மெய் சொல்லல் நல்லதப்பா
மெய் சொல்லல் நல்லதப்பா - தம்பி
சொல்லல் நல்லதப்பா
கண்டதை சொல்லென்று சொன்னாலும் - நீ
உன் கதை சொல்ல என்று சொன்னாலும்
மண்டையை உடைத்து விட வந்தாலும்
பொருள் கொண்டு வந்து உன்னிடம் தந்தாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி
மெய் சொல்லல் நல்லதப்பா
பின்னவன் கெஞ்சியும் என்றாலும் அன்று
முன்னவன் அஞ்சிட நின்றாலும்
மன்னவரே எதிர் நின்றாலும்
பின்னவரே என்று சொன்னாலும் - நீ
மெய் சொல்லல் நல்லதப்பா - தம்பி
சொல்லல் நல்லதப்பா
பாவேந்தர் பாரதிதாசன்.
தன்னம்பிக்கையின் சின்னம் | 1 comment |