தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

ஆறு கற்பிக்கும் பாடம் - 3




மூன்றாம் பாடம் குறிக்கோள்! குறிக்கோளில்லா ஆறு உலகில் எங்குமில்லை என்றே கூறலாம். ஆறுக்குப் பிறப்புண்டு; இறப்பில்லை ஆனால் இருப்புண்டு! மலைகளிலிருந்து பிறக்கும் ஆறு குறிக்கோளாகì கொள்வது கடலைச் சென்று சேர வேண்டியதைத்தான். எங்குச் சுற்றி ஓடினாலும், எத்துணைப் பள்ளத்தில் வீழ்ந்தாலும் மீண்டெழுந்து ஓடுவது தனது குறிக்கோளை அடையவே; கடலோடு கலக்கவே. ஆயிரமாயிரம் தடைகள் வரினும் அதனைக் கடந்து கடலை அடையாது ஆறு ஒருபோதும் களைத்ததில்லை; பயணத்தைப் பாதியிலேயே முடித்ததில்லை. உயிர்கள் ஆறு. இறைமை கடல். பிறவித்துன்பத்தை நீங்க வேண்டுமாயின் இறைவனடி சேர்தலே வழி. தடைகள் ஆயிரம் வரலாம், அவற்றைì கடக்க வேண்டுவது நமது கடமை. கடந்தால்தான் வரும் பெருமை.

                                                                                                           .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்



| Leave a Comment |