வாழ்வதிலேயிருந்து பின் வாங்க முடியுமா ?
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு தோல்விகள் அடைந்தாலும் எவ்வளவு ஏமாற்றங்கள் ஏற்ப்பட்டாலும், எவ்வளவு துன்பங்கள் மற்றும் இறக்கங்கள சந்தித்தாலும் வாழ்வதிலேயிருந்து பின் வாங்க முடியுமா ?
அனுபவிக்கத்தான் வாழ்க்கை என்பது 100 % உண்மை. ஆனால் பலர் சுகத்தை அனுபவிப்பதற்கு பதிலாக கஷ்டத்தை அல்லவா அனுபவிக்கிறார்கள். அதிலேயிருந்து விடுபட வழியைத் தேடி அலைகிறார்கள். செல்லும் வழியெல்லாம் முட்பாதைகள். அதை கடப்பதற்கு அவன் மனம் தயாராக இருந்தாலும் அவன் உடம்பு அதை கடக்க மறுக்கிறது.
எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மனத்தை திடப்படுத்திக் கொண்டு அந்த கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து கடக்கிறான். அவனுக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் கடுகளவு நம்பிக்கை. அதாவது 'தன்னம்பிக்கையோடு செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றியை கொடுக்கும் ' என்ற பல சாதனையாளர்களின் வாக்கு என்றாவது ஒரு நாள் மெய்படும்' என்பதால் தன வாழ்க்கையினை நம்பிக்கையோடு தொடர்கிறான்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |