நிலையில் நடப்பது, உட்கார்வது, நிற்பது நல்லது.



கேட்பது







கேளுங்க! கேளுங்க! நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பே ச்சை அடிக்கடி கேட்கவும். 30 – 60 நொடிக்குள் உங்க ளது லட்சியம் மற்றும் எதி ர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்த மாக பேசி பழகுங்கள். அல் லது எவ்வப்போது தன்னம் பிக்கையை தூண்டவேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.

நன்றி

உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடை த்திருக்கும்.அவற்றை பட்டியல் இடுங் கள். அது உங்களது படிப் பாக ட்டும், உ ங்களதுதிறமையாகட்டும், நல்ல உற வாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங்கள் நம் வாழ் வில் நடந்து உள்ளது என்பது தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ உதவியாக இருக்கும்.

மனதார பாராட்டுங்கள்



நம்மை நாமே “நெகட்டிவ்”வாக நினைக்கும் போது, மற்றவர்களை பார்ப்பதும்,பேசுவதும் கூட நெகட்டிவ் வாக இருக்கும்! இதிலிருந்து விடுபட முதலில்மற்றவர்களை மனதார பாரா ட்டக் கற்றுக் கொள் ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங் கள், மற்றவர்கள் பற்றி குறைகூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்ற வர்களுக்கு பிடித்துப் போகும். இதனா ல் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கு ம். மற்றவர்களின் நல்ல குணாதிசய ங்களை காணும் போது, நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங் களும் தானே தெரியவரும்.

முன்னாலே

பள்ளி, கல்லூரி, விழா மற்றும் கூட்டங்களில் அமரும்போது, எப் போதும் பின் இருக்கையில் அமர வே விரும்புவர். இது தன்னம்பிக் கை குறைபாடாகும். ஆகவே இனி மேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் உங்கள் மனதில் உள்ள பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.

பேசுங்க
சிலர் பலர் கூடி இருக்கும் போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத் து விடுவார்களோ என்ற பயம் தான். இனி பயம் இன்றி உங்கள் மனதி ல் பட்டதை தைரியமாக சபைக ளில் எடுத்துப் பேசவும். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக் கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வர். எல்லோ ரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக் கை உங்களை தேடி,ஓடி வரும்.

உடல்வாகு

நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கு ம். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம் மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டா ல், தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்!

நாடு
நாடென்ன செய்தது நமக்கு… என கேள்விகள் கேட்பது எதற்கு? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று சற்று சிந்தித்தால் பலன் கிடைக்கும். நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்கக்கூடாது . நம்மை சுற்றி உள்ளவர்கள் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் சிந்தித்து, நம் மை ஈடுபடுத்திக் கொண்டால், தன்ன ம்பிக்கை வளரும். இதனா ல் ஏற்படும் தன்னம்பிக்கை நமது எல்லாத் திற னையும் வெளிக்காட்ட உதவியாக இருக்கும் என சொல்லவும் வே ண்டுமோ?

இவற்றை நாளைக்கு என தள்ளிப் போடா மல் இன்றே “இன்ஸ்டண்ட்’ முடிவு செய்து, துவக்குங்கள். 



Leave a Comment Read More

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

""நான் உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''

பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.

அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும், அவர் மனைவியும் வாழ, ஓரளவாவது உதவியாக இருக்கும்.



""விபத்து சம்பந்தமான போலீஸ் விசாரணை, விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர் தர ஒப்புக் கொண்ட இழப்பீடு போன்ற சகல விவரங்களையும் சேகரித்து, அவரிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். சென்னையில், தலைமை அலுவலகத்தில் தருவார்களாம்... சென்னை அவருக்கு புதிது. நீ கொஞ்சம் அவருக்கு உதவி செய்தால் நல்லது; செய்வாய் என்று நம்புகிறேன். மற்றபடி உடம்பை பார்த்துக் கொள். பொங்கலுக்கு கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும். உன் அப்பா பரமேஸ்வரன்...' என்று எழுதப்பட்டிருந்தது.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் ராமசாமி.
ஒரு வினாடி யோசித்தவன், சட்டென சாவி எடுத்து வந்து, கேட்டைத் திறந்தான்.

""வாங்க சார்... உட்காருங்க...'' என்றவன், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தயங்கியபடி உள்ளே வந்த ராமசாமி, தண்ணீரை வாங்கிப் பருகினார்.

""சாப்பிட்டீங்களா?''

""இல்லே... வழியிலே இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டேன். பஸ் லேட்டு, காலையில காரைக்கால்லே கிளம்பினா, சாயங்காலம் மெட்ராஸ் போயிடலாம்ன்னு உங்கப்பா சொன்னார். பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு... அதான்... அகாலத்திலே வந்து...''



""அதனாலே என்ன... பரவாயில்லை.''



பிரிட்ஜை திறந்து பார்த்தான் ஆனந்த்.



தோசைமாவு இருந்தது. நான்கு தோசை சுட்டு, மிளகாய் பொடி, எண்ணெய், தண்ணீர் கொண்டு வந்து, டேபிள் மேல் வைத்தான்.

""சாப்பிடுங்க... இதோ வர்றேன்,'' என்றவன், வாசல் பக்கம் மொபைலுடன் போனான்.

திரும்பி வந்த போது, சாப்பிட்டு முடித்து, கை நிறைய பேப்பர்களுடன் காத்திருந்தார் ராமசாமி.

""சொல்லுங்க... என்ன நடந்தது?'' என்று, அவர் எதிரில் அமர்ந்து, பேப்பர்களை வாங்கிப் பார்த்தான்.

பையனின் போட்டோ இருந்தது. 22 வயதில், அழகாக, பதவிசாக இருந்தான் பையன். ஆனந்துக்கு கண்கள் கலங்கின.

முகத்தை துடைத்துக் கொண்டார் ராமசாமி.

""இவனுக்கு முன்னாலே பிறந்த நாலஞ்சு பேரும், சின்ன வயசிலேயே போய் சேர்ந்துட்டாங்க... இவன் தான் தங்கினான். மகேஷ்ன்னு பேர்; கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்... பொறுப்பான பிள்ளை. ஸ்காலர்ஷிப்லயே பி.இ., முடிச்சான். வேலை கிடைச்சுட்டா, நம்ம கஷ்டம் தீர்ந்துடும்ன்னு வாய்க்குவாய் சொல்வான்; வேலையும் கிடைச்சுது. என்னையும், என் மனைவியையும், நிற்க வச்சு நமஸ்காரம் செய்துட்டு, மெட்ராஸ் கிளம்பினான். பஸ் ஸ்டாண்ட் போக, ரோடு கிராஸ் செய்யறப்போ, வேகமா வந்த டிராவல் வேன் மோதி, ஸ்பாட்லேயே...'' மேல் துண்டால் முகத்தை மூடி, குலுங்கினார் ராமசாமி; பேசாமல் அவரையே பார்த்தான் ஆனந்த்.

அவராகவே தொடர்ந்தார்.

""அந்த வேன் சொந்தக்காரர், நஷ்ட ஈடு தர ஒத்துக்கிட்டார். முதல்லே அதை வாங்கவே மனசு ஒத்துக்கல. பிள்ளையை பறி கொடுத்துட்டு, அந்த பணத்திலே சாப்பிடறதான்னு வெறுப்பா இருந்தது. உங்கப்பா தான் எனக்கு ஆறுதல் சொல்லி, வாங்கிக்க சொல்லி வற்புறுத்தினார். எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் கிடையாது. என் மனைவி ஏற்கனவே நோயாளி, பிள்ளை போன துக்கத்திலே, படுத்த படுக்கையாயிட்டா... எங்களை பகவான் அழைச்சுக்கற வரை, சாப்பிட்டுத் தொலைக்கணுமே... அதனாலே, கடைசியா நஷ்ட ஈடு வாங்கிக்க சம்மதிச்சேன். உங்கப்பா தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இங்கே அனுப்பி வெச்சார். என் பிள்ளை உங்களுக்கு உதவி செய்வான்னு

லெட்டர் கொடுத்தார்.''

""செய்யறேன்... கண்டிப்பா உதவி செய்றேன்,'' என்று எழுந்தவன், அவர் படுக்க, பாயும் தலையணையும் கொடுத்தான்.

மறுநாள் காலை, காபி போட்டு அவருக்கு கொடுத்து, தானும் குடித்து, குளித்து விட்டு வந்தான்.

அவரும் குளித்து விட்டு வர, இருவருமாக பைக்கில் கிளம்பினர்.

""இங்கே நுங்கம்பாக்கம்ன்னு இருக்காமே... அங்கே தான் ஹெட் ஆபீஸ் இருக்காம்.''

""நுங்கம்பாக்கம் பக்கம் தான். நான் கூட வந்து செஞ்சு தர்றேன்,

வழியில் ஓட்டலில் டிபனை முடித்து, டிராவல் ஆபீஸ் வந்தனர்.

பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து, "செக்' கைக்கு வர மதியானம் ஆகி விட்டது.

""ரொம்ப நன்றிப்பா... எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை...''

""நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,'' என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.

கோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.

""ஒரு நிமிஷம்...'' என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.

""ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க...'' என்று, டிபன் பொட்டலம், தண்ணீர் பாட்டில் அடங்கிய பையை, அவரிடம் கொடுத்தான்.

அவர் நெகிழ்ந்தார்.

""என்னாலே உனக்கு ரொம்ப சிரமம்ப்பா. லீவு வேறே போட்டுட்டு, எனக்காக அலைஞ்சிருக்கே... ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்கப்பாவைப் பார்த்து நன்றி சொல்லணும்.''

ராமசாமி உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போக, அமைதியாக அவர் பக்கத்தில் அமர்ந்தான், ஆனந்த்.

""ஒரு விஷயம் சார்... நீங்க தேடி வந்த ஆனந்த் நான் இல்லே...''

ராமசாமி திடுக்கிட்டார்.

""என்னப்பா சொல்றே?''

""ஆமாம்... நீங்க அட்ரஸ் தப்பா வந்துட்டீங்க... நான் இருக்கிறது, யோகானந்தம் நகர் எக்ஸ்டன்ஷன். நீங்க, மெயின் யோகானந்தம் நகர் போயிருக்கணும். அது, கிட்டத்தட்ட, 2 கி.மீ., தொலைவில இருக்கு.''

ராமசாமிக்கு, "குப்'பென வியர்த்தது.

""அடடா... தப்பு செய்துட்டேனே... ரொம்ப ரொம்ப சாரிப்பா. நீ, நான் வந்தவுடனேயே சொல்லியிருக்கலாமே... அனாவசியமா எதுக்கு எனக்காக மெனக்கட்டு...''

அவரைத் தடுத்தான் ஆனந்த்.

""நீங்க வந்தது ராத்திரி பத்தரை மணிக்கு... மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கே, இங்க அட்ரஸ் தேடி கண்டு பிடிக்கறது கஷ்டம்; நீங்க மெட்ராசுக்கு புதுசு வேற. அதிலேயும், நீங்க வந்த காரியத்தை பத்தி தெரிஞ்சதுலே, எனக்கு மனசு சங்கடமா போயிட்டது...

""அதான் உங்களை சாப்பிட சொல்லிட்டு, லெட்டர்லே இருந்த நம்பருக்கு கால் போட்டு பேசினேன். நீங்க அட்ரஸ் மாறி வந்த விஷயம் கேட்டு, உங்க நண்பர், அதான் அந்த ஆனந்தோட அப்பா ,ரொம்பவே வருத்தப்பட்டார். அவர் கிட்டே, அவர் பிள்ளையோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசிட்டு... பொழுது விடிஞ்சதும், ஒரு ஆட்டோவிலே உங்களை அனுப்பி வைக்க…


இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

Leave a Comment Read More
சுயமதிப்பு

          சுயமதிப்பு என்பதுதான் நம்பிக்கையுடன் தொடர்புடையது. எனவே தன்னம்பிக்கையுடன் செயல்படும் என நினைக்கும் ஒருவர் தன்னுடைய சுய மதிப்பை வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒருவர் தன்னைப் பற்றி உருவாக்க மதிப்பீடு தான் இந்த சுயமதிப்பு யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் தங்களை அறிந்து கொள்ள வேண்டும்.


உருவம் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து அதன் பிம்பம் என்பதை அறிந்து கொள்ளாது . ஆனால் ஒரு குழந்தை தன் உருவத்தைக் கண்ணாடியில் கண்டு சிரிக்கும். மகிழ்ச்சி அடையும். தன்னையறிதல் என்பது குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பமாகிறது. ஆகவே நாம் யாராக இருக்கலாம் என்ற மாதிரி சிந்திக்கலாம் என்பதையே சுயமதிப்பு என்று கூறுகிறோம். அதில் ஒருவரது சுய மேம்பாடும் சுயமரியாதையும் தன்னை நேசிப்பதும் அடங்கும். இந்த சுய மதிப்பு என்பது நாம் பிறக்கும்போது பிறப்பதில்லை. குழந்தை பிறந்த பின்னர் தன்னையும் தன்னுடைய மதிப்பை அறிவதும் தொடங்குகிறது. நம்மைப்பற்றி நாம் எவ்வாறு வணங்குகிறோம் என்பதே சுயமதிப்பை நம்மைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்து.


நமது எல்லா விஷயங்களிலும் செல்வாக்கு செலுத்துவது ஒரு அலுவலகத்தில் அல்லது பிறிதோரிடத்தில் பணிபுரியும் போது நமது நடவடிக்கைகளின் மீது சுயமதிப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அதை நாம் பிறருடன் கொண்டுள்ள உறவுகளிலும் செயல்படும் அது நாம் பெற்றோராக மாறும் போது நமது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது நாம் செய்யும் செயல்களில் வெற்றி அல்லது தோல்வி என நினைப்பதில் முக்கிய சவாலாக விளங்குவது இந்த சுயமதிப்பு உயர்ந்த அளவில் சுயமதிப்பு இருக்குமானால் அது அர்த்தமுள்ள வாழ்க்கை.


திருப்திகரமான மனநிலைக்கு மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்கிறது என்ற உயர் சுயமதிப்பு ஏற்பட வேண்டுமானால் மதிப்பு மிக்கவர்களாக உங்களை கருத வேண்டும் இப்படிச் உயிர் சுயமதிப்பு கொண்டவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்திருப்பார்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள் மக்களுடன் நல்லுறவைப் பேணி வளர்ப்பது கருணை உள்ளம் உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள் வாய்ப்புகள் சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனும் அவளிடம் அதிகரிக்கும்.


ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா என்பது பழமொழி நம்மைப்பற்றி நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கு ஏற்ப நடவடிக்கைகளும் அமையும் சுய மதிப்பு ஐந்து வயதில் இருந்து ஆரம்பமாகி விடுகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர் சுயமதிப்பீடு ஏற்படலாம் என எச்சரிப்பது பாதுகாப்பில்லாத மனதில் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் தன்னம்பிக்கை குறைந்த மதிப்பெண் அலுவலரிடம் திடமான நம்பிக்கை வளர்க்க உதவுகிறது.


பொறுப்புணர்வை மேற்கொண்டிருப்பது தோற்றுவிக்கிறது நம்பிக்கையூட்டும் போக்குகளை உருவாகி வளர்கிறது கடவுளின் தேவையை உணர்கிறது பிறர் மீது அக்கறை காட்டுவது தன்னை தானே தூக்கி வைத்துக் கொள்ளவும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சனைகள் நெருக்கடிகளின் போது என்ற சுய மதிப்பானது உதவி கமிஷனர் அவற்றில் இருந்து அவளை மீட்க பயன்படுவது மதிப்பானது தெளிவான முடிவு எடுக்க உதவுகிறது.


ஒருவர் தன்னை எவ்வாறு மதிப்பிடுகிறார் அவர் தனது உணர்ச்சிகளை 6 விருப்பங்கள் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார் மேலும் அவரிடம் எந்த அளவுக்கு தன்னம்பிக்கை காணப்படுகிறது என்பவற்றுடன் என்ற சுயமதிப்பு தொடர்பு கொண்டுள்ளது குருடனும் சுயமதிப்பும் மிகவும் தாழ்வாக இருந்தால் அவருடைய தன்னம்பிக்கையும் அதற்கேற்பவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதை காணமுடியும்.


சுயமதிப்புடன் செயல்படும் விதம் எவ்வாறு நம்மை யார் என்று அடையாளம் காண்பதில் நமது குடும்பம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை சுயமதிப்பு நமது குடும்பத்தில் இருந்து ஆரம்பித்து விட்டார்கள் அதனால் குடும்பத்தில் நமது நமக்கு எத்தகைய இடமும் தரப்படுகிறது என்பது உற்றார் உறவினர்கள் மீது எத்தகைய மதிப்பு வைத்துள்ளனர் என்பது மிகவும் முக்கியமானது பெற்றோர் மட்டுமன்றி சுயமதிப்பு உருவாக்கும் காரணமாயுள்ளன.

பொதுவாக இந்த மாதிரியான மதிப்பீட்டு குழந்தைகளுடன் பெற்றோர் ஆசிரியர் கிடைக்கும் போது குழந்தைகள் தங்கள் தகுதியற்றவர்கள் என்ற உணர்வுடன் வளர்கிறார்களா அதனால் அவர்களது சுய பிம்பம் மிகவும் பரிதாபமாக இருக்கும் குழந்தைகளை சாதிக்கும் திறன் படைத்த எதையும் சரியாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் சுயமதிப்பும் உடையவர்களாக அவர்கள் உள்ளத்தில் கதைக்கும் போது அவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.
தன் குழந்தை ஏதேனும் கருத்து தெரிவிக்க வாய் திறப்பதற்கு முன் உனக்கு ஒன்னும் தெரியாது நீ ஒரு சரியான முட்டாள் என்று பேசுகின்ற பெற்றோரும் உண்டு இப்படி அடிக்கடி கேட்டு கேட்டு தான் அப்படித்தான் என்றால் மனம் குழந்தைக்கு வந்துவிடும் தன்னைப்பற்றிய தன்மதிப்பீடு தாழ்ந்துவிடும் வீட்டில் இப்படி என்றால் பள்ளி பருவத்தில் மாணவர்கள் மனநிலை பாதிக்கின்ற அளவிற்கு ஆசிரியர் போக்கும் காணப்படுகின்றது.

சுயமதிப்பு குறைந்தவர்களிடம் காணப்படும் சில அறிகுறிகள்


சுயமதிப்பு குறைந்தவர்களின் அரட்டை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அவர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கும் எதிலும் குற்றம் அவர்களிடமிருக்கும் பிறரிடம் நடந்து கொள்வார்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையில் பேசி அவர்கள் தங்களை மையப்படுத்தியே பேசுவார்கள் செயல்படுவார்கள் குறுகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள் 


சுயமதிப்பை வளர்க்கும் வழிமுறைகள்.


பிறர் உங்களை மதிக்கும் போது மனம் உற்சாகமாக நதியில் நீந்தும் ஆனால் உங்களை நீங்களே மதிக்காமல் போன பிறகு எப்படி உங்களை மதிப்பார்கள் .
உதவிசெய்ய பாராட்டும் பண்பு
சாதனை நோக்கம் கொள்
இருப்பு நிலையை உயர்த்து 
சுடர்மிகு அறிவுடன் இருந்து கொள்கைப் பிடிப்பு 
துணிச்சலான செயல்பாடு 
தோற்றத்தில் கவனம் தேவை 
சரியான உங்கள் உணர்வை வெளிப்படுத்துங்கள் 


இவை யாவும் இருந்தால் உங்களுடைய சுய மதிப்பு மேலும் மேலும் பெருகும் வளமுடன் வாழ முடியும்.

Leave a Comment Read More

வாருங்கள் உலகை வெல்லலாம்.



Set Your Target

  • இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்
மாணவச் செல்வங்களே உங்களின் வாழ்க்கை லட்சியம் தான் என்ன?
  • சாக்ரடீஸ், கன்பூசியஸ், புத்தர், மகாத்மா, போன்ற மகான்களாக விரும்புகின்றீர்களா, இல்லை பிஸ்மார்க், வின்ஸ்டன் சர்ச்சில், கோகலே, ராஜாஜி, அறிஞர் அண்ணா போன்ற அரசியல் மேதையாக விரும்புகின்றீர்களா?
  • பெர்னாட்ஷா, எச்.ஜி,வெல்ஸ், டால்ஸ்டாய், லின்யுடாங், பேர்ல்பக், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களான சுஜாதா ஜெயகாந்தன், அகிலன், கல்கி, ஜெகசிற்பியன், ராஜேஷ்குமார், போன்ற பெரிய எழுத்தாளர்களாக எண்ணமா?
  • அல்லது ஷேக்ஸ்பியர், மில்டன், பாரதி, இக்பால், தாந்தே, தாகூர், போன்ற கவிதாமணிகளாக ஆசைப்படுகின்றீர்களா?
  • அல்லது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பழநிபாரதி, கபிலன், முத்துக்குமார், பா.விஜய் போன்ற திரைப்படப்பாடலாசியர் ஆக விருப்பமா?
  • ரூசோ, வால்டர், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற புரட்சி நோக்கமுள்ள பேரறிஞர்களாகப் பிரியப்படுகின்றீர்களா?
  • அல்லது ஹென்றி போர்டு, லார்ட் நப்பீல்ட், டாட்டா , கார்னீஜ், லிப்டன், ராக்பெல்லர், ஜி.டிநாயுடு, டிவிஎஸ் போன்ற வணிக மன்னர்களாக விருப்பமா?
  • அல்லது டார்வின், நியூட்டன், போஸ், சி.வி, இராமன், நமது முன்னால் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல்கலாம் போன்ற அறிவியல் அறிஞர்களாக ஆசைப்படுகிறீர்களா?
  • அல்லது சங்கராச்சாரியார், விவேகானந்தர், மாரட்டின் லூதர் கிங், அப்துல் அலீம் சித்திகீ போன்ற மதப்பிரச்சாரகர்களாக விருப்பமா?
நீங்கள் யாராக விரும்புகிறீர்களோ? உங்கள் மனத்தை யார் கொள்ளை கொண்டர்களோ அவர்களையே உங்கள் முன் மாதிரியாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் மனத்தில் கொலு வீற்று ஆட்சி செலுத்தட்டும்.
வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய விரும்பும் அனைவருக்கும் தங்கள் இலக்கை அடையும் வரையிலும் குறிதவறாமல் இருப்பது மிகவும் அவசியம். குறிதவறாத பண்பு காலவிரயத்தை தடுக்கும், உழைப்பு வீணாகாமல் காப்பாற்றும். கொண்ட குறிக்கோளை அடிக்கடி மாற்றிக் கொள்ளாமல் நெடுங்காலம் உழைப்பவர்களே சாதனைச் செம்மல்களாக உயர்ந்திருப்பதை சரித்திரம் காட்டுகிறது.
ஸ்பெயின் நாட்டில் நீக்ரோ தந்தைக்கும், வெள்ளையின தாய்க்கும் பிறந்த கலப்பு இனத்தவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர், செபஸ்டியன் கோமஸ் என்பது. அவனுக்கு இளவயது முதலே ஓவியம் கற்க வேண்டும் என்பதில் தணியாத தாகம் இருந்தது. அதற்கு உண்டான பொருள்வசதி அவனிடம் இல்லை. அவனுடைய தாயும் தந்தையும் சுரங்க வேலையில் ஈடுபட்டு நாள்தோறும் மிகச் சொற்பமான பணத்தையே ஊதியமாகப் பெற்று குடும்பம் நடத்தி வந்தனர்.
கோமஸ் மிகுந்த இடைஞ்சல்களைத் தாண்டி அந்த ஊரில் இருந்த ஒரு பெரிய ஓவியரை அணுகி, அவரிடம் தனது விருப்பதைக் கூறினான். அவர் தன்னிடம் வேலை எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் அவருடைய பக்கத்தில் இருந்து அவர் எப்படி ஓவியம் வரைகிறார் என்பதையும், எப்படி வண்ணங்களை கலந்து பயன்படுத்துகிறார் என்று நுணுக்கத்தையும் கற்க வேண்டும் என்ற குறிக்கோளில் சிறிதும் நழுவாமல் இருந்தான் கோமஸ். எனவே அவன் தனது வறுமையைப் போக்க அவர் ஊதியம் எதுவும் தராத போதிலும் அவரது வீட்டில் எடுபிடி வேலைகளைச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான்.
கூலி இல்லாமலே தான் சொல்லும் வேலைகளை வீட்டோடு இருந்து செய்வதற்கு ஒரு ஆள் கிடைத்ததில் அந்த ஓவியர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். வீட்டு வேலைக்கு அவனை அமர்த்தி, நாள்முழுவதும் அடிமையைப் போல வேலை வாங்கினார்.
இதனால் எல்லாம் கோமஸ் மனம் தளரவில்லை. அவன் மிகுந்த ஈடுபாட்டோடு ஓவியரின் வீட்டு வேலைகளை மிக நேர்த்தியாகச் செய்தான். வேலைகளுக்கு நடுவே அவர் படம் வரைவதையும், அதற்கு பயன்படுத்தும் பென்சிலையும், தூரிகைகளையும், வண்ணங்களையும் நன்றாக கவனித்து மனதில் பதித்துக் கொண்டான். இரவு நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்ததும், தான் காலையில் கற்ற ஓவியங்களை வரைந்து பயிற்சி செய்தான்.
ஓவியரிடம் பயிற்சி பெற வந்தவர்கள், கோமஸின் கரிய நிறத்தையும், உருவ அமைப்பையும் பார்த்து கேலி செய்து சிரித்தனர். அவர்கள் ஓவியப் பாடங்களை கற்பதை விட, கோமஸை கிண்டல் செய்வதிலேயே காலத்தை வீணாக்கி வந்தனர் என்பதே உண்மை.
பயிற்சி பெற வந்த மாணவர்கள் கற்ற ஓவியப் பாடங்களை கோமஸ் கற்கவில்லை. ஆனால் அவர்களது நடைவடிக்கைகளை, கவனித்து வந்தான். ஓவியர் பயிற்சியின் போது மாணவர்களுக்கு அளித்து வருகின்ற பயிற்சியை உற்று நோக்கி மனதில் இருத்திக் கொண்டான். பகலில் கவனித்து வருவதை இரவில் நீண்ட நேரம் தனியாக இருந்து பயிற்சி செய்தான்.
தொடர்ந்த உழைப்பு, தணியாத ஆர்வம், குறிக்கோளை அடையும் வெறி இவற்றின் காரணமாக கோமஸ் அந்த ஓவியரிடம் முறையாகப் பயிற்சி பெற்று வந்தவர்களை விட அதி விரைவில் ஓவியக்கலையைக் கற்றுக் கொண்டான்.
அதோடு மட்டும் அல்ல, பயிற்சி மாணவர்கள் வரையும் ஓவியங்களில் காணப்படும் குறைகளை திருத்துகின்ற அளவிற்கு திறமையும், தகுதியும் பெற்றான்.
ஓவியர் கோமசிடம் காணப்பட்ட ஆர்வத்தைப் புரிந்துகொண்டார், அவனையும் தன் மாணவர்களில் ஒருவனாக எண்ணி, ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார்.
கோமஸ் வெகு விரைவில் அதி அற்புதமான வண்ண ஓவியங்களை வரைந்து மக்களின் பாராட்டுக்களைப் பெற்றான். மாத சம்பளம் கூட இல்லாத வீட்டு வேலைக்காரனாக இருந்த அவன் மக்கள் பாராட்டும் மிகச்சிறந்த ஓவியனாக மாற்றம் பெற்றது எப்படி? குறிக்கோளில் தீவிரம், மனஉறுதி, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் காரணமாகவே கோமஸ் அந்த உயர் நிலையை அடைந்தான்.
இந்த உலகத்தில் தோன்றியது அத்தனையும் மடிந்து போகும். ஆனால் இலட்சியம் மடியாது. ஒருவன் தனது இலட்சியத்திற்காக தன் உயிரைக்கூட இழந்து விடலாம். ஆனால் அந்த இலட்சியமோ பல ஆயிரக்கணக்கான மக்களின் மனங்களில் விதையாக விழுந்து, செடியாக முளைத்து, மிகப் பெரிய மரமாக நிலைத்து விடும். சோதனையும் தியாகமும் இல்லாமல் உலகில் எந்த இலட்சியமும் நிலைப்பதோ, அல்லது புகழ் அடைவதோ இல்லை என்பதை மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
எனவே மாணவர்களே நீங்களும் உங்கள் குறிக்கோளில் உறுதியாக நில்லுங்கள். எத்தனை தடங்கல்கள் வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள்.

Leave a Comment Read More