நான் தன்னம்பிக்கை பேசுகிறேன்
- கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம்.
- கடுமையான உழைப்பு வீண் போனதாக சரித்திரம் கிடையாது.
- தன்னம்பிக்கையே நீங்கள் கடுமையாக உழைப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
- தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் இல்லாவிட்டால் நீங்கள் என்ன உழைத்தும் பயனில்லாமல் போகும்.
- தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் உங்களுக்கு எப்போதும் மனதில் மலர்ச்சி இருக்கும்.
- தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்களுக்கு விரைவில் தளர்ச்சி வந்து விடும்.
- தளர்ச்சி வந்து விட்டால் பிறகு உழைப்பதில் நாட்டம் குறைந்து விடும்.
- எனவே உங்களின் செயல்களின் மேல், உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
- அந்தத் தன்னம்பிக்கை இருக்குமானால் நீங்கள் எதையும் சாதிக்கலாம்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |