தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

விருப்பம் உள்ள துறையில் இறங்கினால் வெற்றி.




விருப்பம் உள்ள துறையில் இறங்கினால் வெற்றி பெற்றுவிட முடியும் என்பது பொதுவான நம்பிக்கை. தான் விரும்பும் துறையாக இருந்தாலும் அதில் தயக்கமில்லாமல் இறங்குவதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. நமக்கு விருப்பமான துறையை நெருங்கிப் பார்க்கிறபோது அஇலிருக்கிற நுணுக்கங்கள், வளர்ச்சிகள் அனைத்தும் நம்மை பிரமிக்க வைக்கும்.

முனைபுடன் ஈடுடத் தடங்குகிறவர்கள் முன்னேறுவதா பின்னேறுவதா என்று முடிவு செய்ய வேண்டிய இடம் இதுதான். இத்தனை உயர்ந்த விஷயங்கள் இருக்கிற துறையில் நாம் நுழைகிறோம் என்கிற பிரமிப்பு. பெருமித உணர்வை ஏற்படுத்தினால் அவர்கள் தொடர்ந்து அதே பாதையில் செல்கிறார்கள், வெல்கிறார்கள்.

“இந்தத்துறையில் நாமா?” என்கிற பிரமிப்பு பீதியாக மாறுகிற போது அவர்கள் தயங்கிப் பின்வாங்குகிறார்கள். “நம்மால் முடியாது” என்று விலகி விடுகிறார்கள்.

நாம் – ந்து கனவு – அதற்கான முயற்சி, இந்த மூன்று குறித்தும் ஏற்படுகிற தெளிவுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். தொடங்கும் வரை கனவு காணலாம். தொடங்கிவிட்டால் விருப்பு வெறுப்பில்லாமல் செயல்படவேண்டும். “வெற்றியைத் தொட்டுவிடப் போகிறோம்” என்கிற உறுதி உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். ரசனையோடும், படைப்பாற்றலோடும் பணிகளை அரங்கேற்ற வேண்டும். வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் பதட்டமில்லாமல் எதிர்கொள்ளப் பழக வேண்டும்.

இந்த அணுகுமுறை எந்தத் துறைக்கும் பொருந்தும். பந்தயக் குதிரையின் கால்களில் இருக்கும் அசுர பலமாய் செயலாற்றல், கடிவாளமாய் மன உறுதி, அதன் கம்பீரமான தோற்றமாய் தன்னம்பிக்கை இத்தனை அம்சங்களோடும் புழுதி பறக்கப் பயணம் தொடங்குங்கள்…

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |