அக்கறை காட்டுங்கள்.
மற்றவர்கள் மீது அக்கறை காட்டுங்கள்.
உள ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றவர்கள் மீது நீங்கள் காட்டும்Emotional Bondage அவர்களுக்குள், உங்கள் மீது அன்பும், பாசமும்அதிகரிக்க செய்யும்.
அவர்கள் நிலையில் இருந்து நீங்கள் அவர்களின் துன்பத்தை புரிந்துகொண்டு அதற்க்கு உங்களால் முடிந்த உதவியும், தீர்வும் கொடுக்கும்பொது - அவர்கள் துன்பம் களையப்படுகிறது.
நேரத்தை பகிருங்கள் :-
பரபரப்பான இன்றிய கால கட்டத்தில் - அடுத்தவருக்கு நம்முடையநேரத்தை ஒதுக்குவது என்பது சற்று சிரமமான விஷயமாகதோன்றலாம்.
ஆனால், மற்றவருக்காக உங்கள் நேரத்தின் சில மணித்துளிகளைஒதுக்கும்போது உங்களுக்கு கிடைக்கும் பலன் - புதிய நண்பர்கள்,புதிய தொடர்புகள், புதிய புதிய கலைகளை, விஷயங்களைகற்றுக்கொள்ளும் சந்தர்பம்,
உங்கள் வாழ்வில் மேலும் வெற்றிகளை, முன்னேற்றங்களைஅடையும் வாய்ப்பு - இப்படி பல.
உங்கள் பணம் :-
சுயநலமாக தனக்காக, தன இன்பத்துக்காக மட்டுமே பணம்செலவழிப்பவர்களை விட, மற்றவருக்காக பணம் செலவழிப்பவர்கள் மகிழ்ச்சி கூடுதலாகவே இருக்கிறார்கள். சுற்றத்தையும்மகிழ்ச்சியோடயே வைத்து இருக்கிறார்கள்.
மற்றவருக்கு கொடுக்கப்படும் பரிசுப்பொருட்கள், உங்கள் பிறந்த நாள்,திருமண நாள், போன்ற முக்கியமான நாட்களில் முதியோர்இல்லத்துக்கும், குழந்தைகள் காப்பகங்களுக்கும் நீங்கள் அளிக்கும்நன்கொடை - இந்த சமூகத்தின் மீது உங்களுக்கு இருக்கும்அக்கறையை மட்டும் வெளிக்கொண்டு வருவதில்லை, அந்தஇல்லங்களில் இருக்கும் உங்கள் அன்பு உள்ளங்கள் மனதிலும்மகிழ்ச்சியை கொண்டு வருகிறது.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |