வெற்றி பெறுவோம்
நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தேவை . அந்த நம்பிக்கை, என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும், என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் . அப்படி இருந்தால் வெற்றி உங்களை தேடிவரும்.
அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால் தான். வெற்றியின் இரகசியம் “கடின உழைப்பு” என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. தன்னம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம். சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும்.
வெற்றி பெறுவோம்’ என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும். தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்
த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |