தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

செம்ம புத்தகம்டா என்று வாய் நிறைய பாராட்டும்.



வாழ்க்கை இதை எப்படி வாழ்வது, எப்படி சிரிப்பது,எப்படி இன்பதுன்பங்களை எதிர்கொள்வதென்பது பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்தாயிற்று.. இன்னும் வந்து கொண்டே இருக்கிறது..படிக்கும் வரைக்கும் படித்து முடித்த பின்னரும் ச்சே செம்ம புத்தகம்டா என்று வாய் நிறைய பாராட்டும் மகராசன்களே அதிகம்...அதை செய்துவிட்டு நம்மவர்கள் அவரர் வேலைகளில் இறங்கிவிடுகிறார்கள்..இறங்குவது தவறல்ல வழக்கமாய் இறங்கிவிடுகிறார்கள் என்பது தான் வருத்தம்...

அந்த புத்தகங்களின் நோக்கு உங்களின் பாராட்டுக்களை பெறுவதல்ல..உங்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு சிறப்பாய் வித்தியாச படுத்தியிருக்கிறது என்பது தான் அதனின் ஒவ்வொரு எழுத்துக்களின் தனிப்பெரும் குறிக்கோள்கள் ஆகும்...
அதை நாம் வெறும் தன்னம்பிக்கை கட்டுரையாகவோ,இல்லை வெறும் personality developement article என்ற குறுகிய வட்ட எதிர்ப்பார்ப்போடு படித்தலே அவற்றின் பயனை நம்மிடம் இருந்து பிரிக்கிறது...

அதில் எழுதப்பட்டிருப்பவை நமக்கான நம் சம்பந்தமான நமது தீர்வுகள் என்று நம்பி அனுபவபூர்வமாய் படிக்க தொடங்குங்கள்..ஒவ்வொரு மேற்கோள்களையும் எடுத்துக்காட்டுகளிலும் வாழ்ந்து படியுங்கள்..அதனுள் உள்ள எழுத்துக்களை கண்வழியே இதயத்தில் இட்டு நிரப்புங்கள்..பிறகு உங்கள் வாழ்க்கை குறிப்பிலிருந்து,,

ச்சே.. எத்தன தடவ try பன்றது எல்லாம் வேஸ்ட் என்ற வார்த்தைகள் நித்\சாயம் நீக்கப்பட்டிருக்கும்...வாழ்க்கையின் வீசையும் உங்களின் திருப்திக்கான நீள அகலங்கள் நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும்..

இந்த நம்பிக்கைகளோடு தான் இந்த உங்களுக்கான தீர்வுகளை உங்களில் உங்களாக எழுத முனைந்திருக்கிறேன்..இதை உங்கள் நண்பர் உறவினர் என்று எல்லோரிடமும் கொண்டு சேருங்கள் பசுமையான இல்லையில்லை வண்ணமையமான மனிதர்கள் செய்வோம்......

இந்த வலைப்பதிவில் புதுப்புது தலைப்புகளோடு தன்னம்பிக்கை கட்டுரைகள் வெளியாகும் படித்து சிந்தியுங்கள்...நண்பர்களே.....

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |