சிலந்தி கற்றுத் தந்த பாடம்
தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? நானோ அரசன், நாம் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும் என எண்ணினான். மீண்டும் தனது எதிரியுடன் போர் புரிய முடிவு செய்தான். குகையிலிருந்து வெளியே வந்த அரசன் தன் நம்பிக்கையான நபர்களை சந்தித்தான்.
மீண்டும் தனது நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று திரட்டி பலமிக்க ஒரு படையை உருவாக்கினான். தான் எண்ணியவாறு எதிரிகளுடன் தீவிரமாக போர் புரிந்தான், வெற்றியையும் கண்டான். தனது அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரைபோதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |