தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

ஆறு கற்பிக்கும் பாடம் - 5



ஐந்தாம் பாடம் தன்னலமற்ற பாங்கு! தன்னலமற்ற பாங்கினையும் பொதுவுடைமைக் கொள்கையையும் உலகுக்கு எடுத்தோதிய பெருமை என்றும் ஆற்றுக்குண்டு. மனிதனும் பிற உயிரினங்களும் உயிர்வாழ இன்றியமையாத நீரை நல்கியது ஆறுதான். மேலும், விவசாயம் செழித்து ஓங்கிட கரைதோறும் வண்டலைச் சேர்த்ததும் ஆறுதான். மனித இனம் தொடர்பு கொள்ள போக்குவரத்துச் சாலையாக அமைந்ததுவும் ஆறுதான். இப்படியாக, ஆறு எல்லா நிலையிலும் தன்னலம் மறந்து பொதுநலம் போற்றி வந்துள்ளமை நம்மை வியக்க வைப்பன. ஆனால், மனிதன் ஆறுகளைக் கொண்டானன்றி ஆறுகளின் அருங்குணத்தைக் கொண்டானில்லை! சுயநலத்தின் மொத்த உருவானான் மனிதன், அதற்கு எருவானது ஆறு.

                                                                                                                           .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |