தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

ஆறு கற்பிக்கும் பாடம் - 2



இரண்டாம் பாடம் தன்னம்பிக்கை! தன்னம்பிக்கை இல்லா மனிதன் வாழ்வில் முன்னேற்றமடைவதென்பது குதிரைக்கொம்பே. ஆற்றைப் பாருங்கள். எத்தனை பெரிய தடைக்கல்லாக இருந்தாலும் அதனை மோதிச் சென்று தன் இலக்கை நோக்கிப் பயணிக்கும். செல்லும் வழி எங்கெங்கும் பாறைக்கற்கள் தடைக்கற்களாய் வீற்றிருப்பதால் ஆறு தனது ஓட்டத்தை நிறுத்திக் கொள்கிறதா என்ன? இல்லையே, தடையைக் கடந்து இன்னும் முனைப்போடு அல்லவா விரைகின்றது. இதுவன்றோ தன்னம்பிக்கை! கடக்க முடியாப் பாறைகள் என்றால் முட்டி மோதி அழிந்து போவதில்லை ஆறு. மாறாகத் தனியொரு வழி அமைத்துô பாறையை அரணாகவும் தனது கரையாகவும் அல்லவா வைத்துக் கொள்கின்றது.

                                                                                                                    .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்



| Leave a Comment |