தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

நன்மை செய்யுங்கள்.


 


அடுத்தவருக்கு நன்மை செய்யுங்கள். அது உங்களுக்கு மட்டும் அல்ல,அவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

உளவியல் நிபுணர்களின் ஆய்வு முடிவு "சிற்றின்ப மகிழ்சிகளில்ஈடுபடுபவர்களை விட (தன்னை மட்டும் கருத்தில் கொண்டு),ஆரோக்கியமான, அர்த்தமுள்ள வழியில் தனது வாழ்வையும், சொல்,செயல்களையும் கொண்டிருப்பவர்கள் கூடுதல் மகிழ்ச்சியுடன்இருக்கிறார்கள்.

கவனம் கொடுங்கள் :-
பலரும் சரியாக செவிமடுத்து கேட்கிறோம் - என்றேநினைகிறார்கள்.

உண்மையில், மற்றவர் பேசும் போது பெரும்பாலனவர்கள் மனதுவேறெங்கோ இருப்பதால், சொல்பவரின் சொற்கள் சரியாகக்ரஹிக்கப்படுவதில்லை.
எனவே, அடுத்தவர் பேச்சை கூர்மையாக, அமைதியாக கேளுங்கள்,
அது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும்.
உறவு பலப்பட உதவியாக இருக்கும்.
மேலும் உங்களுக்கும் அது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

எப்படி என்றால் - உங்கள் கேட்கும் திறன் கூடி உங்கள் Focussing Ability ஐ அதிகப்படுத்தும்.



| Leave a Comment |