தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

ஆறு கற்பிக்கும் பாடம் - 1




மனித வாழ்வோடு அதிக தொடர்பு கொண்டது ஆறு. மாந்த நாகரிகங்களே ஆற்றோரங்களில்தான் தொடங்கின என்பதை அறிய மட்டில் மேலும் இவ்வுண்மை புலனாகின்றது. இயற்கை அன்னையின் அருங்கொடைகளுள் ஒன்று ஆறு. ஆறு மனிதனுக்குப் புகட்டும் பாடங்கள் பல! வழங்கும் நன்மைகள் பல! மாந்த இனத்திற்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆறு. மனிதர்கள் நாம் அதன் மாணவர்கள். ஆறு கற்பிக்கும் பாடங்களைக் காண்போம்! எந்நிலை மாணாக்கன் நாம் என்று அதன்வழி அறிவோம். தலையா? இடையா? கடையா?

முதற்பாடம் உழைப்பு! வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமாயின் சக்கரத்தை ஓட்டுவிக்க வேண்டும். அதற்கு அடித்தளமாய் அமைவதுதான் உழைப்பு. ஆறு எந்நேரமும் ஓடிக் கொண்டே தான் இருக்கும். ஆறு இயங்காத நிலையில் இருக்காது. இயங்காது இருந்தால் அதன் பெயர் ஆறாக இருக்காது! அறுத்துக் கொண்டு ஓடுவதால்தானே மாந்தன் அதற்கு ஆறு எனப் பெயர் சூட்டினான். ஆகையால்தான் கவிஞர் மு.மேத்தா,

‘ஓடிக் கொண்டிருப்பதுதான் நதி

உலவிக் கொண்டிருப்பதுதான் காற்று

செயல்பட்டுக் கொண்டிருப்பவýதான் இளைஞன்’

என்றார். ஆக, மனிதன் எவ்வேளையும் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும்! இதை மனிதனுக்கு அனுதினமும் உணர்த்திக் கொண்டிருப்பது ஆறு.

                                                                                                       .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்




| Leave a Comment |