தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

சிறு ஒளி பிரகாசமாய் தெரிய தன்னம்பிக்கை வேர் ஆழமாய் ஊன்ற


இருண்ட மனம், தெரிந்த முகங்கள்
உதவ யாருமில்லை, ஒளி எங்கே? மூலையில் தெரிய
தட்டுத் தடுமாறி, பற்றுக் கம்பை பிடிக்கும் கொடியாய்
உருண்டு எழுந்து , நிமிர்ந்து நடக்கையில்
சிறு ஒளி பிரகாசமாய் தெரிய தன்னம்பிக்கை வேர்
ஆழமாய் ஊன்ற வெற்றி மலர்ந்தது.

தளராத முயற்சியும் பொறுமையும் தன்னம்பிக்கை ஏற்பட முதல் படி என்று சொன்னால் கூட வியப்பேதும் இல்லை.எதையும் இருந்த இடத்தில் இருந்தே பெற்று விடலாம் என்றால் அது சோம்பேறித்தனம் என்று கூட கூறலாம்.

நகரில் ஒரு மிகப்பெரிய பிரமுகர் இருந்தார் .பொதுவாக உதவி என்று யார் சென்றாலும் அவர் வெறும் கையுடன் அனுப்பியதாக தகவல் இல்லை.ஆனால் அவரை நேரில் சந்திப்பது அவ்வளவு எளிதில் முடிவதில்லை.ஒரு சமயம் இரண்டு பேர் அவரை வெவ்வேறு கால கட்டங்களில் சந்திக்க முயற்சி மேற்கொண்டனர்.முதலில் சென்றவர் பல முறை முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை .ஏதாவது காரணத்தால் இவர் எப்போது சென்றாலும் அவரை சந்திக்க முடியாத நிலையே தொடர்ந்தது.

இதை அறிந்த அவரது நண்பர்கள் சிலர் அவர் வேண்டும் என்றே உன்னை சந்திக்க வில்லை .அவரை சந்தித்து உதவி பெறுவது என்பது வீண் வேலை என்று அவரது நம்பிக்கையை தகர்த்து விட்டனர்.நண்பர்களின் போதனை பலித்தது.,அவரை சந்தித்தால் உதவி கிடைக்கும் என்று எண்ணியவர் ,இனி அவரைப்பார்த்து அவர் எங்கே நமக்கு உதவப் போகிறார் என்ற அவ நம்பிக்கை ஏற்பட்டவுடன் ,தானக அவரது நடை தளர்ந்தது ,நம்பிக்கை எனும் தீப ஒளி குறையத் தொடங்கியது.அதன் பின்னர் அவர் தனது முயற்சியில் இருந்து பின் வாங்கி விட்டார்.

அதே சமயத்தில் இன்னொருவர் அந்த பிரமுகரை சந்தித்து அவரிடம் உதவி பெற்று விடவேண்டும் என்று தீவிர எண்ணத்துடன் நம்பிக்கையுட அவரை தேடிச்சென்றார்.ஒவ்வொரு தடவையும் பிரமுகர் பல வேலையாக வெளியே சென்று விடுவார்.இவரால் சந்திக்க முடியவில்லை .ஒருமுறை இவர் போவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் அவர் அந்த இடத்தை விட்டு சென்றதாக தெரியவந்தது.இருந்தாலும் இவருக்கு மனஉறுதி குறையவில்லை.அவர் பெரிய பிரமுகர் அவருக்கு பல அலுவல்கள் இருக்கும் நம்மைவிட பல வேலைகள் அவருக்கு நிறைந்து இருக்கும் நமக்காக அவர் காத்திருக்க மாட்டார்.நாம் தான் அவரை காத்திருந்து எப்படியாவது சந்திக்க வேண்டும் .அதற்கு எத்தனை தடவை வந்தாலும் சரி ,அவரை சந்தித்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக தமது நம்பிக்கையில் சஞ்சலம் இன்றி காணப்பட்டார்.


ஒவ்வொரு முறையும் செல்லும் பொது அவரை முதலில் சந்திக்க சென்றபோது இருந்த ஆர்வத்துடனும் ,நம்பிக்கையுடனும் இருந்தார்.ஒரு நாள் அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.அவரை சந்தித்து அதற்கான நல்ல பலனை அவர் பெற்றுக்கொண்டார்.வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் தன்னம்பிக்கை தான் அதில் சோர்வு ஏற்பட்டால் எதிலும் வெற்றி பெற முடியாது.சிகரத்தின் உச்சியை எட்டவேண்டுமானால் கடினமான கற்களையும் ,முட்களையும் மிதித்து தான் செல்லவேண்டும் .அதற்கு மனத்தின் வலிமை மிகுந்த ஆயுதமாக தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.நாம் சிகரத்தை தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதையே லட்சியத்தை எளிதில் அட்டைய வைக்கும்.

முத்துக்குளிப்பவன் ஆழ் கடலில் மூச்சை அடக்கிக்கொண்டு செல்லவேண்டும்.அவ்வாறு செல்பவர்கள் சிறந்த பயிற்சி பெற்று இருப்பார்கள்.இருந்த போதிலும் அவர்கள் அசாத்தியமான தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.அதே போல் தான் கடலின் அலைகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களும் மிக தைரியமான தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.அதனால் தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் போராடி வெற்றி பெறுகிறார்கள்.


| Leave a Comment |