மகிழ்ச்சிக்கனிகள்
மகிழ்ச்சிக்கனிகள் - அபூர்வம் தான்.
"சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் - மற்றவரைசந்தோஷப்படுத்தி பார்ப்பதில் தான் இருக்கிறது" என்று ஒருதிரைப்பட இயக்குனர் சொன்னது - ஒரு வசனமாகவே பலராலும்புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. வாழ்க்கையாகசெயல்படுத்தப்படவில்லை.
பலரின் சிரிப்பு அடுத்தவர் கீழே விழுந்தால் வருகிறது.
அடுத்தவர் கஷ்டப்பட்டால் வருகிறது.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் "சாகச சிரிப்புதொடங்கி சங்கீத சிரிப்பு "வரை பலப்பல வகைகளை நமக்கு செய்தேகாட்டிவிட்டார் - தனது பாட்டில்.
நம் சிரிப்பு எந்த வகை என்று என்றைகாவது நினைத்துபார்த்திருக்கிறோமா?
கடைசீயாக நாம் சிரித்தது எப்போது ? எப்படி ? எதனால் ?
அந்த சிரிப்பினால் மனதுக்கு மகிழ்ச்சி வந்ததா?
அப்படி வந்தால் - அந்த மகிழ்ச்சி நீடித்த, நிலையான மகிழ்ச்சியா?
இன்றைய பொருளாதார சுமையில் - காசு, பணம், துட்டு, மணி, மணி -என்ற பாடல் மட்டுமே பலரின் தேசிய கீதமாக ஆகி விட்ட நிலையில்,யார் என்ன கேட்டாலும் கொடுக்க மனம் இல்லாத நெஞ்சனாக,கஞ்சனாக பலர்.
மல்லிகை - மலர்ந்து, தான் இருக்கும் சுற்றம் முழுவதும் ஒருமணத்தை பரப்பி நிறைவை தருகிறது.
அது அனைவருக்கும் பிடிக்கிறது.
அதேபோல, நீங்கள் மனம் நிறைந்த சிரிப்பில் - உங்கள் சுற்றத்தைமகிழ்ச்சிக்கூட்டமாக மாற்ற முடிந்தால் - நீங்கள் பலராலும்விரும்பப்படுவீர்கள்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |