தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

திடமாக அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம்.



மனக்குழப்பம் செயல் திறனைப் பாதிக்கும். ஆகவே வீண் சபலங்களுக்கு மனதினில் இடம் கொடுக்காமல், தெளிவான அடிப்படையில் திடமாக அடியெடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம்.

மன வலிமை உள்ளவர்கள் மரணத்தையும் வெல்ல முடியும். மரணத்தின் ஆக்கிரமிப்பை, தன்னம்பிக்கையினால் தள்ளிப்போட முடியும்.

முயற்சி

முயற்சி இவை கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும். முடியும் என்றால் முடிகிறது. தயங்;;கினால் சரிகிறது.

வாழ்க்;;கையில் வெற்றி தோல்விகளை எப்படி சந்திக்க வேண்டும் என்று அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சிந்தனையை சீர்படுத்தக்கூடிய குரு அல்லது ஆசிரியர்களே இன்றைய மாணவர்களுக்குத் தேவை. சிந்திப்பதே மூலதனம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் எத்தனை ஏற்ற தாழ்வுகள் வந்தாலும் சிந்தித்துக்கொண்டே இருப்பதுதான் எனது மூலதனம் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

ஆகவே, உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்;கள்.

நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே. வெற்றியின் முதல் இரகசியம் தன்னம்பிக்கையே.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.



| Leave a Comment |