தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும் , பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்




கண்ணனுக்கு இன்று பள்ளி விடுமுறை .தாமதமாகவே எழுந்தான் . மகன் எழுந்ததைப் பார்த்த பூங்கொடி ‘ கண்ணா எழுந்து விட்டாயா , பல் துலக்கி விட்டு வா’ பால் தருகிறேன் ”என்றாள்.

சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தவன் காலைக் கடன்களை துரிதமாக முடித்தான் .

அம்மா எடுத்து வைத்த பாலைக் குடித்தான் .

தொலைக்காட்சியைப் போட்டு மாற்றி..மாற்றி போட்டுப் பார்த்தவன் , எதுவும் பிடிக்காமல் எழுந்து பந்தை எடுத்து அடித்து விளையாடினான்.

‘குளித்து விட்டு வா கண்ணா சாப்பிடலாம்’, அப்பாவிற்கு அவசர வேலை என்று போய் விட்டார்கள் என்றாள் பூங்கொடி .


‘சரியம்மா’ என்றவன் குளிக்கச்சென்றான் .

அவன் வருவதற்குள் தோசை சுட ஆரம்பித்தாள் பூங்கொடி .

கண்ணன் வந்தவுடன் சாமியை கும்பிட்டுவிட்டு சாப்பிட வந்தான் .

இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள், சட்னி, வைக்கட்டுமா ? என்றாள் பூங்கொடி.


”போதும்” என்றவன் சாப்பிட்டு முடித்தான்.

வெளியில் இருந்து ‘பெல்’ அடிக்கும் சத்தம் கேட்டது .

கையைகழுவிவிட்டு வந்த கண்ணன் துண்டில் கையைத் துடைத்தபடி வாசலுக்கு வந்து கதவைத் திறந்தான் .

எதிர்த்த வீட்டு கோபி நின்று கொண்டு இருந்தான் .

‘கண்ணன் விளையாடப் போகலாமா’ என்றான் கிரிக்கெட் மட்டையுடன் …

இருவரும் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு போகப் போகிறார்கள்.,

எதிர்த்த…எதிர்த்த வீடு என்பதால் வீட்டிற்கு முன் உள்ள மரநிழலில் விளையாடுவார்கள்.

அன்றும் அப்படித்தான் விளையாடியபோது பக்கத்து வீட்டு சன்னல் அருகில் போய் விழுந்தது பந்து. அதைப் பார்த்த அந்த வீட்டு அம்மா சன்னல் உடைந்தது போல் கத்திக் கொண்டு வர….

பையன்கள் இருவரும் பயந்து ஓட நிறுத்தி வைத்து இருந்த வண்டி மேல் இடித்து கீழே விழுந்தான் கண்ணன் .

காலில் சிராய்வு ஏற்பட்டு விட , முட்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு எழுந்த கண்ணன் கண்ணில் நீர் வழிந்தது வலியால் .

அங்கு வந்த கோபியின் அம்மா ,சத்தம் கேட்டு கோபியின் முதுகில் ஒன்று வைத்தாள்.. காலையில் விளையாட வேண்டாம் என்று சொன்னால் கேட்டாத்தானே என்றவள் மீண்டும் முதுகில் ஒன்று வைத்து இழுத்துக் கொண்டு போனாள்.

‘முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும் , பிள்ளையை அடிச்சு வளர்க்கணும் ‘ இல்லை என்றால் இரண்டும் பயன்படாமல் போகும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட பூங்கொடி ,கண்ணனின் காயத்துக்கு மருந்து தடவினாள் .


| Leave a Comment |