தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

நம்பிக்கை தரும் அருமையான கதை



ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு இருந்தனர்.கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது,குதிப்பது என்றும் ஆடிப்பாடிக்கொண்டு இருந்தார்கள் ,சிலர் பயத்தில் மரத்தில் ஏற மறுத்து விட்டனர்.

அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையை கடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும் ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக்கொண்டு இருந்தது.ஓடையை சில சிறுவர்கள் அனாவ சியமாக தாண்டிக்குதித்து சென்றனர்.ஆனால் ஒருசில சிறுவர்கள் பயந்த சுபாவமாக இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து விடுவோமோஎன்ற பய உணர்வில் தாண்டிக்குதிக்க மறுத்து விட்டனர்.

எதிர் கரையில் இருந்தவர்கள் உற்சாகமூட்டியும் அவர்கள் தாண்டிக்குதிக்க வில்லை.அதற்கான முயற்சியை கூட அவர்கள் மேற்கொள்ளவில்லை.சிறிது தூரம் நடந்து சென்று தண்ணீர் குறைவாக சென்ற இடத்தில் இருந்து ஓடையை கடந்து மறு பக்கம் சென்றனர்,சிறுவர்களில் பலர் அபார தன்னம்பிக்கை மிக்கவர்களாக காணப்பட்டார்கள். எதையும் செய்து பார்த்து விடலாம் என்ற அதீத தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு விளங்கினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

இங்கே சில சிறுவர்களுக்கு போதிய தன்னம்பிக்கை அவர்களிடத்தில் இல்லை .நம்பிக்கையுடன் நாம் தாவி குதித்து விடுவோம் என்ற எண்ணம் ஏற்படாததால் அவர்கள் ஓடையை தாவிக்குதிக்க முடியவில்லை .

எனவே எதிலும் வெற்றி பெற முதலில் தன்னம்பிக்கை அவர்களுக்குள்ளே ஏற்படவேண்டும்.ஒவ்வொருக்கும் முதலில் தேவை தன்னம்பிக்கையும் மனதைரியமும் தான்.இவைகள் வெற்றியை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகும்.

சமீபத்தில் ஒரு நாள் காலையில் தினசரி பத்திரிக்கை ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தேன்.இரண்டு மூன்று பக்கங்களை புரட்டியவுடன் ஒரு செய்தி பெரிய அளவில் வெளியிடப்பட்டு இருந்தது.நன்றாக படித்து ,பெர்ய அளவல் தேவைக்கு அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது செய்தி.அவரது புகைப்படத்தை பார்க்கும் போது மிக அழகாக இருந்தது.நிறைய படித்து நல்ல வேளையில் இருந்த இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.அதற்கான காரணமும் பத்திரிகையில் இல்லை.அந்த செய்தியை பார்த்துவிட்டு மேலும் சில பக்கங்களை புரட்டியபோது ஒரு பக்கத்தில் ஒரு விவசாயின் புகைப்படத்தை போட்டு வேளாண் உற்பத்தியில் சாதனை செய்துள்ளார் என்றும் ,அதற்கான அரசின் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த செய்தியில் ஒரு குறிப்பட்ட ரக நெல் உற்பத்தியில் அரசின் குறியீட்டு அளவை விட கூடுதல் விளைச்சல் செய்து காட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது.அந்த விவசாயிக்கு எழுதப்படிக்க மட்டும் தான் தெரிந்துள்ளது.அதுவும் தாய் மொழியல் மட்டும் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த இரண்டு செய்திகளையும் படித்த போது எனக்கு ஒன்றுதான் தெரியவந்தது.படிப்பு, அழகு, கைநிறைய வருவாய் இருந்தும் அவர் விரும்பிய வாழ்கையை அமைத்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தும் அவர் நிம்மதியாக வாழவில்லை. அப்படி என்றால் அவர் வாழ்க்கையில் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ அதைகற்றுக் கொள்ளவில்லை .அது தான் தன்னம்பிக்கை..வாழ்க்கையில் எது வந்தாலும் அதை எதிர்க்க துணிந்த மனநிலை நம்பிக்கையான மனம் அதை அவர் வளர்த்துக்கொள்ளாததால், எதோ ஒரு சின்ன பிரச்சினையை ஏற்பட்டுள்ளது.அதை கூட தாங்க முடியாமல் உயிரை போக்கிக்கொண்டுள்ளார். வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு எப்போதும் தன்னம்பிக்கை மிகுந்து காணப்பட வேண்டும். அப்போது தான் எதையும் எதிர் கொள்ளும் மன நிலையை உருவாக்கி தரும்.

அதே சமயம் அதிகம் படிப்பறிவில்லாத விவசாயிக்கு அரசின் விவசாய அறிவிப்பு தெரியவந்துள்ளது.இந்தப்பரிசை பெறவேண்டும் என்ற தன்னம்பிக்கை, நாம் எப்படியும் இதை அடைந்தே தீருவோம் என்ற உறுதி அவருக்கு இருந்துள்ளது.அதனால் அவர் உறுதியான நிலையில் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.அதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கை தான் என்று உறுதியாக கூறமுடியும்.

சாதனை விவசாயி இது பற்றி தெரிவிக்கும் போது,’நான் இந்த முயற்சியில் இறங்கும் போது பலர் என்னை கிண்டலும் கேலியும் செய்தனர். ‘ஏம்பா வீண் வேலை அதிகாரிகள் சொல்கின்ற அளவுக்கு மகசூல் எதுவும் கிடைக்காது.,அவர்கள் பாட்டுக்கு சொல்லிவிட்டு போய் விடுவார்கள் என்று கூறினார்கள் .

ஆனால் வேளாண் அதிகாரிகள் எனக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறி எவ்வாறு செயல்படவேண்டும் என்றும் ,அவ்வப்போது தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.அவர்கள் கூறிய வழி முறைகள் எனக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.நாம் எப்போதும் விவசாயம் செய்யப்போகிறோம் அதிகாரிகள் கூறிய முறையில் செயல்பட்டு இந்த முறை வெல்வது என்ற ஒரே குறிக் கோளுடேன் நான்கு,ஐந்து மாதங்கள் தீவிரமாக செயல்பட்டதால் அவர்கள் அறிவித்த அளவை விட அதிகமாக விளைச்சல் செய்து காட்டினேன்.அதிகாரிகளே அதைபார்த்து வியந்து பாராட்டு தெரிவித்தார்கள்..இந்த முயற்சியில் எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை அது தான் தன்னம்பிக்கை.

எனவே இதில் இருந்து என்ன தெரிகிறது தற்கொலை செய்து கொண்டவர் மிகுந்த படிப்பறிவு மிக்கவராக இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர் ஒரு மோசமான முடிவை மேற்கொண்டார்.அதிகம் படிக்காத ஒருவர் எதையும் தன்னம்பிக்கை உணர்வுடன் செயல் பட்டதால் வெற்றி பெற்றார்.எனவே வாழ்க்கையின் திறவு கோளாகஇருப்பது மனிதர்களுக்கு தன்னம்பிக்கை ஒன்றுதான் அதில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் வென்று காட்டலாம் இரு உறுதி.பொதுவாக ஒருவர் புதிதாக எதை செய்தாலும் தொடங்கும் முன் முட்டுக்கட்டை போடுவது போல் பேசுவது,நம்பிக்கை அற்ற வார்த்தைகளை கொட்டுவது நம்மில் பலருக்கு கைவந்த கலை.அவருக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு தொடக்கத்திலே அவர் மன தைரியத்தை தகர்த்து விடும் முறையில் பேசுவது பலரின் நிலை. ஒருசிலரே அவர்களை நம்பிக்கை கொள்ளும் வகையில் கருத்துக்களை கூறுவார்கள்.தொடக்க நிலையில் சிலர் ,இதையா செய்யப்போறே ,இந்த துறையிலே பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் உள்ளனர். நீ என்னத்தை புதுசா செய்யப்போறே ,இதை விட்டு விட்டு வேறு வேலையைப் பார் என்று கூறுவதை நாம் பல சமயங்கில் பார்த்து இருக்கலாம். எதிலும் நாமும் முயன்றால் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை-அது தான் தன்னம்பிக்கை உணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம் பக்கம் தான்.


| Leave a Comment |