தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

முதியவரைத் துணைக் கொள்

முதியவரைத் துணைக் கொள்.



வேங்கை நாடு ஓர் அழகான நாடு. அந்த நாட்டை வேங்கை மாறுபவன் என்னும் மன்னன் ஆண்டு வந்தார். அவர் வயதில் இளையவர். இளைஞர்களால் நாடு முன்னேறும். முதியவர்களால் நாட்டுக்கு பயன் ஒன்றும் இல்லை என கருதினார். அவர் தலைமை அமைச்சரை அழைத்து முதியவர்களால் நாட்டுக்கு பயன் ஒன்றும் இல்லை. அவர்கள் நாட்டுக்கு சுமைதான். அவர்களை நாடு கடத்தி விடுங்கள் என ஆணையிட்டார். இதனைக் கேட்ட தலைமை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். முதியவர்களால் பயன் ஒன்றுமில்லை ஐயா. அவர்கள் நாட்டுக்கு சுமையா. அவர்களின் பட்டறிவு நாட்டுக்கு தேவை அல்லவா. ஆனால் இது அரசனின் ஆணை. என தனக்குள் நினைத்தார். ஆதலால் அப்படியே செய்கிறேன். அரசரே என கூறினார். அரசரின் ஆணை முரசறைந்து அறிவிக்கப்பட்டது. நாடெங்கும் ஒரே பரபரப்பு.
மக்கள் அனைவரும் மிகுந்த வருத்தம் தோடு முதியவர்களை அண்டை நாடுகளுக்கு அனுப் பினர். ஆனால் மதிவாணன் என்னும் இளைஞன். வயதான தன் தந்தையின் மீது கொண்ட அன்பால் அவ்வாறு செய்யவில்லை. தன் வீட்டிலேயே மறைவான இடத்தில் வைத்து பாதுகாத்து வந்தான்.
 ஒரு நாள் வேங்கை நாடு அரசவைக் கவிஞராக ஓர் அறிஞர் வந்தார். அவர் பெயர் செழியன். மன்னர் அவரை அன்புடன் வரவேற்றார். அவையில் இடமளித்தார். அறிஞர் செழியன் அவனை பார்த்து இந்நாட்டில் நான் சொல்வதை செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர் எவரேனும் உண்டா என வினா எழுப்பினார். மண்ணெண்ணெய் என வினவினார். அறிஞர் சாம்பல் வேண்டும். சங்கில் நூலை கோர்த்து தருதல் வேண்டும் செய்ய முடியுமா எனக் கூறி ஏளனமாக சிரித்தார். சாம்பலை திரிபர் என்றார். மன்னர் அதனைக் கேட்ட அவையினரை ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்ற மன்னர் அவரை நோக்கி யாரேனும் இச்செயலைச் செய்து காட்ட முடியுமா என வினவினார். எல்லோரும் அமைதி காத்தனர். மன்னர் புதிதாக வந்த அறிஞரிடம் இரண்டு நாள் பொறுங்கள். நீங்கள் சொன்னதை செய்து காட்டுவோம் என்றார். மறுநாள் அறிஞர் கூடிய செயல்களை செய்பவர் ஆயிரம் பொற்காசு பரிசாக வழங்கப்படும் என முரசறைந்து அறிவிக்கப்பட்டது.
மதிவாணன் தன் தந்தையிடம் இதனை கூறினான். தந்தையோ எவ்வளவு தானே நான் சொல்லுகிறபடி செய்து அதனை அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். மறுநாள் மதிவாணன் அரசவைக்குச் சென்றார். ஒரு தட்டில் சாம்பலான கயிற்றையும் நூலால் வார்த்தை சங்கையும் வைத்திருந்தான். அவையில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர் . இது எப்படி எப்படி என வியந்தனர் மன்னர் ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.
மன்னனைப் பார்த்து இதனை எப்படி செய்தாய் என கேட்டார். மதிவாணன் அரசு இது மிகவும் எளிது. ஒரு துண்டு கயிற்றைக் கட்டி தட்டில் வைத்து அதனை தீ வைத்துக் கொளுத்தி கயிறு போல காட்சி அளித்தது கலையாமல் கொண்டு வந்தேன் என்றார். அது சரி சங்கில் நூல் எவ்வாறு ஒரு புறத்திலிருந்து மறுபுறம் சென்றது என மன்னன் வினவினார்.. ஒரு கட்டத்தில் மெல்லிய நூலைக் கட்டி சங்கின் எதிர்புறத்தில் கற்கண்டைத் ஒரு துண்டு ஒன்றை வைத்து அதனுள் நுழைந்து என்னை நோக்கி எதிர்புறம் வந்துவிட்டது விட்டுவிட்டு நூலை கோர்த்து விட்டு ஏனென்றால் மன்னர் நன்று நன்று என பாராட்டினார். மதிவாணன் சிறிது நேரம் அமைதியாக நின்றான். பிறகு அரசரே தங்கள் ஆணையை மீறியமைக்காக பொறுத்தருள் வேண்டும். நான் வயதான என் தந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வருகிறேன். அவர்தான் இந்த செயலை செய்ய எனக்கு வழி காட்டினார் என்றார். மன்னருக்கு தெளிவு பிறந்தது. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் இளைஞர்களின் செயல்வேகமும் முதியவர்களின் பட்டறிவும் வழிகாட்டுதல் தேவை என்பதனை உணர்ந்த அவர்கள் அனைவரும் நாடு திரும்ப மன்னர் ஆணை பிறப்பித்தார். மக்கள் மகிழ்ந்து அரசனை கொண்டாடினர்.


| Leave a Comment |