தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.






Leave a Comment Read More


அறிவியல் துறைகளுக்கிடையே உள்ள பிரிவுகள் தற்காலிகமானவை. வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆழமாகத் தோண்டினால் இருவரும் ஒரு பொதுத் தளத்தையே வந்தடைவர்.
கிரெக் ஐல்ஸ்
நாவலாசிரியர்

Leave a Comment Read More


ஊகங்கள் தான், இந்த உலகை நாம் பார்ப்பதற்கு உதவும் ஜன்னல்கள். அவற்றை, அவ்வப்போது துடைக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே வெளிச்சமே வராது.

ஐசக் அசிமோவ்
அறிவியல் புனைவு எழுத்தாளர்.

Leave a Comment Read More


பிறப்பிற்கும்  இறப்பிற்கும் இடையில்,  நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே       உனக்கு மிஞ்சும்...
 உன்னுடன் கடைசிவரை வருவதும்  இதுவே...!!

01) பெற்றோர்களை 
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!

02) பணம் பணம் என்று
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய் 
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே 
     போ...!!

03) நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!

04) நேர்மையாக
இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை
     காப்பாற்றும். ..!!

05) வாழ்வில் சின்ன சின்ன
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம்
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!

06) உன் அம்மாவிற்காக
     ஒரு போதும்
     மனைவியை விட்டு
     கொடுக்காதே...
     அவள் உனக்காக
     அப்பா அம்மாவையே
     விட்டு வந்தவள்...!!

07) உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய்
     இரு...!!

08) அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!



10) ஒருவன் துரோகி
      என்று தெரிந்து
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!

11) எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!

12) நீ கோவிலுக்கு
      சென்று தான்
       புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!

13) நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!

14) எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!

15) அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று நினைக்காதே...
      நம்மை விட 
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!!

16) பிறப்பிற்கும்
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே...!!

விதி

வினை விதைத்தவன் வினை அறுப்பான் !
தினை விதைத்தவன் தினை அறுப்பான் !!


Leave a Comment Read More


வினாடிகளை வியர்வையாக்கு…

அறுபது நிமிடங்களுடன் அறப்போர் புரி…

தினங்களைத் திட்டமிடு…

வாரங்களை வார்ப்பு செய்…

மாதங்கள் மாணிக்கங்களாகும்…

ஆண்டுகள் உன் ஆணைப்படி நடக்கும்…

வருங்காலம் உன் வரலாறு பேசும்..!


Leave a Comment Read More


கனவு காணக் கனவை நனவாக்கக் கற்றுத்தந்தவரே

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே

மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே

படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே

பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே

செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே

செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே

செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே

சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே

பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே

பண்பை விதைத்து வரும் போதகரே

ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே

ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே

போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே

போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே

தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே

தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே

அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே

அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே

உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை

உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது

நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்

நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More


"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More




இதுதான் தன்னம்பிக்கை…

“தன்னம்பிக்கை உள்ள மனிதனின்
வளர்ச்சியை யாரேனும் தடை செய்தால்,
ஏன்? தடைசெய்ய நினைத்தால்கூட போதும்
அவன் முன்பைவிட
மும்மடங்கு ஆற்றலோடு செயல்படத்
தொடங்குவான்.

அவன் உள்ளத்தில் ஆற்றலின் ஊற்றுகள் பீறிட்டு
எழும்பத் தொடங்கிவிடும்.

இதுவரை நிகழ்த்தாத சாதனைகளை எல்லாம்
அவன் நிகழ்த்தியே தீருவான்”

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


Leave a Comment Read More
யானை பலம் தும்பிக்கை

மனித பலம் தன்னம்பிக்கை!

கேலி கிண்டல் கண்டு

தன்னம்பிக்கை தூளாவதா?

நாம் தன்னம்பிக்கை தளராமல்

முயற்சியோடு பயிற்சி செய்து

முன்னேறிக் காட்ட வேண்டும்!


மரியாதை தரும் பழக்கம்

தமிழருக்கு குல வழக்கம்!

இதற்கு ஏன் சுணக்கம்?

இருகை கூப்பி வைப்போம் வணக்கம்!

நாம் அன்னை தந்தை மட்டுமின்றி

ஆசான் இறைவன் மட்டுமின்றி

மாற்றாரிடமும் கொள்வோம் இணக்கம்!


தனித்தன்மை இல்லா மனிதன்

உலகினிலே யாரும் இல்லை!

உள்ளத்தின் ஒருமைப்பாட்டில்

ஒளிந்துள்ளது வெற்றியின் சாவி!

நாம் தன்திறமை அறிந்து கொண்டால்

தவறுகளை திருத்திக் கொண்டால்

வெற்றி மேல் வெற்றி வரும்!


நொடிப்பொழுதும் வீணாக்காமல்

நேர்மையாக உழைத்துப் பாரு!

உழைத்து பார்க்கும் போது

தலை தானாய் நிமிரும் பாரு!

நாம் சூழலுக்கு ஏற்றாற் போல்

நேர்மறையாய் முடிவெடுத்தால்

தோல்வி தூர ஓடும் பாரு!


நமக்கு எது பிடிக்குமென்று

நமக்குத்தானே நன்றாய் தெரியும்!

பிடித்ததை விடாப்பிடியாய்

பிடித்துக் கொண்டாலே வெற்றி வரும்!

நாம் வெற்றி அடைந்தாலும்

தோல்வி அடைந்தாலும்

சுயமுடிவு எடுத்திட வேண்டும்!

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More



மற்றவர்கள் மீது அக்கறை காட்டுங்கள். 

உள ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றவர்கள் மீது நீங்கள் காட்டும்Emotional Bondage அவர்களுக்குள், உங்கள் மீது அன்பும், பாசமும்அதிகரிக்க செய்யும்.
அவர்கள் நிலையில் இருந்து நீங்கள் அவர்களின் துன்பத்தை புரிந்துகொண்டு அதற்க்கு உங்களால் முடிந்த உதவியும், தீர்வும் கொடுக்கும்பொது - அவர்கள் துன்பம் களையப்படுகிறது.

நேரத்தை பகிருங்கள் :-

பரபரப்பான இன்றிய கால கட்டத்தில் - அடுத்தவருக்கு நம்முடையநேரத்தை ஒதுக்குவது என்பது சற்று சிரமமான விஷயமாகதோன்றலாம்.

ஆனால், மற்றவருக்காக உங்கள் நேரத்தின் சில மணித்துளிகளைஒதுக்கும்போது உங்களுக்கு கிடைக்கும் பலன் - புதிய நண்பர்கள்,புதிய தொடர்புகள், புதிய புதிய கலைகளை, விஷயங்களைகற்றுக்கொள்ளும் சந்தர்பம்,
உங்கள் வாழ்வில் மேலும் வெற்றிகளை, முன்னேற்றங்களைஅடையும் வாய்ப்பு - இப்படி பல.


உங்கள் பணம் :-

சுயநலமாக தனக்காக, தன இன்பத்துக்காக மட்டுமே பணம்செலவழிப்பவர்களை விட, மற்றவருக்காக பணம் செலவழிப்பவர்கள் மகிழ்ச்சி கூடுதலாகவே இருக்கிறார்கள். சுற்றத்தையும்மகிழ்ச்சியோடயே வைத்து இருக்கிறார்கள்.
மற்றவருக்கு கொடுக்கப்படும் பரிசுப்பொருட்கள், உங்கள் பிறந்த நாள்,திருமண நாள், போன்ற முக்கியமான நாட்களில் முதியோர்இல்லத்துக்கும், குழந்தைகள் காப்பகங்களுக்கும் நீங்கள் அளிக்கும்நன்கொடை - இந்த சமூகத்தின் மீது உங்களுக்கு இருக்கும்அக்கறையை மட்டும் வெளிக்கொண்டு வருவதில்லை, அந்தஇல்லங்களில் இருக்கும் உங்கள் அன்பு உள்ளங்கள் மனதிலும்மகிழ்ச்சியை கொண்டு வருகிறது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


Leave a Comment Read More
Image result for தன்னம்பிக்கை வளர


ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’

‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?’’

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.

Leave a Comment Read More

Image result for கடவுள் தந்த அழகிய வாழ்வு


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு.

கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
.
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை அன்பில்
வாழ்ந்து விடைப்பெருவோம்
.
பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
.
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன். 

Leave a Comment Read More
Image result for தன்னம்பிக்கை

உன்னையே நீ தாழ்வாக நினைக்காதே,
உன் மீது நம்பிக்கை வை ,
உன் திறமையின் மீது நம்பிக்கை வை,
நானும் முன்னேறுவேன் என்று
நம்பிகையுடன் உழைத்து பார்
நீயும் ஒருநாள் பெரிய மனிதனாக
வாழ்கையில் வெற்றி பெறுவாய் வெற்றி நமதே
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம் - கண்ணதாசன்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

Leave a Comment Read More

நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தேவை . அந்த நம்பிக்கை, என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும், என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் . அப்படி இருந்தால் வெற்றி உங்களை தேடிவரும்.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால் தான். வெற்றியின் இரகசியம் “கடின உழைப்பு” என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. தன்னம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம். சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும்.

வெற்றி பெறுவோம்’ என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும். தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்
த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

Leave a Comment Read More

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே

நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்

உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்

நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே

நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்
காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே

ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்
உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்

இன்னும் சொன்னால் நம்பிக்கையில் மரணத்தை
ஜெயிக்க முடியும் ஏது உயிர்த்தெழுந்தது இப்படித்தான்

சிறந்த வியாபாரிகளை உருவாக்குவது அவர்கள் அடைந்த
நம்பிக்கைத் துரோக நஷ்டங்கள்

சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய
அசுரத்தமான தோல்விகள்

நம்பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்
நம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்

சந்தேகம்தான் தீயை வைக்கும்
நம்பிக்கைதான் தீபம் வைக்கும்

ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்
ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது

ஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்
கடல் போல் நம்பிக்கை இருந்தால்

நீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை
நீ உன் மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை

நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று அதில்
புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று

காந்தத்திலிருந்து மின்சக்தி வருவது மாதிரி
நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும்
போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி

நம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி
காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்

இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையும் காலியாகவிடாதே
ஒரு நாளும் சோர்ந்து விடாதே கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் ப+க்கிறது

இழப்பு என்பது எதுவுமேயில்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை
கர்வம் வை கிராம் கணக்கில் நம்பிக்கை வை கிலோ கணக்கில்

நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை
தண்ணீருக்கு அடியில் சென்று ஓவியம் வரைய முடியாது

தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்
உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது

நம்பிக்கை ஒன்று போதுமே
எதிர்காலம் ஒன்றைப் பார்க்கச் செய்யலாம்

நம்பிக்கை இருக்கும் போதிலே
எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்

என்னமுடியும் எதைச் செய்ய முடியும்
என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை

எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்
என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை

ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்
மல்லிகைப்பூ மணம் மாறாது

நீ எங்கே பணி புரிந்தாலும்
உன் சுயம் கெடாது.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

Leave a Comment Read More

திறமை என்னும் சாவி மட்டும் தனியே திறப்பதில்லை வெற்றி பூட்டை, தன்னம்பிக்கை என்னும் கை இல்லாமல்.


உன்னால் முடியாதது எது? புரிந்துகொள்., உலகத்தில் வானத்துக்கு கீழ் எந்நாளும், என்னாலும் முடியாது என எதுவும் இல்லை. இதை புரிந்துகொள் வெற்றி உனக்கே நன்பா..!


போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!
சோர்ந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!

மறுகணமே
கஞ்சப் பிரபு என
புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!

கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!

நாம் இழைக்கும்
தவறுகளிலே
கதைப் பேசி
பிழைக்கும் கூட்டங்கள்

இந்த
நயவஞ்சக நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!

வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின்
ஒப்பாரி சத்தமிது..

தானாய்
குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

கருணையற்ற கூட்டம்
காணும்படி,
கண்ணீரை மட்டும்
சிந்தி விடாதே!

இவர்கள் -உன்
விழி நீரிலே விளையாடும்
விந்தை மனிதர்கள் -உன்
கண்ணீரிலே கவிபாடும்
கந்தை மனிதர்கள்!

வில்லில் பூட்டின
அம்புக்கும்,
அவர்கள் நாவிலே
பிறக்கும் வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை!

இரண்டுமே
காயப்படுத்திவிட தயாராய்;

அம்பின் கூர்மையும்
மழுங்கி விடலாம்;
வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும்
மழுங்கி விடாது!

புறம் கூறிடும்
வஞ்சக கூட்டத்தின்;
நிறம் மாறிடும் நாட்கள்
வெகு தொலைவில்
அல்ல தோழா!

நன்றி கெட்ட
மனிதனின் நாக்கு;
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்!

அவனுக்கும்
ஒரு கூட்டம்;
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்!

போகட்டும்
அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!

இவர்களைப் பற்றி
இனி மனதிலே
சிந்திக்கவும் வேண்டாம்!

மறந்தும் கூட
நிந்திக்கவும் வேண்டாம்!

காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.


Leave a Comment Read More

ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது. "ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை  தயாரிக்கிறாய் . ஆனால் மனிதன் அந்த தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான். அதற்காக நீ வருந்துவதில்லையா?. அதற்கு தேனீ பதிலளித்தது.  "இல்லவே இல்லை. ஏனென்றால் மனிதன் என்னிடம் இருந்து தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் தேனை உண்டாகும் கலையை ஒரு போதும் அவன் என்னிடம் இருந்து திருட முடியாது". என்  ஒரு மனோ உன்னதமான மனப்பான்மை. இந்த மனப்பான்மை தான் நமது தன்னம்பிக்கை.

Leave a Comment Read More
முதியவரைத் துணைக் கொள்.



வேங்கை நாடு ஓர் அழகான நாடு. அந்த நாட்டை வேங்கை மாறுபவன் என்னும் மன்னன் ஆண்டு வந்தார். அவர் வயதில் இளையவர். இளைஞர்களால் நாடு முன்னேறும். முதியவர்களால் நாட்டுக்கு பயன் ஒன்றும் இல்லை என கருதினார். அவர் தலைமை அமைச்சரை அழைத்து முதியவர்களால் நாட்டுக்கு பயன் ஒன்றும் இல்லை. அவர்கள் நாட்டுக்கு சுமைதான். அவர்களை நாடு கடத்தி விடுங்கள் என ஆணையிட்டார். இதனைக் கேட்ட தலைமை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். முதியவர்களால் பயன் ஒன்றுமில்லை ஐயா. அவர்கள் நாட்டுக்கு சுமையா. அவர்களின் பட்டறிவு நாட்டுக்கு தேவை அல்லவா. ஆனால் இது அரசனின் ஆணை. என தனக்குள் நினைத்தார். ஆதலால் அப்படியே செய்கிறேன். அரசரே என கூறினார். அரசரின் ஆணை முரசறைந்து அறிவிக்கப்பட்டது. நாடெங்கும் ஒரே பரபரப்பு.
மக்கள் அனைவரும் மிகுந்த வருத்தம் தோடு முதியவர்களை அண்டை நாடுகளுக்கு அனுப் பினர். ஆனால் மதிவாணன் என்னும் இளைஞன். வயதான தன் தந்தையின் மீது கொண்ட அன்பால் அவ்வாறு செய்யவில்லை. தன் வீட்டிலேயே மறைவான இடத்தில் வைத்து பாதுகாத்து வந்தான்.
 ஒரு நாள் வேங்கை நாடு அரசவைக் கவிஞராக ஓர் அறிஞர் வந்தார். அவர் பெயர் செழியன். மன்னர் அவரை அன்புடன் வரவேற்றார். அவையில் இடமளித்தார். அறிஞர் செழியன் அவனை பார்த்து இந்நாட்டில் நான் சொல்வதை செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர் எவரேனும் உண்டா என வினா எழுப்பினார். மண்ணெண்ணெய் என வினவினார். அறிஞர் சாம்பல் வேண்டும். சங்கில் நூலை கோர்த்து தருதல் வேண்டும் செய்ய முடியுமா எனக் கூறி ஏளனமாக சிரித்தார். சாம்பலை திரிபர் என்றார். மன்னர் அதனைக் கேட்ட அவையினரை ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்ற மன்னர் அவரை நோக்கி யாரேனும் இச்செயலைச் செய்து காட்ட முடியுமா என வினவினார். எல்லோரும் அமைதி காத்தனர். மன்னர் புதிதாக வந்த அறிஞரிடம் இரண்டு நாள் பொறுங்கள். நீங்கள் சொன்னதை செய்து காட்டுவோம் என்றார். மறுநாள் அறிஞர் கூடிய செயல்களை செய்பவர் ஆயிரம் பொற்காசு பரிசாக வழங்கப்படும் என முரசறைந்து அறிவிக்கப்பட்டது.
மதிவாணன் தன் தந்தையிடம் இதனை கூறினான். தந்தையோ எவ்வளவு தானே நான் சொல்லுகிறபடி செய்து அதனை அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். மறுநாள் மதிவாணன் அரசவைக்குச் சென்றார். ஒரு தட்டில் சாம்பலான கயிற்றையும் நூலால் வார்த்தை சங்கையும் வைத்திருந்தான். அவையில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர் . இது எப்படி எப்படி என வியந்தனர் மன்னர் ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.
மன்னனைப் பார்த்து இதனை எப்படி செய்தாய் என கேட்டார். மதிவாணன் அரசு இது மிகவும் எளிது. ஒரு துண்டு கயிற்றைக் கட்டி தட்டில் வைத்து அதனை தீ வைத்துக் கொளுத்தி கயிறு போல காட்சி அளித்தது கலையாமல் கொண்டு வந்தேன் என்றார். அது சரி சங்கில் நூல் எவ்வாறு ஒரு புறத்திலிருந்து மறுபுறம் சென்றது என மன்னன் வினவினார்.. ஒரு கட்டத்தில் மெல்லிய நூலைக் கட்டி சங்கின் எதிர்புறத்தில் கற்கண்டைத் ஒரு துண்டு ஒன்றை வைத்து அதனுள் நுழைந்து என்னை நோக்கி எதிர்புறம் வந்துவிட்டது விட்டுவிட்டு நூலை கோர்த்து விட்டு ஏனென்றால் மன்னர் நன்று நன்று என பாராட்டினார். மதிவாணன் சிறிது நேரம் அமைதியாக நின்றான். பிறகு அரசரே தங்கள் ஆணையை மீறியமைக்காக பொறுத்தருள் வேண்டும். நான் வயதான என் தந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வருகிறேன். அவர்தான் இந்த செயலை செய்ய எனக்கு வழி காட்டினார் என்றார். மன்னருக்கு தெளிவு பிறந்தது. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் இளைஞர்களின் செயல்வேகமும் முதியவர்களின் பட்டறிவும் வழிகாட்டுதல் தேவை என்பதனை உணர்ந்த அவர்கள் அனைவரும் நாடு திரும்ப மன்னர் ஆணை பிறப்பித்தார். மக்கள் மகிழ்ந்து அரசனை கொண்டாடினர்.

Leave a Comment Read More


நமக்கு எப்போதும் கை கொடுக்கும் நம்பிக்கை

எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால், அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதைச் சாதிக்க திறமை வேண்டும். திட்டமிடல் வேண்டும், விடமுயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும். இவைகளிருந்தால் எதையும் சாதிக்கலாம்.

செயல் என்பது உயிரின் இசை என்றொரு பழமொழி உண்டு. அதைச் செயல்படுத்துங்கள்.இன்ப வாழ்க்கை வாழ மனிதனுக்குச் சிந்தனை எவ்வளவு அவசியமாகத் தேவையோ அந்த அளவுக்கு செயலாற்றலும் தேவை சொன்னவர் ஹாஸ்விட் அறிஞர்.

அறிவு தான் ஆற்றல் சொன்னவர் பேகன்.

நம்பிக்கையானது துணிச்சலைத் தட்டி எழுப்புகிறது. நம்பிக்கை மனித இதயத்தில் துணிச்சலை ஊட்டக்கூடியது சொன்னவர் லான்மெல் அறிஞர்.

து|ய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாததாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும் என்று சொன்னவர் விவேகானந்தர்.

வயதைக் கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயிர் ஊட்டுவதுதான் நம் வாழ்க்iகியின் நோக்கம் சொன்னவர் அலெக்ஸிக்ச் கார்மல்.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற கொள்கையில் வாழ் நாளெல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள். 

இந்த இலட்சியத்தை தம்மானல் அடைய முடியும் என்று மனதார நம்புவதே தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் இழக்காலாம். ஆனால் இழக்கக்கூடாத ஒன்று தன்னம்பிக்கைதான். 

தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ அல்லது அலுவலக நண்பர்களோ அல்லது நீங்கள் இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவர்களின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தாகவும் இருக்கட்டும். 
மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற அவர்களுக்கு நீங்கள் முதலில் உதவ வேண்டும். 

உங்களிடமுள்ள குறைகளைக் குறைத்து நிறைகளைப் பெற எப்போதும் முயலுங்கள்.
உங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அது உங்கள் திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து பிரச்சனைகளை அணுகுங்கள். 

படிக்கப் படிக்க மனம் விரிவடையும், திறந்த மனம் வெற்றியின் விளைநிலம். 
பள்ளம்தான் மேட்டினை நிர்ணயிக்கிறது.குள்ளம் தான் உயர்வினை வடிவமைக்கிறது.இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது.

தவறு செய்வது தவறல்ல. திருத்திக் கொள்ள மறுப்பது தவறு. 

ஒரு பக்கம் நீங்கள் கை கொடுத்தால் இன்னொரு பக்கம் உங்களுக்கு கை கொடுக்கும்.

வெற்றி ஓர் அனுபவம் என்றால் தோல்வியும் ஓர் அனுபவமே. தோல்வி எனப்படுவது வெற்றிக் செலுத்தும் காணிக்கை அவ்வளவு தான். அதற்காக உற்சாகம் இழக்கத் தேவையில்லை.

உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்கள். எதில் ஈடுபட்டாலும் மனஉறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக் கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.

முயற்சி முயற்சி இவை கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும். 

முடியும் என்றால் முடிகிறது. தயங்கினால் சரிகிறது. 

நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே.

எப்போதும் ஒருவருடைய இதயம் ஈரமாகவே இருக்கட்டும். அப்போது தான் குடும்ப இதயமே ஈரமாக இருக்கும். குடும்ப இதயயே ஈரமாக இருந்தால் சமுதாய இதயம் ஈரமாக இருக்கும். 

நம் உடலும் உயிரும் போல நம் எண்ணமும் செயலும் இருக்கட்டும். எப்படியாவது வாழ்ந்து விடுவோம் என்று எண்ணுவதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழுவதே வாழ்க்கை. எப்போதும் புன்சிரிப்போடு இருப்பது நல்லது. 

உங்கள் வாழ்க்கையில் எது செய்தாலும் ஒருபோதும் மற்றவர்களைப் பின்பற்;றாதீர்கள். பிரதியெடுப்பது தவறு. புதுமையாக சிந்தனை செய்து வாழ்பவனுக்கு என்றும் எதிர்காலம் உண்டு. உல்லாசத்தை மட்டுமே தொழிலராகக் கொண்டு வாழ்ந்துவரும் ஒருவன் உண்மையான சந்தோஷக்காரான இருக்கு முடியாது.

அதிஷ்டம், துரதிஷ்டம், என்னால் முடியாது போன்ற வார்த்தைகளை தனது வாழ்க்iகியின் அடிமட்டத்திலேயே து|க்கி எறிய வேண்டும். அப்போதுதான் வெற்றி வரும். பொய்யான எதற்குள்ளும் நுழையக் கூடாது. எதிலும் நிஜம் இருக்கட்டும். அனாவசியமான ஆசைகளை ஒழித்துக் கொண்டு, அவசியமான ஆக வேண்டிய ஆசைகளை வளர்ந்துக் கொள்ளவேண்டும். உன் திறமையை து|ண்டி விட மற்றவர்களால் முடியும். உன்னை வளர்த்துக்கொள்ள உன்னால்தான் முடியும். உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழந்துவிடக்கூடாது. பிறரிடம் காணும் குறையை, நம்மிடம் எப்;;போதும் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் துயரங்களைப் பார்த்து இரக்கப்படு. உன் துயரங்களை உன்னோடு மட்டுமே வைத்துக்கொள். 

உயர்ந்த பண்;புக்கு அடிப்படை, சின்னச் சின்ன தியாகங்கள். நம்பிக்கை வைத்தவனை ஏமாற்றுவது சாமாத்தியம் அல்ல. அது துரோகமே. பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைக்கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி ஓட வேண்டும். வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும்.

பயணப்படாத பாதை மறைந்துவிடுவது போல, பயணப்படாத திறமை அழிந்துவிடும். அழகு, பொருள்களில் இல்லை. அது பார்வையில் இருக்கிறது. நேர்மையான வழியில் வராத எதுவும் நிலைத்துவிடுவதில்லை. நிறைவைக் கொடுப்பதும் இல்லை. மனத்தை அடக்க நினைத்தால் அலையும். மனத்தை அறிய நினைத்தால் அடங்கும். எண்ணம், சொல், செயலால் எவர்க்கும் எப்போதும் நன்மையையே விளைவிக்க நாட்டமாயிரு. 

உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்து உயர்வு – உத்தமர் இயல்பு, உன்ளொன்று வைத்து புறமொன்று பேசினால் உள்ளொளி தீயாகி உடலைக் கெடுத்துவிடும். அவனில் அணு, அணுவில் அவன், உன்னில் எல்லாம். உன்னை அறி. உண்மையில் உனக்கு எதிரி உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே என்றார் மகரிஷி அவர்கள்.

தனக்குள் இருக்கும் மனக்குறைகளைப் புரிந்து கொண்டு அவற்றை அழுந்தப் புதைத்துவிட்டு தன்னிடமுள்ள திறமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை வெளிக்கொணரும் வகையில் ஒருவன் விழிப்பும், சுதாரிப்பும் அடைந்துவிட்டால் அவன் முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது என்றார் அறிஞர் ஒருவர்.

ஒரு பிச்சனையிலேயிருந்து தப்பிக்கப் போறதுக்கு நமக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு சக்திதான் பிரச்சனைகளைப் புரிஞ்சுக்கிட்டு அதை ஜெயிப்பதற்கும் தேவைப்படுகிறது என்கிறார் எம்.ஆர். காம்மேயர்.

வயதைக்கூட்டுவதல்ல நம் வாழ்க்கையின் நோக்கம். வயதிற்கு உயிர் ஊட்டுவதுதான் நம் வாழ்க்கையின் நோக்கம் என்றார் அலெக்ஸிக்ச் கார்மல்.

உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை யாரும் தேர்வு செய்வதில்லை. நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்பதைப் பார்த்துத்தான் உங்கள் தகுதியைத் தீர்மானிக்கிறார்கள்.

எதிர்ப்பு இல்லை என்றால் அங்கு முனNனெற்றம் இல்லை. கனவு காணுங்கள் வாழ்க்கையில் முன்னேற. அன்பு, அறிவு, கணிவு, துணிவு இந் நான்கும் இருந்தால் உனக்கு நல்வழி காட்டும். எவ்வளவு நேரம் வேலை செய்கிறொம் என்பதைவிட எப்படி வேலை செய்கிறோம் என்பதுதான் முக்கியம். திட்டம் இல்லாத வாழ்க்கை பிரேக் இல்லாத வண்டியைப் போன்றது.

முயற்சி என்பது வெறும் கானல் நீர் அன்று. அது நி;ச்சயம் ஆற்றங்கரைக்கு அழைத்தே செல்லும் என்ககிறார் கதே. 

கோபம் கொள்ளாதீர்கள், கோபம் வாயைத் திறக்கும். ஆனால், கண்களை மூடிவிடும் என்கிறார் கேட்டோ அறிஞர்.

மனிதனின் மனம் எதைச் சாதித்து, உறுதியாக நம்புகிறதோ அதை உறுதியாக அடைந்தே தீரும். தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுகிறவன் தோல்வியுறுவான். ஏனெனில் தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான்.மனக்குழப்பம் செயல் திறனைப் பாதிக்கும். ஆகவே வீண் சபலங்களுக்கு மனதினில் இடம் கொடுக்காமல், தெளிவான அடிப்படையில் திடமாக அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம். 

மன வலிமை உள்ளவர்கள் மரணத்தையும் வெல்ல முடியும். மரணத்தின் ஆக்கிரமிப்பை, தன்னம்பிக்கையினால் தள்ளிப்போட முடியும்.

முயற்;சி முயற்சி இவை கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும். முடியும் என்றால் முடிகிறது. தயங்;;கினால் சரிகிறது. 

வாழ்க்;;கையில் வெற்றி தோல்விகளை எப்படி சந்திக்க வேண்டும் என்று அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சிந்தனையை சீர்படுத்தக்கூடிய குரு அல்லது ஆசிரியர்களே இன்றைய மாணவர்களுக்குத் தேவை. சிந்திப்பதே மூலதனம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் எத்தனை ஏற்ற தாழ்வுகள் வந்தாலும் சிந்தித்துக்கொண்டே இருப்பதுதான் எனது மூலதனம் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

ஆகவே, உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்;கள். 


நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே. வெற்றியின் முதல் இரகசியம் தன்னம்பிக்கையே.

Leave a Comment Read More


உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன். உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல – முல்லர்

நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது. - வைரமுத்து.

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.



இவண்,


சி.ஞாணம்


Leave a Comment Read More