தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

நம்பிக்கை வீண் போகவில்லை.


இருண்ட மனம், தெரிந்த முகங்கள்

உதவ யாருமில்லை, ஒளி எங்கே? மூலையில் தெரிய
தட்டுத் தடுமாறி, பற்றுக் கம்பை பிடிக்கும் கொடியாய்
உருண்டு எழுந்து , நிமிர்ந்து நடக்கையில்
சிறு ஒளி பிரகாசமாய் தெரிய தன்னம்பிக்கை வேர்
ஆழமாய் ஊன்ற வெற்றி மலர்ந்தது.

தளராத முயற்சியும் பொறுமையும் தன்னம்பிக்கை ஏற்பட முதல் படி என்று சொன்னால் கூட வியப்பேதும் இல்லை.எதையும் இருந்த இடத்தில் இருந்தே பெற்று விடலாம் என்றால் அது சோம்பேறித்தனம் என்று கூட கூறலாம்.

நகரில் ஒரு மிகப்பெரிய பிரமுகர் இருந்தார் .பொதுவாக உதவி என்று யார் சென்றாலும் அவர் வெறும் கையுடன் அனுப்பியதாக தகவல் இல்லை.ஆனால் அவரை நேரில் சந்திப்பது அவ்வளவு எளிதில் முடிவதில்லை.ஒரு சமயம் இரண்டு பேர் அவரை வெவ்வேறு கால கட்டங்களில் சந்திக்க முயற்சி மேற்கொண்டனர்.முதலில் சென்றவர் பல முறை முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை .ஏதாவது காரணத்தால் இவர் எப்போது சென்றாலும் அவரை சந்திக்க முடியாத நிலையே தொடர்ந்தது.

இதை அறிந்த அவரது நண்பர்கள் சிலர் அவர் வேண்டும் என்றே உன்னை சந்திக்க வில்லை .அவரை சந்தித்து உதவி பெறுவது என்பது வீண் வேலை என்று அவரது நம்பிக்கையை தகர்த்து விட்டனர்.நண்பர்களின் போதனை பலித்தது.,அவரை சந்தித்தால் உதவி கிடைக்கும் என்று எண்ணியவர் ,இனி அவரைப்பார்த்து அவர் எங்கே நமக்கு உதவப் போகிறார் என்ற அவ நம்பிக்கை ஏற்பட்டவுடன் ,தானக அவரது நடை தளர்ந்தது ,நம்பிக்கை எனும் தீப ஒளி குறையத் தொடங்கியது.அதன் பின்னர் அவர் தனது முயற்சியில் இருந்து பின் வாங்கி விட்டார்.

அதே சமயத்தில் இன்னொருவர் அந்த பிரமுகரை சந்தித்து அவரிடம் உதவி பெற்று விடவேண்டும் என்று தீவிர எண்ணத்துடன் நம்பிக்கையுட அவரை தேடிச்சென்றார்.ஒவ்வொரு தடவையும் பிரமுகர் பல வேலையாக வெளியே சென்று விடுவார்.இவரால் சந்திக்க முடியவில்லை .ஒருமுறை இவர் போவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் அவர் அந்த இடத்தை விட்டு சென்றதாக தெரியவந்தது.இருந்தாலும் இவருக்கு மனஉறுதி குறையவில்லை.அவர் பெரிய பிரமுகர் அவருக்கு பல அலுவல்கள் இருக்கும் நம்மைவிட பல வேலைகள் அவருக்கு நிறைந்து இருக்கும் நமக்காக அவர் காத்திருக்க மாட்டார்.நாம் தான் அவரை காத்திருந்து எப்படியாவது சந்திக்க வேண்டும் .அதற்கு எத்தனை தடவை வந்தாலும் சரி ,அவரை சந்தித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக தமது நம்பிக்கையில் சஞ்சலம் இன்றி காணப்பட்டார்.

ஒவ்வொரு முறையும் செல்லும் பொது அவரை முதலில் சந்திக்க சென்றபோது இருந்த ஆர்வத்துடனும் ,நம்பிக்கையுடனும் இருந்தார்.ஒரு நாள் அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.அவரை சந்தித்து அதற்கான நல்ல பலனை அவர் பெற்றுக்கொண்டார்.வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் தன்னம்பிக்கை தான் அதில் சோர்வு ஏற்பட்டால் எதிலும் வெற்றி பெற முடியாது.சிகரத்தின் உச்சியை எட்டவேண்டுமானால் கடினமான கற்களையும் ,முட்களையும் மிதித்து தான் செல்லவேண்டும் .அதற்கு மனத்தின் வலிமை மிகுந்த ஆயுதமாக தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.நாம் சிகரத்தை தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதையே லட்சியத்தை எளிதில் அட்டைய வைக்கும்.

முத்துக்குளிப்பவன் ஆழ் கடலில் மூச்சை அடக்கிக்கொண்டு செல்லவேண்டும்.அவ்வாறு செல்பவர்கள் சிறந்த பயிற்சி பெற்று இருப்பார்கள்.இருந்த போதிலும் அவர்கள் அசாத்தியமான தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.அதே போல் தான் கடலின் அலைகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களும் மிக தைரியமான தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.அதனால் தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் போராடி வெற்றி பெறுகிறார்கள்.

ஒருவரின் தோற்றத்தை பார்த்து பல சமயங்கில் நாம் ஏமாந்து விடுவதும் உண்டு.தோற்றத்திற்கும் செய்கின்ற வேலைக்கும் சம்பந்தம் இல்லை .சிலரை பார்த்தால் இவர் இதை செய்ய முடியுமா என்று நினைக்கும் முன் அவர் அந்த வேலையை மிக எளிதாக லாவண்யமாக செய்து முடித்து விடுவார்.உருவத்துக்கும் செய்கின்ற வேலைக்கும் சம்பந்தம் இல்லை.மனதளவில் தன்னம்பிக்கையும் ,துணிச்சலும் உள்ளவர்கள் எளிதில் வெற்றி பெற்று விடுவார்கள்.எந்த வேலையயும் செய்து விடுவார்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் வேண்டும், இந்த கருத்தை வலியுறுத்தி சமீபத்தில் இந்தி படம் வெளிவந்துள்ளது.ராணி முகர்ஜி நடித்த அந்த திரைப்பட ம்,சமீபகாலமாக பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான கொடுமைகளை ஒழிப்பதற்கான கருத்துக்களை உள்ளடக்கியது.எனவே பெண்களுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் தேவை.இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்த இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த படம் பெண்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள துணிச்சல் தன்னம்பிக்கை பெறுவது போன்ற விஷயங்களை எடுத்து சொல்கின்றன.சினிமா,பத்திரிகை,வானொலி போன்ற ஊடகங்கள் மூலம் தன்னம்பிக்கை கருத்துகள் இளைஞர்களிடம் விரைந்து சென்றடையும்.

நீங்கள் தண்ணீரை பல இடங்களில் பார்த்து இருப்பீர்கள் .கண்மாயில், குளத்தில், கிணற்றில்,நீரோடையில் சுழன்று செல்லும் ஆற்று வெள்ளம் போன்றவை.எல்லா இடங்களிலும் ஒரே தண்ணீர் தான்,ஆனால் தண்ணீரின் ஆக்ரோசத்தை ,சீறிப்பாயும் அருவியில் பார்க்கலாம்.பல இடங்கில் தூங்குவது போல் உள்ள இந்த நீருக்கு இவ்வளவு வலிமை எங்கிருந்து வந்தது என்று எப்பவாவது நாம் சிந்தித்து பார்த்து இருக்கிறோமா ?அது போல் தான் உறங்கிக்கொண்டு இருக்கும் தனி மனிதனுக்கு தன்னம்பிக்கை என்ற கருத்து எழுச்சி பெற்று அவர்களது இலட்சியத்தை அவர்கள் எட்டிப்பிடிக்கும் வரை யாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.நீரோடையில் சீறிப்பாய்ந்து செல்லும் நீர் ஓரிடத்தில் சென்று பின் அமைதி அடைகிறதோ அது போன்று ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் அந்த இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள் .அவர்கள் வெற்றி பெற்ற பின்னரே அமைதி பெறுவார்கள்.

வாழ்க்கையில் கிடைக்கும் தோல்விகளை தன்னம்பிக்கை மிக்க படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி பெறுவதும் ஒரு சாதனைதான்.சமீபத்தில் மதுரா என்ற பெண் ,பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க இயலவில்லை.இருந்தாலும் தன்னம்பிக்கை மிக்கவரான இவர், வயல் வேலைகளுக்கு சென்று விட்டு பின்னர் தனது தோழிகளின் புத்தகங்களை இரவல் பெற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே படித்து பிளஸ் டூ வெற்றி பெற்றுள்ளார். அதன் பின்னர் பல துறைகளில் தேர்ச்சி பெற்று உள்ளார்.இதற்கு காரணம் வறுமை ஒருபுறம் இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற துணிச்சலும் தன்னம்பிக்கையும் தான் காரணம் என்றால் மிகையில்லை.

ஒவ்வொரு கால கட்டடத்திலும் வெற்றி பெற நல்ல தன்னம்பிக்கை உள்ள உணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.நமது நாட்டில் சிறு வயது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை கருத்துக்களை எடுத்துச்சொல்லி ,அவர்களை மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக வளர்க்க வேண்டும். படிப்பு ,விளையாட்டு போன்றவற்றுடன் தன்னம்பிக்கை கருத்துகளை அவர்களின் வாழ்வின் பல நிலைகளில்இருந்தே அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.படிப்பு, விளையாட்டு எனஅவர்கள் செய்யும் செயல் எதையும் ஆழ்ந்து,கூர்ந்து செயல் படுத்தும் முறைகளில் தன்னம்பிக்கை கருத்துக்களை தூவி அவர்களது உணர்வுகில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.

தன்னம்பிக்கை என்பது விதை போன்றதுவிதையை சரியான முறையில் பயன்படுத்தினால் தான் ,அது முளைத்து விருச்சமாக மாறி மற்றவர்களுக்கு பயன் அளிக்கும்.அந்த விதையை அப்படியே வைத்து விட்டால் அதனால் யாருக்கு என்ன பயன் கிடைக்கும்.விதையை சரியான காலத்தில் பயிரிட்டு வளர்த்து விடுவதும் நம் அனைவரின் கடமையாகும்.

நமது இளைஞர்கள் சொல்லப்போனால் இன்னும் தன்னம்பிக்கை உடையவர்களாக இல்லை.தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவே ,தன்னம்பிக்கையே இல்லாதவர்களாக வளர்ந்து வருகிறார்கள்.அவர்களை நாம் இன்னும் சிறந்த முறையில் வளர்க்க வேண்டும்.இப்போது உள்ள இந்திய சூழலில் நம்பிக்கை ஏற்படுத்தும் படிப்பு,மற்ற துறைகள் மிக குறைவாகவே உள்ளது.கல்வியுடன் சமுதாயத்தில் அவர்கள் தெரிந்து கொள்கின்ற படிப்பினை போன்றவை இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் இருக்க வேண்டும் அதற்காக கல்வியாளர்கள் அறிஞர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்திய நாடு பல கிராமங்களின் தொகுப்பு ஆகும்.இங்கே பல நூற்றாண்டுகளாக அந்நிய நாட்டு அரசாட்சியில் அடங்கிக் கிடக்கவேண்டிய நிலை இருந்து வந்தது.பல காலமாக சிந்திக்கும் திறனுக்கு கூட முட்டுக்கட்டை இருந்து வந்தது. தற்போது இந்தியா என்ற நாடு மிகப்பெரிய வல்லரசாக உலக அரங்கில் அண்ணார்ந்து பார்க்க கூடிய உயரத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

கடந்த காலங்களில் இருந்ததை விட தற்போது

ஒரு மனிதன் தன்னம்பிக்கை மிகுந்தவனாக இருந்து விட்டால் அவன் வாழ்க்கையில் தோல்வி பயம் இன்றி எளிதில் வெற்றி பெற்று விடுவார்கள்.சமுதாயத்தின் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் தன்னம்பிக்கையை விதைத்தால் ,பின் சமுதாயம் தானாகவே முன்னேறி விடும்.வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ,மகிழ்ச்சிக்கு தன்னம்பிக்கையே அடித்தளம்.வருங்கால சமுதாயம் சிறப்பாக செயல்பட தன்னம்பிக்கை விதையை எங்கும் தூவி விடுவோம் .நிச்சயம் வருங்காலத்தில் அதன் பயனை அறுவடை செய்ய முடியும்.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.


| Leave a Comment |