தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

பறப்பதை நம்பி இருப்பதை விட்டாற் போல



பொருளாதாரப் பாதிப்பு உலக நாடுகளிடம் , வேலைப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

ஒன்று அல்ல இரண்டு அல்ல …பல கம்பெனிகள் சம்பளம் கொடுக்க முடியாமல் கணக்கை முடித்துக் கொடுத்தார்கள்.

இருந்த வேலை போய் விட்டது.அடுத்த வேலை தேடிக் கொள்ளலாம் என நினைக்கும் முன்பே கையில் மொத்தப் பணமும் வந்து திக்கு…முக்காட வைத்தது.

பத்தாயிரத்தை முழுமையாகப் பார்த்து அறியாத தொழிலாளர்கள் ,தகுதி வாரியாக ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் மூன்று இலட்சம் எனக் கொடுத்து கணக்கு முடிக்கப்பட்டு இருந்தது.அதில் ராமுவும் ஒருவன்.

கையில் பணம் வரவும் நடை உடை பாவனை எல்லாம் மாறிவிட்டது.தன் நிலை எது என்பதை மறந்து உயரத்தில் பறக்கும் பலூன் போல் பறக்க ஆரம்பித்து விட்டான் ராமு.


தனக்குத் தெரிந்த தொழில் செய்ய முற்படாமல், தனக்குத் தெரியாத உயர் பதவி வேலைகள் செய்வது தான் தனக்கு கவுரவம் என எண்ண ஆரம்பித்து விட்டான் ராமு.

உயரத்தில் பறக்கும் பலூன் காற்று அடிக்கும் பக்கம் எல்லாம் போவது போல் ,பணம் கைக்கு வந்ததும் நண்பர்கள் உறவினர்கள் என அன்பு மொழி பேசிவந்ததில் அவர்கள் பக்கம் எல்லாம் சாய ஆரம்பித்தான்.

பறக்கும் பணத்தின் மீது பாசம் வைத்த உறவுகள்,நண்பர்கள் என்று தெரியாமல் ஆடம்பர செலவுகளிலும் ,நண்பர்களுடன் மது அருந்துவதிலும் காலத்தை கழித்தான் ராமு.

தனக்குத் தெரிந்த வேலையைத் தேடவே இல்லை.


பணம் பறந்து விட்டது. காற்றுப் போன பலூன் நூலில் தொங்குவது போல் அவன் முகம் இன்று சூம்பிப்போய் இருந்தது .
பணம் வந்த மறு நிமிடமே அவன் உழைத்த உழைப்பை உதாசினப்படுத்தினான் .அந்த உழைப்பால் வந்த பணம் தானே இது என்பதை ஒரு நிமிடம் எண்ணி இருந்தாலும் ராமு தடுமாறி இருக்க மாட்டான்.

பணம் வந்தாலும் உழைத்துக் கொண்டே இருப்பவர்களுக்குத்தான் உயர்வு என்ற உச்சி ஆசனம் தரப்படும்.
”பறப்பதை நம்பி இருப்பதை கை விட்டவர்களுக்கு ” பாதாள குழிதான் பாதை காட்டும்,என்பதை தாமதமாகப் புரிந்து கொண்ட ராமு தனக்குத் தெரிந்த வேலையைத் தேடிப்போனான் .


| Leave a Comment |