தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

நம்மால் முடியும்.


வீட்டுக்கு அழகு தர தோட்டம் அமைக்கிறோம்.நாள்தோறும் நீர் ஊற்றி பராமரிக்கிறோம். இலை துளிர் விடுவதை ரசிக்கிறோம்.அவை பெரிதாகி பூத்து மலரும் போது நமக்கும் அது தொற்றிக் கொண்டு மகிழ்ச்சியை தருகிறது.
திடீர் என ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம், போய்விடுகிறோம். வர நான்கு நாட்கள் ஆகி விடுகிறது.வந்து பார்த்தால் செடி கொஞ்சம் வாடி இருக்கிறது.நீர் ஊற்றாமல் ……
பார்த்த உடனே நமது மனமும் வாடிவிடும்.அச்செடியின் மேல் வைத்திருக்கும்நேசம் தான் நமது மன வாட்டத்திற்கு காரணம். ஒரு செடியைப் பார்த்தே வாடும் மனித நேயம் உள்ள மனிதன், ஒரு மனிதன் துன்பப் படுவதைப் பார்த்து உதவி செய்யாமல் இருக்கலாமா ?

நம்மால் முடியும் என்ற போது செய்தால்…செய்வதால் நமக்கும் மகிழ்ச்சி, ஏற்றுக் கொள்வதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி.
மனித நேயமே உதவ தூண்டு கோலாக இருந்த ஒரு சிறுமியைப் பற்றிப் பார்ப்போம்.

எட்டு வயது மதிக்கத்தக்க சிறுமி, அவளுடன் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்.

இருவரும் கோணிப்பையில் காகிதங்களைப் பொறுக்கி அதை விற்று வரும் வருமானத்தில் காலத்தை ஓட்டினார்கள்.அப்பா,அம்மா இல்லாத குறையை அந்த சிறுமி அன்பாலும்,அரவணைப்பா லும் போக்கி வந்தாள்.

இருவரையும் கண்ட ஒரு அரசு அதிகாரி சிறுவனை ஒரு ஆசிரம பள்ளியில் சேர்த்து விட்டார்.சிறுமியை சேர்க்க முடியாது என்பதால் தங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பணியை கொடுத்து வீட்டுடன் வைத்துக் கொண்டார்கள்.

நாட்கள் கடந்தன.சிறுமி பெரிய பெண்ணாகி விட்டாள்.ஓய்வு நேரத்தில் கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொண்டதால், சுயதொழில் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

இப்போது சிறுவனாக இருந்தவன் பெரியவனாகி பட்டப் படிப்பை முடித்து விட்டான்.அதிகாரி அவனுக்கு ஆலோசனை வழங்கி வேலையும் வாங்கி கொடுத்தார்.

படித்து வேலையுடன் வந்த தம்பியைப் பார்த்த போது அக்காவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது.அவள் காலில் விழுந்து வணங்கிய தம்பியின் கண்ணீர் அவள் காலை தொட்டு கீழே விழுந்தது. தம்பியை தூக்கியவள் எதிரில் நின்ற அரசு அதிகாரியைப் பார்த்தாள்,அவள் கண்களுக்கு அவர் தெய்வமாகப் பட்டார்.’தம்பி’தெய்வத்தை வணங்கு என்றாள்.இருவரும் கைகூப்பி வணங்கினார்கள்.

இருவரும் குப்பை மேட்டில் இருந்தவர்களை நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி அழைத்துச் சென்று கோபுரமாக உயர்த்தியவர்க்கு நன்றி சொல்ல வார்த்தையைத் தேடினர்.

ஒருவரை நம்பித்தான் ஒருவர் வாழமுடியும்.வாழ்க்கை பயணத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவுவதே வாழ்க்கை.வாழ்க்கைப் பயணம் கடந்து கொண்டே இருக்கும் நம்பிக்கை என்ற நல்லுரத்தில்.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.


| Leave a Comment |